கூச்சமாகத்தான் இருக்கிறது. நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அது புத்தகக் காட்சியில் இந்தந்த அரங்குகளில் கிடைக்கிறது என்று நானே எழுத வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய, தமிழ்நாட்டில் வாசகர்களின் எண்ணிக்கையை காட்டிலும், எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே நானும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன், கொஞ்சம் வாங்கிப் படித்துவிடுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமும் இருப்பதை உணர்கிறேன். தவிர சென்ற ஆண்டு தமிழ் ஸ்டுடியோவின் புதிய பரிமாணமாக பேசாமொழி பதிப்பகத்தை […]
ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். “இசையால் வசமாக இதயமெது..?” இந்தப் பிரபலமான பாடலை அறியாத தமிழர் எவரும் இருக்க முடியாது. டி.எம்.எஸ் அவர்களின் இனிமையான குரலில் மயக்கும் பாடல் அது . இன்னிசையே, இறைவன் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம், நமது இதயம் இசைக்கு இசைவது தான் நமக்கு இறைவன் அளித்த பேரருள். மன ரணங்களுக்கும், மனத்தின் சுகங்களுக்கும் ஆண்டவன் அளித்த கொடை இசை. அந்த இசையை ரசித்து மகிழாதவர் எவரும் மனிதனாக வாழும் தகுதி அற்றவர் எனலாம். மனத்துக்குப் […]
ஜெயக்குமார் —————————– 2012 மத்தியில் ஜெயக்குமார், நீங்கள் ஈராக்கில் நமது கம்பெனியின் கிளை திறப்பது குறித்தான சர்வேக்காக ஈராக்கின் முக்கிய நகரங்களை குறிப்பாக எண்ணெய் வளமிக்க பிராந்தியங்களை சுற்றி வந்து கம்பெனியின் கிளை திறப்பது லாபகரமானதா என்ற அறிக்கையை சமர்பிக்கவேண்டும் என்ற உத்தரவை கேட்டதும் முதலில் மனதில் அப்படி ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, எனக்கு. பாடப்புத்தகத்தில் மட்டுமே படித்திருந்த யூப்ரடிஸ், டைக்ரிஸ் நதியினையும், காலத்தால் உறைந்த கட்டிடங்களையும், அலிபாபாவும், நாற்பது திருடர்களும் உலவிய தெருக்களையும் பார்க்கும் […]