பொம்மலாட்டம்

This entry is part 11 of 30 in the series 20 ஜனவரி 2013

கவிஞன் என்ற அடையாளத்திற்காக வளர்த்த குறுந்தாடி…….   பக்கத்திற்கு பக்கம் பதிய வைக்க அழகிய புகைப்படம்………   சுயமாய் அச்சடித்து தொகுப்பாய் கொடுக்க தேவையான பணம்…..   எல்லாவற்றையும் வசப்படுத்திய பின்பும் ஏனோ வசப்பட மறுக்கிறது கவிதை மட்டும்….!   மு.கோபி சரபோஜி.

சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4

This entry is part 10 of 30 in the series 20 ஜனவரி 2013

மன்னர் சுப்பபுத்தர் மகாராணி பமீதாவிடம் ” யசோதராவின் முகம் களையாகவே இல்லை. பார்ப்பதற்கு மிகவும் வருத்தமளிக்கிறது” என்றார். “அதெல்லாம் ஒன்றுமில்லை பதிதேவரே. பிள்ளைப் பேற்றுக்குப்பின் இருக்கும் இயல்பான சோர்வே. கைக்குழந்தைக்குப் பால் கொடுப்பதால் வழக்கமான ஆடை அணிகலன்களை அணிய இயலாது. ராகுலனுக்கு பெயர் சூட்டும் விழாவில் பாருங்கள். நம் மகள் பழைய பொலிவோடு வருவாள்” “இன்னும் இரண்டு நாட்களில் அந்த வைபவம் நடக்க இருக்கிறது. பல நாட்டு மன்னரும் அமைச்சர்களும் கூட வந்து விட்டார்கள். ஆனால் தன் […]

எலி

This entry is part 8 of 30 in the series 20 ஜனவரி 2013

எலி எண்ணிக்கையில் ஒன்றுதான் வீட்டில் இருக்கிறதா இல்லை இரண்டு மூன்று என ஆகி அதற்குமேலுமா என்னால் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை. எலிகளின் அந்த மூத்திர நாற்றம் அது அது அவர்கள் அனுபவித்தால் மட்டும் தான் தெரியும். வயிற்றைப்பிசைந்து குமட்டிக்கொண்டு வருகிற விஷயம்தான். இது படிக்கும் இந்நேரம் என்ன என்னவோ செய்து உங்களுக்கும் கூட குமட்டிக்கொண்டு வரலாம். வரத்தான் செய்யும். அமெரிக்காவில் ஒருவனுக்கு கண்வலி என்று செல்போனில் பேசி நம்மிடம் சொன்னால் போதும் நமக்கும் இங்கு கண் […]

மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8

This entry is part 7 of 30 in the series 20 ஜனவரி 2013

  சுய – நுகர்வின்  விசித்திரமானதோர் வடிவம்! யான் தவறிழைத்திருக்கக்கூடிய மற்றும்  ஏமாற்றப்பட்ட காலமும் இருப்பினும் ,  யான் தவறிழைத்தும், வஞ்சிக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதை உணராமலே உள்ளேன் என்ற வீணான எண்ணம் கொண்டோரைக் கண்டு எள்ளி நகையாடலாம் யான்.   பின்பற்றுதலை விளையாட்டாகக் கொண்டு  பின்தொடருவோரைப் பற்றி யான் என்ன கூற இயலும்?   உம் ஆடைகளில் தம் அழுக்கடைந்த கரங்களைத் துடைப்பவரே உம்முடைய அந்த ஆடையை எடுத்துக் கொள்ளட்டும். அவ்ருக்கு அது மீண்டும் தேவையாக இருக்கலாம்; […]

பிசாவும் தலாஷ் 2டும்

This entry is part 6 of 30 in the series 20 ஜனவரி 2013

  இரு வேறு மொழிகள்.  இரண்டும் திரைப்படங்கள். கதை கரு ஆவிகள் இருக்கிறதா இல்லையா என்பது.  எதேட்சையாக நான் அடுத்த அடுத்த நாளில் தமிழில் ‘பிசா’வும் ஹிந்தி மொழியில் ‘தலாஷ் 2’டும் பார்க்க நேர்ந்தது.  அதன் தாக்கம் தான் இந்தச் சிறு கட்டுரை.   உலகிலே எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன.  சிலவற்றை நம்ப முடியும். அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடியும். சிலவற்றை நம்பவே முடியாது. அது எப்படி நடந்திருக்கும், ஏன் நடந்தது, எதற்காக நடந்தது என்று அறிவுப்பூர்வமாக […]

நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . .

This entry is part 5 of 30 in the series 20 ஜனவரி 2013

          அர.வெங்கடாசலம்   இந்தமாதம் பதினைந்தாம் தேதி ஜான்பென்னி குய்க் என்ற ஆங்கிலேயே பொறியாளருக்கு முல்லைப்பெரியார் அனைக்கட்டில் தமிழக அரசு கட்டியுள்ள மணிமண்டபம் திறப்பு விழா கண்டது. 2011 டிசம்பர் மாதம் அப்போதைய மதுரை ஆட்சியர் சகாயம் தேனி மாவட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த அறுபத்து மூன்று வயது விவசாயி வி.மாதவன் என்பவர் எழுதிய பத்து பக்கங்கள் கொண்ட ஜான்பென்னி குய்க்கின் வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. அந்தச் செய்தி […]

பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..

This entry is part 4 of 30 in the series 20 ஜனவரி 2013

பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..    http://www.pesaamoli.com/ நண்பர்களே பேசாமொழி இதழ் இந்த மாதம் வீடு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. வீடு திரைப்படத்தின் வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் இந்த இதழ் முழுவதும் வீடு திரைப்படம் சார்ந்தக் கட்டுரைகள், மற்றும் பாலு மகேந்திராவின் மிக விரிவான நேர்காணலுடன் வெளிவந்துள்ளது. நண்பர்கள் அவசியம் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும். http://www.pesaamoli.com/ இந்த இதழில்:    வெங்கட் சாமிநாதன்   அம்ஷன் குமார்   தியோடர் பாஸ்கரன்   ராஜன் குறை […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’

This entry is part 3 of 30 in the series 20 ஜனவரி 2013

ஒரு கலந்துரையாடலின்போது ஒருத்தர் என்னிடம் கேட்டார்., “உங்க புத்தகங்களின் தலைப்புகள் ‘க’ எழுத்து வரிசையைக் கொண்டிருக்கிறதே உங்களுக்கு அப்படி ஒரு ‘சென்டிமென்ட் உண்டா?” என்று! பெயர்கள் சில வேளைகளில் இப்படித் தானாக வந்து அமைந்து கொள்கிறது எனபதுதான் சுவாரஸ்யம். இந்தக் கட்டுரைகளில் கற்பனை இல்லை, இவைகளில் சிலது மட்டும், பரிமளிக்கம் பண்ணுவதற்காக எழுதப் பட்டவைகளில் கொஞ்சம் ‘கதை’ உண்டு, மற்றபடி அனைத்தும் நடப்புத்தான். கட்டுரை என்றால் ஞாயப்படி ஒரு மாற்றமும் செய்யாம நூத்துக்கு நூறு – பெயர்கள் […]

வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)

This entry is part 26 of 30 in the series 20 ஜனவரி 2013

  (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட்  விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் அநேக கோலாகலப் பாட்டுகளைக் கேட்கிறேன். எந்திரத் துறைஞன் ஒவ்வொரு வனும் தனது தொழில் பற்றிப் பாடுகிறான், களிப்பும், கைப்பலம் அளிப்பதால். தச்சன் தன் தொழிலைப் பாடுவான் உத்தரமோ  மரப்பலகையோ ஒன்றை அளந்து, கொத்தன் தன் தொழிலைப் பாடுவான் துவங்கும் போதும் பணியை முடித்து விட்டுப் போகும் போதும் ! படகில் உள்ள தனக்குரிய பொருள் பற்றிப் படகோட்டி பாடுவான் நீராவிப் படகின் தளத்தி லிருந்து […]

தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு

This entry is part 2 of 30 in the series 20 ஜனவரி 2013

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை தமிழிலக்கிய மரபுகளுக்கும், நெறிகளுக்கும் தொடக்க மூலமாக அமைவது தொல்காப்பியம் ஆகும். இத்தொல்காப்பியத்தின் கருத்துகளை, கோட்பாடுகளை அறிவிக்கின்ற மூலங்களாக மூல நூல்களும், திறனாய்வு நூல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இணையப் பரவலால் தொல்காப்பியம் சார்ந்த கருத்துகள், மூலங்கள் இணையம் வழியாக  பரவி வருகின்றன. அவை பற்றிய தகவல்களையும் மதிப்பீடுகளையும் அளிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. தொல்காப்பிய பொருளதிகார நூற்பாக்களை, உரைகளுடன் படிக்க  வாய்ப்பாக தமிழ் […]