”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால் சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று தமிழகத்தில் இந்நிலை மாறி தமிழ்மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அப்படி அழிந்து கொண்டிருக்கின்ற தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற, வளர்க்க தொடங்கப்பட்ட பள்ளி தான் தாய்த்தமிழ்ப் பள்ளி. இப்பள்ளி இன்றளவும் தமிழின் இனிமையையும், செழுமையையும் மாறாமல் பாதுகாக்கின்றது. திருப்பூர் வள்ளலார் நகர், தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வாடகை இடத்தில், ஓலைக்குடிசையில் வெள்ளியங்காடு பாரதியார் நகரில் 1995 ஆம் ஆண்டு […]
கம்பன் உறவுகளே வணக்கம்! புதுக்கோட்டையில் இயங்கும் பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்தும் இலக்கியத் திருவிழாவில் என்னுடைய “ஏக்கம் நுாறு” “கனிவிருத்தம்” ஆகிய கவிதை நுால்களை இயக்குநா் திலகம் கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார் அழைப்பிதழ் இணைத்துள்ளேன். அன்புடன் கவிஞா் கி. பாரதிதாசன் தலைவர் கம்பன் கழகம் பிரான்சு
கோகிலத்தின் கருவிழிகள் என்னையே வைத்தவிழி வாங்காமல் பார்த்தது என்னை சற்று தடுமாறச் செய்தது! இது என்ன விந்தை! மணமேடையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் தாலியையும் ஏந்திய சில நிமிடங்களில் இந்த மணப்பெண் இப்படி என்னைப் பார்க்கிறாளே! கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இவ்வளவு துணிச்சல் கொண்டவளாக இருக்கிறாளே! ஒரு வேளை நான் அவளைப் பார்த்து புன்னகைத்துப் பேசியதை அவ்வாறு கூர்ந்து இரசிக்கிறாளா? மணமக்களை வாழ்த்திப் பேசும்போது அவர்களைப் பார்த்துதானே பேசவேண்டியுள்ளது? நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவளும் என்னையே ஊடுறுவிதான் பார்த்துக்கொண்டிருந்தாள். […]
“ நெசவாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு இல்லை. சமூக பாதுகாப்பு பெற அவர்கள் போராட வேண்டும் “ ” காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு போதிய சமூகப் பாதுகாப்பு இல்லை. அதைப் பெற அவர்கள் போராட வேண்டும். “ என்று திருப்பூரில் நடந்த நாவல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள் தெரிவித்தனர். திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம் “ என்ற […]
மலேசியாவிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த அத்தனை நாளிதழ்களிலும் அன்றைய தினத்தில் ஜூன்லாவ் தான் தலைப்புச் செய்தியாக இருந்தாள். அவள் சீனமொழியான மாண்ட்ரீனில் எழுதியிருந்த தினக்குறிப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் நாளிதழ்களிலும் வெளியாகியிருந்ததை நானும் வாசித்திருந்தேன். ஒரு பெண்ணின் மிகச் சாதாரணமான நாட்குறிப்புகள் அவளின் அகால மரணத்தின் பொருட்டு, ஒரு வசீகரத்தையும் சோபையையும் பெற்று, அவளே அன்றைக்கு எல்லோரின் பேசுபொருளாகி இருந்தாள். ஜூன்லாவ் இறந்து போன தினத்தின் இரவில் அவளை நான் சந்தித்திருந்தேன். அந்த இரவின் வசீகரத்தையும் அதனுள் […]
இடம்: ஆனந்த பவன் நேரம்: காலை மணி ஏழரை. உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, மாதவன், உமாசங்கர், ராமையா மற்றும் ரங்கையர், பாபா. (சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருக்கிறான். எதிரில் சுப்பண்ணா நின்று, பஞ்சாயத்து யூனியன் ஆபீஸுக்கு ஒரு பார்ட்டிக்காக ஒப்புதல் பெற்று வந்தவர், சொல்லி விட்டுப் போனதை அவனிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்) சுப்பண்ணா: என்ன ராஜா சொல்றது காதில வாங்கிண்டு இருக்கியா, சிவனேண்ணு கேட்டுண்டு இருக்கியா? […]
மாம்பலம் பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் காவலர் குடியிருப்பின் ஓரம், கொஞ்ச தூரம் நடந்தீர்களானால், உங்களுக்கு குப்பண்ணா உணவுக்கூடத்தைப் பார்க்காமல் இருக்கமுடியாது. இப்போது பெரும் வியாபார மையமாக மாறி விட்ட தியாகராய நகரின் பூர்வாசிரமப் பெயர்தான் மாம்பலம். அன்று காலாற கைவீசி நடக்கலாம். இன்று அடிப்பிரதட்சணம் கூட பிரம்மப்பிரயத்தனம்தான். குப்பண்ணா தன் பனிரெண்டாவது வயதில் மதராசுக்கு, அதாவது இன்றைய சென்னைக்கு வந்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அன்றைக்கு ஆந்திராவுடன் இணைத்து தமிழ்நாடு, சென்னை மாகாணம் என்று தான் […]
குடல் புண் அழற்சி நோய் என்பது வயிற்றுப் போக்கு தொடர்புடையது. ஒரு சிலருக்கு இது ஏற்பட்டால் வெறும் வயிற்றுப்போக்குதான் என்று எண்ணி சிகிச்சை மேற்கொள்வது தவறாகும். சாதாரண ஓரிரு நாட்கள் உண்டாகும் வயிற்றுப்போக்கு போன்று இல்லாமல் இது முற்றிலும் மாறுபட்ட நோயாகும். குடல் அழற்சி நோய் அல்லது அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் ( Ulcerative Colitits ) என்பது சீதமும் இரத்தமும் கலந்த மலம் கழிப்பதும் அடி வயிற்றில் வலியும் உண்டாகக் கூடிய குடல் அழற்சி […]
மு இராமனாதன் (செப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் பேசியது) அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். இன்று வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வுக்குள் சென்று வரப்போகிறோம். அந்தத் தெருவில் வசிக்கும் எளிய மனிதர்களைச் சந்திக்கப் போகிறோம். அதற்கு முன்பாக வண்ணநிலவனோடு கை குலுக்கிக் கொள்வோம். வண்ணநிலவனை ஜனரஞ்சக வாசகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நல்ல படைப்புகளைத் தேடிப் படிக்கிற வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். […]