பூரண சுதந்திரம் யாருக்கு ?

This entry is part 20 of 28 in the series 27 ஜனவரி 2013

      சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் கண்ணிய மானிடருக்கு ! கட்டவிழ்த் தோடும் சுதந்திரம், காட்டு மிராண்டி களுக்கு ! ராவணன் சீதையைத் தூக்கி ரதத்தில் போவான் ! கண்ணன் குளிக்கும் மாதர் புடவை களவாடு வான் ! பூரண சுதந்திரம் […]

வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)

This entry is part 19 of 28 in the series 27 ஜனவரி 2013

  (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே […]

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்

This entry is part 18 of 28 in the series 27 ஜனவரி 2013

காடு இடுங்கியதாய் எறும்புகள் கூடியிருக்கும். கலங்கி அது விசும்புவதாய்ப் புட்கள் கீச்சிடும். காட்டின் எந்த மரத்திலிருந்தும் உதிரா ஒரு ’வண்ணப்பூ’ உதிர்ந்திருக்கும். பறந்து பறந்து சென்ற அதன் பின்னால் காடு பலகாலம் திரிந்து திரிந்து போயிருக்கும். இனி காட்டின் அழகை வெளியின் வெள்ளைச் சீலையில் யார் பறந்து வரைவது? பறந்து போன ’உயிர்ச் சிட்டு’ ’கூடு’ திரும்பாதென்றால் காடு திரும்புமா? உயிர்ப்பிப்பது போல் எறும்புகள் ’வண்ணப்பூவின்’ உடலை வளைய வளைய வரும். சின்ன உடலின் உயிர்ச்சாவின் ’சுமை’ […]

விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்

This entry is part 17 of 28 in the series 27 ஜனவரி 2013

ஜனவரி 26, 2013 குடியரசு தினத்ததை முன்னிட்டு மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா   இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப் பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின் றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை […]

விற்பனைக்குப் பேய்

This entry is part 16 of 28 in the series 27 ஜனவரி 2013

சுங் நல்ல வியாபாரி.  திறமைசாலி.  கிராமத்தில் பலசரக்குக் கடை வைத்திருந்தான்.  ஒரு கோடை காலம் எல்லோரையும் வருத்தியது.  வெப்பம் அதிகரித்து, பயிர்கள் வாடின. மக்களை வாட்டியது.  சுங்கின் கடை நட்டத்தில் இருந்தது.  காய்கறிகள் விற்க முடியவில்லை. உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை.  கிராமத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக, குடும்பம் குடும்பமாக ஊரை விட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.  பெரிய நகரங்களில் வேலை செய்யும் ஆசையில் நகரை நோக்கிச் சென்றனர்.  ஒரு நாள் சுங்கும் ஊரை விட்டுச் செல்ல முடிவு செய்தான். ஒரு […]

பள்ளியெழுச்சி

This entry is part 15 of 28 in the series 27 ஜனவரி 2013

  நந்தகோபாலன் மகள் நந்தாவே ! மார்கழி போய் தையும் வந்தாயிற்று ! மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து திங்களும் விடிந்துவிட்டது ! பள்ளி செல்லவேண்டாமா ? எழுந்திரு ! இந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றும் நம் அரண்மனையல்ல ! நம் ஃப்ளாட்டோ நடுத்தளத்தில் ஒரு 2 BKH ! உன் அப்பன் எழுமுன் நீ விழிக்காவிட்டால் அவன் இடும் சிங்க நாதம் இந்த அப்பார்ட்மெண்டையே கிடுகிடுக்க வைக்கும் ! இன்னும் அரைமணியில் பள்ளி வண்டியும் வந்துவிடும் ! […]

பிரபஞ்சத்தி​ன் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலி​ருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்

This entry is part 14 of 28 in the series 27 ஜனவரி 2013

  (கட்டுரை: 94) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   விண்மீனுக்கும் மானிடம் போல் பிறப்பு, இறப்பென்னும் தலை விதி உண்டு ! வாயுத் திரட்சி ஈர்ப்பு சுழற்சியால் கோளாகி உஷ்ணம் மிஞ்சி அணுக்கருப் பிணைப்பில் காலக்ஸி விண்மீனாகி மின்னொளி வீசும் ! எரிவாயு வற்றி கரிவாயு முற்றி முதுமையில் மங்கி மூப்படைந்து நிபுளா வாகும்! வெள்ளைக் குள்ளியாகி அது செம்பூத மாய் மாறி சிதைந்து மடியும் முடிவில் சூப்பர் நோவா வெடிப்பாகி ! […]

அக்னிப்பிரவேசம்-20

This entry is part 12 of 28 in the series 27 ஜனவரி 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “உன் மனதில் என்ன இருக்கிறது என்று என்னால் ஊகித்துக் கொள்ள முடிகிறது சாஹிதி. உனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அப்படித்தானே?” என்றான் பரமஹம்சா. அவள் பேசவில்லை. கடந்த சில நாட்களாய் அவன் இதே வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தான். திரும்பத் திரும்ப “உனக்கு விருப்பம் இல்லை போல் தோன்றுகிறது. அப்படித்தானே” என்று கேட்டுக்கொண்டே இருந்தான். உண்மையில் அது அவன் மனதில் இருக்கும் எண்ணம் போலவே […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3

This entry is part 10 of 28 in the series 27 ஜனவரி 2013

  மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் […]

வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்

This entry is part 9 of 28 in the series 27 ஜனவரி 2013

  தேமொழி ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987), என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist), உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தவர்.  அதன் பயனாக உலகில் உள்ள புராணக் கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் […]