சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு

This entry is part 8 of 28 in the series 27 ஜனவரி 2013

நான் கும்பகோணம் பாணாதுரை ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது தான் (1947-49) செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மணல் வீடு என் கையில் அகப்பட்டது. செல்லப்பா என்ற பெயரும் எனக்கு அதற்கு முன் அறிமுகம் இல்லை. அதில் சிறுகதைகள் உண்டு படிக்க வேண்டும் என்றும் அதை நான் கையிலெடுக்கவில்லை. எதாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தால் படிக்கத் தொடங்கிவிடும் ஆர்வமும் சுபாவமும் ஐந்தாறு வருடங்களாகவே இருந்து வந்தது. அனேகமாக அது தான் நான் படிக்கும் முதல் சிறு கதைத் […]

கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்

This entry is part 7 of 28 in the series 27 ஜனவரி 2013

  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள் அனைத்தும் மக்களின் வாழ்வியலைக் கூறும் இலக்கியங்களாக மட்டுமல்லாது அறநெறி புகட்டும் அறவிலக்கியங்களாகவும் திகழ்கின்றன. அதனால்தான் அவை இன்றும் வாழுகின்ற இலக்கியங்களாக மிளிர்கின்றன. இச்சங்க இலக்கியங்களுள் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்று கலித்தொகை அனைவராலும் போற்றப்படுகின்றது. இக்கலித்தொகை அக இலக்கியமாக இருந்தாலும் இதில் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் அறங்கள் புலவர்களால் மொழியப்பட்டுள்ளன. மனித வாழ்வில் முரண்பாடுகள் தோன்றியபோது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் அறக்கருத்துக்களைப் […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’

This entry is part 5 of 28 in the series 27 ஜனவரி 2013

சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், ‘இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது’ என்று தேடிப் போய்க்கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து, ‘இவனும் ஏதோ சொல்லுகிறானே’ என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுப்போயிருக்கிறது எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள் தான். மனிதர்களுக்கு அன்பு எனகிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக் கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதுக்கும் ஏதாவது இருந்து கொண்டே தான் […]

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5

This entry is part 4 of 28 in the series 27 ஜனவரி 2013

யசோதரா நெற்றியின் மீது சிறிய ஈரத்துணி மடித்துப் போடப் பட்டிருந்த்தது. அது காய்ந்த உடன் வேறு ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண். ராணி பமீதா தம் நாட்டுக்குக் கிளம்பும் முன் யசோதராவைக் காண வந்தார். இரண்டு மூன்று நாட்களாகவே யசோதரா விருந்தினர் மாளிகைக்கு வரவில்லை. ராகுலனின் பெயர் சூட்டும் விழாவிலும் யசோதரா மிகவும் வாடிய முகத்துடனேயே இருந்தாள். இரவு பகல் எந்நேரமும் அழுது யசோதராவுக்கு ஜுரம் கண்டது. பால் கசந்ததால் ராகுலன் தாயிடம் பால் குடிக்கவில்லை. […]

சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்

This entry is part 3 of 28 in the series 27 ஜனவரி 2013

  1960 களில் என் ஆறாம் வகுப்பு நாட்களில்தான் நடந்தது என் முதல் நட்பும் முதல் பிரிவும். உடம்பெல்லாம் பூக்கள் பூக்கும் உணர்வு ஞாயிற்றுக் கிழமைகளில்தான். அந்த வயதில் நான் ஞாயிற்றுக் கிழமையையே வெறுத்தேன். என் நண்பன் உமாசங்கரை அந்த ஒரு நாள் பார்க்கமுடியாதல்லவா? அழகான பூப்போட்ட கண்ணாடிப் பாத்திரத்தை பொட்டென்று போட்டுடைத்தது போல் உமா சொன்னான். அவன் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி விட்டதாம். நாளையே எல்லாரும் மெட்ராஸ் போகிறார்களாம். என்னை ஓர் இருள் கவ்வியது. அவன் […]

பறக்காத பறவைகள்- சிறுகதை

This entry is part 2 of 28 in the series 27 ஜனவரி 2013

  அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் ஐந்து பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றான் சேகர். மனைவியைப் படுக்கையில் காணவில்லை. குசினிக்குள் சத்தம் கேட்கின்றது. மறு படுக்கையில் பெண்குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில். ‘அப்பா! பறக்காத பறவைகள் என்று இந்த உலகத்தில் ஏதாவது இருக்கின்றதா?’ நேற்றிரவு மகள் அவனைக் கேட்டிருந்தாள். நாலாம் வகுப்புப் படிக்கின்றாள். படிப்பிலே படு சுட்டி. ‘இன்ரநெற்’றில் பார்த்துச் சொல்வதாக சொல்லியிருந்தான். ஆனால் மறந்து போய் விட்டான். மனைவி தேநீரை நீட்டுகின்றாள். […]

மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)

This entry is part 1 of 28 in the series 27 ஜனவரி 2013

  வாழ்க்கை ஓர் ஊர்க்கோலம். பாதத்தின் அந்த மெத்தனம் அதை வெகு துரிதமாகக் கண்டுணர்ந்ததால் அவன் வெளியேறுகிறான். மேலும் பாதத்தின் அந்த துரிதம் அதை மிகத் தாமதமாகக் கண்டுணர்ந்ததால் அவனும்கூட வெளியேறுகிறான்.   பாபகம் என்ற அந்த ஒன்று உள்ளதெனில் நம்மில் சிலர்  நம் முன்னோர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அதைச் செய்கிறோம்; மேலும் நம்மில் சிலர் நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக, ஆளுமையுடன்  அதைச் செய்கிறோம்.   உண்மையில் நல்லவன் என்பவன் தீயவர்களாகக் கருதப்படும் அனைவருடனும் இருக்கும் அந்த […]

இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்

This entry is part 6 of 28 in the series 27 ஜனவரி 2013

சில வாரங்கள் முன்பு உன்னை போல் ஒருவன்-முசுலிம்களுக்கு எதிரான படம் இல்லை என்ற நான்கு பகுதிக் கட்டுரையை இங்கு வெளியிட்டேன். அதில், விஸ்வரூபம் படத்திலும் இது போன்ற சர்ச்சைகள் உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது எதிர் பார்த்ததை போலவே, மிக மிகத் தீவிரமான ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் வியப்புக்கு இடம் தரும் ஒரு நிகழ்வு என்னவென்றால், மத்திய தணிக்கைத் துறையால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு சட்டவிரோதமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இதற்குப் […]