மகாத்மா காந்தியின் மரணம்

This entry is part 19 of 19 in the series 31 ஜனவரி 2016

  [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14 பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! […]

தொடுவானம் 105. குற்ற உணர்வு

This entry is part 3 of 19 in the series 31 ஜனவரி 2016

இரண்டாம் ஆண்டு பிரேதங்களுடனும், தவளைகளுடனும், மனித எலும்புகளுடனும், இரசாயனத்தோடும் அன்றாடம் புதியவை கற்பதிலும் வேகமாக ஓடியது. நாள் முழுதும் படிப்பில் மூழ்கியதால் நாட்கள் போனதே தெரியவில்லை! வகுப்பிலும் அறையிலும் விடுதி உணவகத்திலும் அன்றைய உடற்கூறு, உடலியல் பற்றிதான் பேசிகொள்வோம். வேறு எதிலும் அக்கறையற்ற விந்தை மனிதர்கள்போல்தான் காணப்பட்டோம். அந்தச் சூழலிலிருந்து விடுபட நானும் சம்ருதியும் அந்தி சாயும் வேளையில் ஆரணி நெடுஞ்சாலையில் வெகுதூரம் பேசிக்கொண்டே நடந்து செல்வோம். திரும்பி வரும்போது பாகாயம் முனையில் தேநீர் கடையில் அமர்ந்து […]

அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்

This entry is part 9 of 19 in the series 31 ஜனவரி 2016

ஹஸீனா அப்துல் பாசித் எங்கும் எதிலும் எப்போதும் அவசரம், சக்கரம் கட்டி சுழன்றிடும் நிமிடங்களோடு நம்மவா்கள் வரும்புவதெல்லலாம் இரண்டே நிமிடத்தில் தயாராகிடும் உணவையும், இரண்டு வாரங்களில் சிகப்பழகு பெற்றுத்தந்திடும் முகப்புச்சு களிம்புகளையும் தான். இளைய தலைமுறையின் இத்தகைய அவசரமான தேடல்களால் நாம் அடைந்தது  என்ன? அல்லது சில வினாடி தாமதங்களால் இழக்க நேர்வது தான் என்ன? மக்களை ஏமாளிகளாகவும், சோம்பேறிகளாகவும், இறுதியில் நோயாளிகளாகவும் மாற்றிடும் இதுபோன்ற பலவிதமான தயாரிப்புகளுக்கான விளம்பரங்களையும் ஊடகங்கள் சலிக்காமல் வெகு முனைப்போடு ஒலிபரப்பிக்கொண்டுதானிருக்கின்றன. […]

புழுக்களும் மனிதர்களும்

This entry is part 2 of 19 in the series 31 ஜனவரி 2016

  காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட‌ மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் அவர் ரத்தமும் வேர்வையும் தான். சுதந்திரத்தை வாங்க‌ அடிமைத்தனத்தை பண்டமாற்றம் செய்யச்சொன்னார். அப்படி மாற்றப்பட்டதை விடவும் மாட்டிக்கிடந்ததே நமக்கு பரம சுகம். கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் புரிவதன் உருவகமே அந்த அண்ணல்! உருவமே மூளியாய் நின்றவர்களுக்கு கத்தியும் புரியவில்லை ரத்தமும் புரியவில்லை. அதனால் நம் ரத்தமே நமக்கு தர்பூஸ் ஜூஸ். நம் அன்னையர்களே […]

அழகுநிலாவின் “ஆறஞ்சு”

This entry is part 1 of 19 in the series 31 ஜனவரி 2016

  மண் வாசம் தேடும் வலசைப் பறவையாய் தன் சிறகை விரித்திருக்கும் அழகுநிலாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு “ஆறஞ்சு”. 14 கதைகள் கொண்ட இத் தொகுப்பில் உள்ள கதைகளில் சிலவற்றை முன்னரே வாசித்திருந்த போதும் தொகுப்பாக வாசிக்கையில் அது இன்னும் எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது. சிங்கப்பூரின் இலக்கிய அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் படைப்புகள் சிங்கப்பூர் சூழலைக் களமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை அறிவிக்கப்படாத விதியாகவே இருக்கும். அந்த விதிகளை அனாயாசமாக சிங்கப்பூரில் இருக்கும் சில இடங்களின் […]

பி​ரெ​ன்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்

This entry is part 4 of 19 in the series 31 ஜனவரி 2016

  [Eiffel Tower in Paris (1887-1889)] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ஓங்கி உயர்ந்த உலோகக் கோபுரம், பிரென்ச் புரட்சி வெற்றி  நினை வூட்டும்! தொழிற்புரட்சி காலத்தின் நூதனக் கோபுரம், பொறியியல் சாதனை நுணுக்கம் காட்டும்!   முன்னுரை: நவீன உலகத்தின் பொறிநுணுக்க அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, பிரான்சின் ஐஃபெல் கோபுரம்! முடிசூடிய மன்னர் ஆட்சியைக் கவிழ்த்தி, 1789 ஆம் ஆண்டு குடியரசை முதன்முதல் நிலைநாட்டிய பிரென்ச் புரட்சி வெற்றியைக் கொண்டாடும் […]

திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடு

This entry is part 5 of 19 in the series 31 ஜனவரி 2016

கனவு இலக்கிய வட்டத்தின் ஜனவரி மாதக்கூட்டம் வியாழன் மாலை திருப்பூர் பாண்டியன் நகர்  அம்மா உணவகம் அருகிலான சக்தி பில்டிங்கில் நடைபெற்றது  கவிதை ஜோதி தலைமை தாங்கினார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்  எழுத்தாளர்களின்  இவ்வாண்டுத் தொகுப்பு           “ டாலர் நகரம்  “ நூலை வெளியீட கலாமணி கணேசன் ( தலைவர், சக்தி மகளிர் அறக்கட்டளை ) பெற்றுக்கொண்டார். நாவலாசிரியர் செந்தமிழ்வாணன், பேச்சாளர் பவானி வேலுச்சாமி, பட்டு நடராசு, விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.   நூலை […]

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்

This entry is part 6 of 19 in the series 31 ஜனவரி 2016

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம் கம்பன் அடிசூடி தம்பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைப் பொழிவாக நடைபெற உள்ளது. புதிய தலைப்பு புதிய துறை. திருமிகு அரிமழம் பத்மநாபன் (இசைவாணர்) அவர்கள் கம்பனில் இசைத்தமிழ் என்ற பொருளில் இசை உரை ஆற்ற உள்ளார்கள் . இசையோடு இயலும் நாடகமும் ஆக பொழியும் இப்பொழிவிற்கு அனைவரும் வருக. நாள் – 6-2-16 சனிக்கிழமை இடம்-கிருஷ்ணா திருமணமண்டபம் காரைக்குடி . நேரம் சரியாக […]

இரு கவிதைகள்

This entry is part 7 of 19 in the series 31 ஜனவரி 2016

  வழியில் போகிறவனும் வழிப்போக்கனும்     வழியில் போகிற உனக்கு பாதை குறுகியது. உன் பார்வையைப் போல . போவதும் ஒரு சந்திலிருந்து இன்னொன்றுக்கு . குறுகிய வட்டம் செக்கு மாட்டுச் சுழல் . திராணியற்ற கால்கள் நடையின் அனுபவம் உணர்ந்திறாதவை .   உன் திறத்தால் (திறத்தின்மையால் ? அளக்க முயலாதே வழிப் போக்கனை . ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு தேடலில் முழுமை காணும் கால்கள் – அவை அவன் […]

திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா

This entry is part 8 of 19 in the series 31 ஜனவரி 2016

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்                   மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்                   ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்   இது திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் ஆகும். இப்பாசுரத்திற்குப் பூர்வாச்சாரியார்கள் மிகச்சிறப்பான அவதாரிகை அருளியிருக்கிறார்கள். கண்ணன் இச்சிறுமிகளிடம் பேசுகிறானாம். ”சிறுமிகளே! வியாசர் ’சாரீரகமீமாம்ஸை’ என்று பெரிய […]