அந்நியத்தின் உச்சம்

This entry is part 11 of 17 in the series 12 ஜூலை 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அவகாசம் கேட்கிறாய் கடந்த அத்தனை வருட அவகாசம் போதாதா? நின்று நிதானித்துப் பின் யோசித்தேன் மூளையைக் கசக்கியதில் உண்மை புலப்பட்டது. நீ அந்நியன் ! யாரோ ஒருவன் உன்னிடத்தில் என்னவனை நாடுவது பைத்தியத்தின் உச்சம் என்பது ! உறவிருக்கிறது உரிமையும் நிலைக்கிறது நீயோ அந்நியனாய் முன் நிற்கிறாய் ! காத்திருப்பின் கணங்கள் பயனற்று உதிர்ந்து போவதைக் கண்டது மனக் கண் ! நலமா என்று வினவ நாள் நட்சத்திரம் பார்க்க அவகாசம் தேவைப் படுமோ […]

பிரித்தறியாமை

This entry is part 12 of 17 in the series 12 ஜூலை 2015

  சத்யானந்தன்   எந்த ஊர்ச் செங்கற் சூளைக் கல் எந்தக் கட்டிடத்தில் எந்தச் சுவருள் ஐக்கியமானது?   கடற்பரப்பில் அன்று புள்ளியாய்த் தெரிந்த அதே கட்டுமரமா இன்று கரையேறிக் கிடக்கிறது?   வாகன நெரிசலில் மருத்துவ விடுதியில் உணவகத்தில் ரயில் நிலையத்தில் காந்திருந்த வரிசைகளுக்குள் என்ன வித்தியாசம்?   ராட்சத வணிக வளாகத்தில் எதிர் எதிர்ப்பக்கம் நகரும் படிக்கட்டுகளில் மேற்தளம் செல்பவன் கீழிறங்கும் என்னைப் பார்த்தா கையசைத்தான்? நான் என்னருகில் இருந்தவர் இருவருமே பதிலளித்தோம்

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4

This entry is part 13 of 17 in the series 12 ஜூலை 2015

என் செல்வராஜ்   இதுவரை வெளிவந்துள்ள பல சிறுகதைத் தொகுப்புக்களை பார்த்தோம். ஈழத்து சிறுகதைகளில் சிலவற்றை  பார்த்தோம். இன்னும் சில முக்கியமான தொகுப்புக்கள் உள்ளன.அவற்றை பார்க்கலாம். ஈழத்தில் வெளிவந்த சிலதொகுப்புகள்  பற்றியும், சா கந்தசாமி தொகுத்த அயலகத் தமிழ் இலக்கியம் மாலன் தொகுத்த உலகத்தமிழரின் கதைகளைக் கொண்ட கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் என்ற தொகுப்பையும், செங்கை ஆழியான் தொகுத்த முற்போக்கு காலகட்டத்துச் சிறுகதைகள்,ஈழத்து முன்னோடி சிறுகதைகள்  ஆகிய தொகுப்புகளையும், மலேசிய கதைகளைத் தொகுத்த மாத்தளை சோமுவின் […]

கதிர்த்தேய்வு அளப்பாடு முறையில் முந்தைய பூகாந்தத் துருவத் திசை மாற்றக் காலக் கணிப்பு.

This entry is part 14 of 17 in the series 12 ஜூலை 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் காந்த துருவங்கள் திரும்பத் திசைமாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவ மாகும் ! பூமியின் சுழற்சி நின்று, எதிர்த்  திசையில் மீண்டும் ஓடும் ! பரிதியின்  உதயம் அப்போது கிழக்கி லிருந்து மேற்கு ! உயிரினம்,  மானிடம்  பாதிப்பாகும். மின்காந்த இயக்கங்கள் பூமியில் தன்னியல் மாறும். சூழ்வெளி மண்டலம் முறிந்து பாழ்வெளி ஆகுமோ ? நீர்வள மண்டலம் ஆவியாய் மாறி நிலம் பாலை ஆகுமா […]

தைராய்டு சுரப்பி குறைபாடு

This entry is part 15 of 17 in the series 12 ஜூலை 2015

 டாக்டர் ஜி. ஜான்சன்           தைராய்டு சுரப்பி தொண்டையின் முன்பக்கம் இரண்டுபுறத்திலும் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. சாதாரணமாக அதைக் காண இயலாது. அனால் வீக்கம் உண்டானால் தொண்டையும் முன்பக்கம் கட்டி போன்று தோன்றும். இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளன. இவை குறைவுபட்டலோ அதிகம் கூடிவிட்டாலோ பல்வேறு மாற்றங்கள் தோன்றுகின்றன. தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன் சுரக்காத காரணத்தால் உண்டாகும்  குறைபாட்டை ” ஹைப்போதைராய்டு ” […]

லீலாதிலகம் – அறிமுகம்

This entry is part 16 of 17 in the series 12 ஜூலை 2015

அ.சத்பதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்- 613010 கைப்பேசி: 9865030071 மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான லீலாதிலகம் வட மொழியில் எழுதப்பட்ட ஒரு மணிப்பிரவாள இலக்கணமாகும். இந்நூல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். இது மணிப்பிரவாளத்திற்குரிய இலக்கணம், நாட்டுமொழியில் பாட்டு எனப்படும் இலக்கிய வகைக்கு வகுக்கப்பட்ட இலக்கணம் ஆகிய இரண்டிற்கும் இலக்கணம் கூறும் வகையில் லீலா திலகம் எழுதப்பட்டது. மலையாளத்தில் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப் பற்றி […]

கடைசிப் பகுதி – தெருக்கூத்து

This entry is part 17 of 17 in the series 12 ஜூலை 2015

  இத்தகைய உயிரோட்டமுள்ள, தனித்தன்மையுடைய  ஒரு நாடக மரபு  கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டுட்ள்ளது ஒரு துரதிருஷ்டவசமான விஷயம். உண்மையில் அனைத்து நாட்டார் கலைகளுக்கும் இதே கதிதான், அவற்றில் பலவும் மறக்கப்படும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தெருக்கூத்து போன்ற சில ஆங்காங்கே சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கின்றன. அவை கலை வெளிப்பாடு களாக, நாடகம் அல்லது நடன வடிவம் என்று கருதப்படுவதினால் அல்ல, சடங்குகளாக அவை பிழைத்திருக்கின்றன. இந்த வடிவங்கள் அவர்களுடைய இனத்தில்/ சமூகத்தில் அவ்வூர் தெய்வங்களுக்கான சடங்குகளுடன் […]