வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -10 மூன்று அங்க நாடகம்

This entry is part 11 of 18 in the series 14 ஜூலை 2013

    ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் […]

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28

This entry is part 9 of 18 in the series 14 ஜூலை 2013

சரித்திர நாவல் பலமுறை அந்த இளைஞன் புத்தரின் குடிலுக்குள் எட்டிப் பார்த்துப் பின்னர் திரும்ப வந்து வாயிலில் உள்ள ஒரு கல்லின் மீது அமர்ந்து கொண்டான். ஏன் வந்தோம் என்ற ஒரு பரிதவிப்பு அவனிடம் தெரிந்தது. எப்படி இந்த புத்தரால் இப்படி மணிக் கணக்கில் தியானத்தில் அமர முடிகிறது? புத்தருக்காக அவருடைய சீடர்கள் யாருமே காத்திருக்காமல் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருப்பது வியப்பாக இருந்தது. எவ்வளவு நேரம் காத்திருப்பது? விசித்திரமான இந்த சாமியார் கூட்டத்தைக் காண வேண்டும் என்று […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25

This entry is part 8 of 18 in the series 14 ஜூலை 2013

  (Song of Myself) வாழ்வின் அர்த்தம் என்ன ?    (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      இதுதான் அந்த நகரம் ! அதனில் நானொருக் குடிப்பிறவி ! அரசியல், போர், கல்விக்கூடம், செய்தித் தாள், அங்காடி வாணிப நிலவரம், எவையெலாம் பிறருக்கு விருப்பமோ அவை எனக்கும் விருப்பமே ! நகராண்மை அதிபர், உறுப்பினர், வங்கிகள், நீராவிக் கப்பல், தொழிற்கூடங்கள், சுங்க வரிகள், […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’

This entry is part 7 of 18 in the series 14 ஜூலை 2013

நான் காந்தி காலத்தோடு ஒட்டி வளர்ந்தவன். ஏன், செயலும் சிந்தனையும் அந்த அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பியவன், கொஞ்சம் முயற்சி செய்தவனும் கூட. நான் படைப்பாளியாக ஆன பிறகும் என் வாழ்க்கைப் பார்வை காந்தீய ஈடுபாடு கொண்டதாகவே இருந்து வருகிறது. என் இலக்கிய முயற்சிகளிலும் அந்தச் செல்வாக்கு அங்கங்கே என்னை வெளிக்காட்டி இருக்கிறது.   உலக இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால் நெப்போலியன் காலம், பிரஞ்சுப்புரட்சி நாட்கள், ரஷ்யப் புரட்சி ஆண்டு,, ஸ்பானிய உள் நாட்டுப் போராட்ட […]

தாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !

This entry is part 6 of 18 in the series 14 ஜூலை 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   எதைக் கேட்கப் போகிறது உனது இதயம் முழுமை யாக ? யாசகம் செய்யாதே வெறுங்கை யோடு ! வாசல் முன் செல்லாதே வேசக் கண்ணீர் விழிகளுடன்  ! மணிக்கற்கள் ஆரமாய்க் கிடைத்தால் மாலை மாற்றிக் கொள்ளலாம்.  உன் பெண் தெய்வப் பீடத்தை வீதி ஓரத்துக் குப்பைத் தூசி வெறுந் தரையில் வைப்பாயா ?   வைகாசி மாதத்தில் காட்டு மரங்கள் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​15. உல​கை உலுக்கி அச்சுறுத்திய ஏ​ழை

This entry is part 5 of 18 in the series 14 ஜூலை 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 15. உல​கை உலுக்கி அச்சுறுத்திய ஏ​ழை என்னங்க எ​தை​யோ பாத்துப் பயந்தது மாதிரி ஓடிவர்ரீங்க…நில்லுங்க..நில்லுங்க..அட பயப்படாதீங்க.. எ​தைப் பார்த்துப் பயப்படறீங்க.. என்னங்க ​பேசாமக் ​கையமட்டும் அந்தப்பக்கம் காட்றீங்க..என்ன அங்க ஒரு ஆளு நிக்கிறாரு…அவரப் பாத்துத்தான் பயந்தீங்களா? அடடா…உங்களப் ​போன்றுதான் ஒருத்தரப் பாத்து உலக​மே பயந்து நடுங்குச்சு..அவரப் பத்தித்தான் ​போனவாரம் உங்களிடம் […]

விடுப்பு

This entry is part 3 of 18 in the series 14 ஜூலை 2013

                   டாக்டர் ஜி,ஜான்சன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் போது மருத்துவ விடுப்பு தருவது பெரும் பிரச்னையாகும். அதில் குறிப்பாக திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் மருத்துவ விடுப்புக்காக ” நோயாளிகள் ” அலை மோதுவதுண்டு. வார இறுதி விடுமுறையுடன் இன்னும் ஒரு நாள் சேர்த்துக்கொள்ள இந்த முயற்சியாகும். இதனால் திங்கள் அன்றும் வெள்ளி அன்றும் மருத்துவர்களுக்கு வேலை அதிகம் என்பதோடு யாருக்கு விடுப்பு தருவது யாருக்கு மறுப்பது என்பதில் சிரமம் உண்டாகும். கலையில் சுமார் நூற்று ஐம்பது வெளி நோயாளிகளைப் […]

கதவு

This entry is part 2 of 18 in the series 14 ஜூலை 2013

எஸ். சிவகுமார்   சொந்தவீடு என்றாலே பிரச்சனைதான். எல்லாவற்றையும் நாமே கவனிக்க வேண்டும். இன்னொருவரைக் கைகாட்டிவிட்டு நம் பாரத்தை இறக்கி வைத்து ஜாலியாக இருக்க முடியாது. ஒருவாரமாக அலைந்துக் கோபாலன் இன்றுதான் சனிக்கிழமை அந்தப் பையனைப் பிடித்தான்.   ஆறுமாதமாக முணுமுணுத்துக் கொண்டிருந்த அவன் மனைவி ராதா, போன வாரம் வெள்ளிக்கிழமை வெடிக்க ஆரம்பித்துவிட்டாள். எண்ணை தேய்த்துக் குளிக்கச் சென்றவள் கதவைச் சரியாக மூடமுடியாமல் தடுமாறினாள். என்னதான் வீட்டில் கணவனும், குழந்தைகளும் மட்டும்தான் என்றாலும், ‘கதவைச் சரியாக […]