முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 11 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 41, 42, 43, 44 இணைக்கப்பட்டுள்ளன. +++++++++++++++
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 82 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Sometimes with One I Love) (Fast-Anchored Eternal O Love) 1. என் காதலியுடன் சில பொழுதுகள் 2. வேரூன்றும் நித்தியக் காதல் ! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 1. என் காதலியுடன் சில பொழுதுகள் காதலிக்கும் ஒருத்தியுடன் சில பொழுதுகள் நான் கழிக்கும் போது, சினம் […]
ஸ்வரூப் மணிகண்டன் ஒற்றை மழைக்குப் பச்சை படரும் வனம். ஒரு பார்வைக்குறைவிற்கு வறண்டு போகும் வரம். பெய்தொழியாமல் கடந்து போகும் மேகம். பெய்தும் பெய்யாமல் தகிக்க வைக்கும் உன் தேகம். மழைக்கும் மரணத்திற்கும் இடையே பறந்து திரியும் ஈசல் வாழ்க்கை வாய்த்திருக்கிறது எனக்கு. மழையிரவில் ஈசல் தின்ன இறங்கும் கருந்தேளின் லாகவம் வாய்த்திருக்கிறது உனக்கு.
கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் தமிழ்க்கவிஞர்களுக்கு விருதும் பரிசும் அளித்துப் பாராட்டி வருவது பலரும் அறிந்த ஒன்று. கவிக்கோ அப்துல் ரகுமான், சி.மணி. பழமலய், கல்யாண்ஜி, தேவதேவன். வ.ஐ.ச.ஜெயபாலன், காசிஆனந்தன், இரா.மீனாட்சி, புவியரசு, பாலா, தமிழ்நாடன், நா.முத்துக்குமார் எனப்பல கவிஞர்கள் விருது பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு விருது பெறுபவர் கவிஞர் மு.மேத்தா. ‘வானம்பாடி’க்கவிஞரான மு.மேத்தா.கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதைத் தொகுப்பின்மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர்.ஊர்வலம் என்னும் தொகுப்பு தமிழக அரசின் பரிசு பெற்ற கவிதைத்தொகுப்பு.திருவிழாவில் […]
– கலைச்செல்வி வைதேகியின் கணவன் வீட்டிலிருந்து இன்று பஞ்சாயத்து பேச வருவதாக சொல்லியிருந்தனர். திருமணம் முடிந்த இந்த ஓராண்டிற்குள் இதுவரை இரண்டு முறை பேச்சு வார்த்தை நடந்திருந்தது. இரு முறையுமே பஞ்சாயத்தின் வாதமும் பிரதிவாதமும் ஒரு புதிர் நிறைந்த சூழலுக்குள்ளேயே பயணித்துக் கொண்டிருந்தது. இம்முறை உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஏழெட்டு பேராக வருவதாக சொல்லியிருந்தார்கள். வைதேகி வீட்டு தரப்பிலும் வேறு வழியின்றி; ஆள் சேர்க்க வேண்டியதாயிற்று. அதே மனிதர்கள் தான்.. சென்ற வருடம் அவர்களின் வருகை திருவிழாவாக […]
உணவகத்தின் சுய சேவையிலும் நேரந்தான் ஆகிறது களை எடுப்பதும் சுத்தம் செய்வதும் கத்தியின்றி ரத்தமின்றி சாத்தியமில்லை என்றான் அதற்கு மட்டுமே ஆனதென்றாலும் தோசைக்கல் மேல் துடைப்பம் எப்போது பார்த்தாலும் நெருடுகிறது சொல்வதை கவனி வள்ளல்களையும் செங்கோல்களையும் உலகம் நிறையவே பார்த்தாகி விட்டது இன்னும் ஏன் பத்தில் ஒன்பது பரிதவிக்கிறார்கள் இடம் பொருள் ஏவலால் மௌனம் நகருமளவு இடம் பிடித்துத் தரும் முன்னொரு நாள் இறுக்கக் கட்டாத துடைப்பத்தில் இருந்து சிறு குச்சிகள் உதிர்ந்து மேலும் குப்பையானது
* “ தூங்குவது போலும் சாக்காடு தூங்கி விழிப்பதும் போலும் பிறப்பு “ – – சித்தர் பாடலொன்று. * “ காலா என்னருகில் வாடா உனை காலால் மிதிக்கிறேன் “ –பாரதி * சாவே உனக்கொரு சாவு வராதா” – கண்ணதாசன் * “ சாவு சாவல்ல சாவுக்கு முன் நிகழும் போராட்டமே சாவு “ – புகாரி * “இறந்து போகிறவனின் சரீரம், இந்திரியம், மனம், புத்தி இவைகளிலிருந்து வேறாக ஆத்மா என்று […]
மணக்கோலத்தில் கண்ட தன் மகன் இராமனுக்குமா முடி புனைவித்து மன்னனாக்க எண்ணம் கொண்டான் மாமன்னன் தயரதன். அமைச்சர் பெருமக்களும் அதனை ஏற்றனர். உடனே தயரதன் தன் குலகுருவான வசிட்டரை அழைத்து, ”இராமனுக்கு நல்லுறுதி வாய்ந்த உரைகளைக் கூறுவாயாக” என்றான். வசிட்டமுனிவன்இராமனைஅடைந்து, “ நாளை உனக்கு இந்த நானிலம் ஆளும் உரிமை வழங்கப்பட இருக்கிறது. எனவே நான் ஒன்று கூறுவதுண்டு உறுதிப்பொருள். நன்று கேட்டுக் கடைப்பிடி” என்று கூறி அரசன் கைக்கொள்ளவேண்டிய அறங்களை எடுத்துக் கூறுகிறான். வசிட்டன் […]
மறைமலையடிகளார் தனித்தமிழ் அறிஞர் ஆவார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். சைவ சித்தாந்தக் கொள்கைகைளைப் பரப்ப இவர் சைவ சித்தாந்த மகா சமாசத்தை நிறுவினார். தன் வாழ்வில் நாற்பது ஆண்டுகள் துறவியாகக் கழித்த இவர் தமிழின்பால் கொண்டிருந்த பற்றைத் துறக்காதவர். இவர் இலங்கைக்குச் சென்று தமிழறிவு வளர்த்த பேரறிஞர் இவர் அறுபத்துநான்கு நூல்களுக்குமேல் படைத்தவர். இவர் முல்லைப்பாட்டிற்கும் பட்டிப்பாலைக்கும் ஆராய்ச்சி உரைகளை வரைந்துள்ளார். இவ்விரு உரைகளின் வழி இவர் கைக்கொண்ட உரைமரபுகளை அறிந்துகொள்ள முடிகின்றது. […]