நண்பர்கள் திரும்பக் கூடத் தொடங்கிவிட்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணச் சித்திரம். என்னையும் சேர்த்து. எல்லோரும் அலுவலக நேரம் போக மிகுந்த நேரத்தில் சேர்ந்து நெருக்கமாகப் பழகிக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்தது. வேலுவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எனக்குப் பெருமை சேர்த்தது. இதெல்லாம் தற்செயலாக நேர்ந்தது தான். இதே போல இன்னொருவருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்துவிட முடியாது. செல்வாக்கே ஏதும் இல்லாத எனக்கு, சந்தர்ப்பங்கள் கூடி வந்ததால் கிடைத்த ஒன்றே அது அல்லாது என் சாமர்த்தியத்தால் அல்ல. […]
சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது போல் அரை இருட்டில் தெரு முடங்கிக் கிடந்தது. தெரு என்று சொல்வதுதப்பு. நான்காவது மெயின் நீளமும் அகலமுமாக வீசிக் கிடந்தது. இளங் குளிருக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஆண்களும் பெண்களும் குளிர் ஆடைகளை அணிந்து வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.ஆறுமாதத்துக்கு முன்பு அவரும் இம்மாதிரி வீரர்களில் ஒருவராகத்தான் இருந்தார். திடீரென்று ஒரு நாள் காலையில் அவரது பெண் வசந்தா ஒரு கையில்பெட்டியும் , இன்னொரு கையில் மூன்று வயதுக் குழந்தையுமாக வந்து நிற்கும் வரை. அவர் அறைக்குள் இருந்த பாத்ரூமிற்குச் சென்று பல் தேய்த்து, முகம் கழுவிதுடைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஹாலில் எம்.எஸ்ஸின் சுப்ரபாதம் மெல்லிய ஒலி வரிசையில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. சமையல் அறையில் தெரிந்த விளக்கு வெளிச்சம் வசந்தா வேலையைஆரம்பித்து விட்டாள் என்று தெரிவித்தது.ஏழரை மணிக்குள் அவள்எல்லா வேலையும் முடித்து விடுவாள். பிறகு டியுஷனுக்கு வரும்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து எட்டரை மணிக்கு அதுகளை அனுப்பி விடுவாள். அதன் பிறகு […]
‘படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு’என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. ‘தன் படைப்புகளில்கை வைக்கக்கூடாது’ என்று கறாராகச் சொல்லும் எழுத்தாளர்களும் உண்டு.பத்திரிகையின்கொள்கை, பக்க அளவு காரணமாக படைப்புகளைச் சுருக்கவோ,பகுதிகளை வெட்டவோ நேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தாளர்எழுதாததை – தன் கருத்தாக ஆசிரியர் சொல்ல நினைப்பதை – தான் பிரசுரிக்கும்படைப்பில் நுழைப்பதற்கு உரிமை எடுத்துக் கொள்வதைத்தான் புரிந்து கொள்ளமுடியவில்லை. எனக்கு அப்படி ஒருஅனுபவம் நேர்ந்தது. ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகையில், ஒரு பிரபல […]
தெலுங்கில் T. பதஞ்சலி சாஸ்திரி தமிழாக்கம் கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “நீங்க என்ன எடுத்துக்கறீங்க?” “பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்.” “டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் …. ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.” “ரொம்ப பிடிக்கும். சமீபத்தில்தான் பழக்கமாகிவிட்டது.” “பருமானாகி விடுவோம் என்று பெண்கள் பயப்படுவார்கள் இல்லியா? நீங்க அப்படி ஒன்றும் பருமன் இல்லை என்று வைத்துகொள்ளுங்கள்.” “எனக்கு அந்த பயம் எதுவும் இல்லை. போன மாதம்தான் எனக்கு முப்பது வயது முடிந்து […]
எத்தனையோ நாற்காலிகள் இருந்தாலும் அமர்ந்தது என்னவோ அந்த வட்ட மேசையின்மீது- சற்றே குனிந்து கையூன்றி எதிர் இருக்கையில் விவாதமும், விமர்சனமும், கவிதையும், நெருக்கமும் மற்றெல்லாமாக என விழுந்துகொண்டு இருந்தன சொற்கள் மேசையின் மீதாக ஒன்றின்மீது ஒன்றாக, குறுக்கு நெடுக்காக, குவியல் குவியலாக, சிறுமலையென.. ஆனால் ஏதொன்றும் சிதறி தவறிக் கீழே இறங்கவும் இல்லை; விழவும் இல்லை. வட்டம் என்றால் சுழலும் அல்லது உருளும். ஏதோவொரு அசைவுக்குட்பட்டதே உருண்டால் சிதறும், சுழன்றால் சொற்கள் விசிறி அடிக்கப்படும். ஏதும் நிகழாமல் […]
எங்கிருந்தோ கூவுகிறது தனித்த அந்திமப்பறவை ஒன்று அலறல்களடக்கி மெல்லிய அனத்தல்கள் மட்டுமே கூவல்களாக அதன் சப்தங்கள் நடுநிசியில் உயிரில் பாய்ந்து ஊடுருவி சிலிர்த்து எழும்பின ரோமகால்கள் சொந்தங்களையிழந்த தாக்கம் என்றோ தொட்டுச் சென்ற மிச்சமிருக்கும் ரவையின் வடு .. ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம் ரத்தசகதியில் கிடந்த அப்பாவின் சடலம் கோரமாய் சிதைக்கப்பட்ட தம்பியின் முகம் அராஜகத்தின் எல்லைகளில் தீவிரவாதம் எல்லாம் ஒருங்கே தோன்ற தொலைத்த சுவடுகளில் பாதம் பதித்து மீண்டும் எழுந்தன மூடி வைத்த நிழற்படங்கள் ஷம்மி […]
ஒற்றை மெழுகுவர்த்தி பிரகாசமான சுடர். . காற்றின் அசைவுக்கு சுற்றி சுழன்று அணைகிற போக்கில் சப்பனமிட்டு -பின் நிலைபடுத்தி நெடுநெடுவென்று அலைஅலையாய்… வாழ் சூட்சம நெளிவுகள் . . சூட்சமங்களின் அவசியமற்று மெழுகுவர்த்தியின் காலை சுற்றி வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய் மோன நிலையில் அசைவற்று – படுவேகமாய்,படுவேகமாய், உருமாறி திளைப்பில் துள்ளுகிறது நெருப்பின் நிழல். . அணைந்த நெருப்பு, தன் மரணத்திற்கு ஒப்பாரி வைக்கிறது கருகிய வாசனையுடன் மெலிந்த புகையுடன். . மறைந்த […]
காலை வேலைகளுடன் அந்தக் காலை நடையும் சேர்ந்து கொண்டது செல்வாவிற்கு. ரேஸ் கோர்ஸ் சாலையில் வாசம். காலை ஏழு மணிக்கு நடை தொடங்கும். ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளி, திடல், நீச்சல்குளம், பெக்கியோ ஈரச்சந்தை என்று பாதையை நிர்ணயித்துக் கொண்டார். நீச்சல் குளத்தைக் கடக்கும்போது அந்த சிமிண்ட் நாற்காலியில் உட்கார்ந்தபடியோ அல்லது அருகில் நடமாடியபடியோ அந்தப் பெரியவரை செல்வா தினமும் பார்க்கிறார். வயது எழுபது இருக்கலாம். முள்ளாக தாடி மீசை. விரக்தியும் வறுமையும் வரைந்த உருவம். பார்க்கும் […]
நான் (பிரதம மந்திரி) சர்வ வல்லமை பொருந்தியவன் எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. சரி. முதலில் என் வருத்தத்தை சொல்லி விடுகிறேன். கால் பிரதமராகிய என்னிடம் பத்து கேள்விகளை கேட்கிறீர்களே, முக்கால் பிரதமரிடம் ஏன் முந்நூறு கேள்விகளை கேட்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. (எனக்கு வருத்தப்படக்கூட உரிமை இல்லையா என்ன?) சரி. அதிருக்கட்டும். நான் ஒன்றும் உங்கள் குறைகளை தீர்க்கப்போவதில்லை. ஆனால், எனக்கும் கேள்வி […]
எமிலி ஜோலா பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா -I- P**** என்பது மேட்டுப்பிரதேசத்தில் அமைந்த சிறியதொரு நகரம். கோட்டைமதிற் சுவரையொட்டி செங்குத்து சரிவுகளும் ஆழமும் கொண்ட சிற்றாறொன்று பாய்கிறது. படிகம்போல் உருண்டோடுகிற நீரோட்டத்தின் ஓசையைக்கேட்டவர்கள் ‘தெளிவான பாட்டு’ என்ற பொருளில் ஷாண்த்கிளேரென்று பிரெஞ்சில் ஆற்றுக்குப் பெயரிட்டிருந்தார்கள். வெர்ஸாய் சாலையைப் பிடித்து நகரத்திற்கு வருவீர்களெனில், தெற்குவாயில் பக்கம் ஒற்றை வளைவுமீது அமைத்திருக்கிற பாலத்தின் வழியாக ஷாந்த்கிளேரை கடந்து வரவேண்டும். பாலத்தின் இருபக்க தடுப்பு சுவர்களும் அகலமாகவும், […]