இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்

This entry is part 11 of 23 in the series 21 ஜூன் 2015

முனைவர் சு.மாதவன்   ‘இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்’ என்ற தலைப்பில் சிந்திக்கிறபோது இக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், சமகால இலக்கியம், நவீன இலக்கியம் என்ற வகைப்பாடுகளை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் ஒன்றுபோலத் தோன்றுபவை. தமிழ் இலக்கியப் புரிதலில் இந்த வகைப்பாட்டுச் சொற்றொடர்கள் எல்லாம் ஒன்றுக்குப் பதிலியாய் இன்னொன்று எனப் புழக்கத்தில் இருந்து வருபவை. ஆனால், இவை அனைத்தும் ஒரே வகைப்பாட்டைக் குறிப்பன அல்ல. அவ்வாறாயின், இவ் வகைப்பாட்டுச் சொற்றொடர்களுக்கான விளக்கம்தான் யாதென அறிந்துகொள்ள […]

சங்க இலக்கியத்தில் ​வேளாண் பாதுகாப்பு

This entry is part 12 of 23 in the series 21 ஜூன் 2015

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்​கோட்​டை-1. சங்க காலத்தில் உழ​வே முதன்​மையான ​தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏ​னைய மக்க​ளைவிட நாகரிகத்தில் ​மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர், க​டையர் க​டைசியர் என்னும் ​சொற்கள் உழவர்கள் குறித்து ஆளப்படும் ​சொற்களாகும். க​டையர் என்பார் வயல்களில் ​வே​லை​செய்யும் ​தொழிலாளர்கள் என்று கருதலாம், இவர்கள் நிலமற்ற எளிய மக்களாக இருத்தல் ​வேண்டும். இவர்களின் வாழ்க்​கை​யை ​பெரும்பாணாற்றுப்ப​டை(206-246), மது​ரைக்காஞ்சி(246-270), ம​லைபடுகடாம்(10-105) முதலிய பாடல்வரிகள் விரிவாக […]

நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1

This entry is part 13 of 23 in the series 21 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் தூக்கு தண்டனை கைதிகள் இருவர். செய்யாத கொலைகளுக்கு மரணம். உண்மையில் யார் கொலையாளி? சிக்கலான முடிச்சுகளுடன் ஷ்ரத்தாவின் புதிய நாடகம். வங்கிக் கொள்ளையில், விபத்தாக முடியும் காசாளரின் மரணம். குற்றம் செய்ததாக கைது செய்யப்படும் அண்ணாமலை உண்மையில் அந்த வழக்கில் நிரபராதி. காதலித்து மணக்கும் காயத்திரியை, காதல் கணவன் ரகுராமனே கொன்றதாக வழக்கு. அவன் நிரபராதி என்றால் கொன்றது யார்? ஒரு ஆய்வு நூலை எழுத, நேரடி அனுபவத்திற்காக, சிறையில் அண்ணாமலையையும் ரகுராமனையும் சந்திக்கும் […]

புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.

This entry is part 14 of 23 in the series 21 ஜூன் 2015

முருகபூபதி ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம். காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும் நிகழும் சம்பவங்களை குறித்து வைப்பதற்காக அறிமுகமான Diary ( Daily record of event) தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறது. உலகப்பிரசித்தி பெற்றவர்களின் டயறிகள் பிற்காலத்தில் அதிக […]

அமராவதிக்குப் போயிருந்தேன்

This entry is part 15 of 23 in the series 21 ஜூன் 2015

சுப்ரபாரதிமணியன் அமராவதிக்குப் போயிருந்தேன் அமராவதியும் ஜீவனில்லாத நதியாகி விட்டது. ஆனால் தாராபுரம் பகுதி அமராவதி பகுதிக்குப் போகையில் ஆறுதலாக இருக்கும். சாயக்கழிவு, வீட்டுக்கழிவு எதுவும் கல்க்காமல் சற்றே சுத்தமாக அமராவதி காணப்படும். இவ்வாரம் சக்தி விருது அளிப்பதற்காக –பெற்றவர் சவுதாமின், ஓய்வு பெற்ற ஆசிரியை, ஹோமியோ மருத்துவர், சுயமுன்னேற்ற நூலகளை எழுதிவருபவர்- தாராபுரம் சென்றேன். நண்பர் குள்ளாளக்காளி பாளையம் பாலசுப்ரமணியம் அவர்களுடன் சென்றேன். தாராபுரம் அவ்வளவு அழுக்கிலாத, அவ்வளவு குப்பையில்லாத நகரம்( உடுமலையிலிருந்து எங்காவது கிளம்பி வந்து […]

பா. ராமமூர்த்தி கவிதைகள்

This entry is part 16 of 23 in the series 21 ஜூன் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   ‘ கைப்பிடியில் நழுவும் உயிர் ‘ என்ற தொகுப்பின் மூலம் அறிமுகமாகிறார் ராமமூர்த்தி ! இவர் கவிதைகள் பெரும்பாலும் கடந்த காலத்தின் பொன் துகள்களைக் கொண்டுவந்து ஓவியம் உருவாக்குகின்றன. கவிமொழி அவ்வளவாகக் காணப்படவில்லை. எனவே ஒருவிதத் தகவல் தன்மை உள்ளது. இதுவே கவிதையின் யதார்த்தப் போக்கிற்குக் கதவு திறந்துவிடுகிறது. ‘ அப்பாவும் நானும் ‘ – ஒரு சோகக் கவிதை. அப்பா முகம் காணாமல் போனது ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு சோகமானது ? […]

செய்தி வாசிப்பு

This entry is part 17 of 23 in the series 21 ஜூன் 2015

  சத்யானந்தன்   யானைகள் காடுகளை விட்டு நீங்கி அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் அட்டகாசமாய்ப்  புகுந்து அநியாயம் செய்தன   இயற்கை மலையில் வெறி வந்து நிலத்தைச் சரித்து பேரிடர் ஏற்படுத்தியது   கூலித் தொழிலாளிகள் கூட்டணி அமைத்து சதிகாரர்களுடன் உலக அளவில் ஒப்பந்தம் போட்டு மரங்களைக் கடத்துகிறார்கள்   விவசாயி சாகுபடி செய்யாமல் தற்கொலை செய்து விட்டார்   பாலியல் வன்முறைக்கு வெளியில் நடமாடும் பெண்களே காரணம்

வேர் பிடிக்கும் விழுது

This entry is part 18 of 23 in the series 21 ஜூன் 2015

  தாரமங்கலம் வளவன் முன் சீட்டில் தனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த பையனைக்காட்டி டிரைவர் மாரி, “ வாடகைக்கு ஓடற காருக்கு கிளீனர் வைச்சி சம்பளம் கொடுக்க முடியுங்களா.. எனக்கு கட்டுபுடி ஆகுங்களா… நீங்களே சொல்லுங்க..” என்றான். நான் சென்னையில் ஒரு சிறிய பாக்டரி வைத்திருக்கிறேன். சூரிய ஒளியில் இருந்து வெந்நீர் தயாரிக்கும் சோலார் வாட்டர் ஹீட்டர் செய்யும் பாக்டரி. போட்ட பணத்தை எடுப்பது சிரமமாய் இருக்கிறது. கஷ்டப்பட்டு நடத்திக் கொண்டு வருகிறேன். இந்த ஊரில் இருக்கும் […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்

This entry is part 19 of 23 in the series 21 ஜூன் 2015

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 500 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

கும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்

This entry is part 20 of 23 in the series 21 ஜூன் 2015

வைகை அனிஷ் தேனி மாவட்டத்தின் சின்னக்குற்றாலம் என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. இவ்வருவியைச்சுற்றி ஏராளமான வனங்கள் இருப்பதால் சுற்றுலா பிரியர்கள் எப்பொழுதும் கூட்டம் கூட்டமாக குவிந்துவிடுவர். இதற்கு காரணம் கோயில்காடுகள். கோயில் காடு, சோலைக்காடு, சாமிமலை மதிகெட்டான் சோலை, முருகமலை, செம்மன்குழி எனப் பல்வேறு பெயர்களால் ;அழைக்கப்படுகின்ற கோயில் காடுகளை தமிழகத்தில் பரவலாகக் காணலாம். ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிராம தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும். அதே தெய்வம் காவல் தெய்வமாகவும் இருக்கும். தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே 18ம் பட்டி […]