சோம. அழகு பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன, நம்மை மொத்தமாக உருக்குலையச் செய்ய. பரவலான பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் எனினும் ‘சாதாரணம்’ என்பதற்கு இங்கு அளவுகோல் என்ன? உங்கள் சாதாரணங்கள் எனக்குப் பெரும்பாலும் ‘ரணங்கள்’. உதாரணமாக, நம் தாத்தா பிறப்பதற்கு முன்பிருந்தே நிற்கும் மரம் ஒன்று ‘சாலை விரிவாக்கம்’, ‘மின்கம்பிக்கு இடைஞ்சல்’… போன்ற அற்பக் காரணங்களுக்காக வெட்டப்படுவதை யாரேனும் […]
கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும். குரு அரவிந்தன். கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு […]
ஹிந்தியில் : வினோத் பத்ரஜ் தமிழில் : வசந்ததீபன் __________________________ எனது கையில் ஒரு கடிதம் இருக்கிறது உள் நாட்டுக் கடிதம் அதன் மீது என்னுடைய முப்பது வருட பழைய முகவரி எழுதப்பட்டு இருக்கிறது ஆ..! அந்த கையெழுத்தில்… அந்த கையெழுத்தின் அனைத்துக் கடிதங்களை நான் கிழித்துப் போட்டேன் எரித்துப் போட்டேன் தூரக் கொட்டினேன் துச்சமான வாழ்வை பாதிப்பில்லாமல் ஆக்குவதற்காக… ஆனால் தப்பித்து வாழ்ந்து கொண்டிருந்தது இது , ஏனெனில் ஒருவேளை எப்போது இது கிடைக்கலாம் என்று அக்கம்பக்கம் இருந்து கொண்டிருக்கலாம் […]