வஞ்சனை சொல்வாரடீ, கிளியே

This entry is part 22 of 22 in the series 26 மார்ச் 2023

வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான கால்கள் வாய்த்திருக்கவேண்டும். மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும் அதை மனதில் இறக்கிக்கொள்வதில்லை. மும்மாரி பொழிகிறதா என்பதைக்கூட குளிரூட்டப்பட்ட அறையில் திண்டுமெத்தையில் சாய்ந்து மனக்கண்ணால் பார்த்து முடிவுசெய்யப் பழக்கப்பட்டவர்கள் வெறுங்கால்கள் கொப்புளிக்க மைல்கணக்காய் தலையில் பாறாங்கற்களைச் சுமந்துவந்தவர்களை சிந்தித்துப் பார்ப்பதில்லை. அல்லது, அவர்கள் விசுவாசமிக்க பிரஜைகள் என்று […]

பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை

This entry is part 21 of 22 in the series 26 மார்ச் 2023

அவர் எனக்கு எதிரி அவரை எனக்குப் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் அவதூறு பேசுங்கள் அவருடைய அன்னை தந்தை பிறப்பு ஊர் படிப்பு உச்சரிப்பு எதை வேண்டுமானாலும் பகடி செய்யுங்கள் பழித்துக்கூறுங்கள் அவரை மட்டந்தட்ட மதிப்பழிக்க body-shaming செய்ய உங்களுக்குப் பரிபூரண உரிமையுண்டு. அரசியல் சாசனத்தில் இல்லையென்றால் என்ன ஆயத்த வழக்கறிஞர் குழு இருக்கிறதே அதனால் அதிகம் யோசிக்காமல் அவரை எத்தனைக்கெத்தனை அசிங்கமாக வசைபாட முடியுமோ அத்தனைக்கத்தனை பாடுங்கள் சுருதிபேதங்கள் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பாடல்களுக்கு […]

18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா

This entry is part 19 of 22 in the series 26 மார்ச் 2023

” பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் […]

நாவல்  தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE  1900)

This entry is part 18 of 22 in the series 26 மார்ச் 2023

இரா முருகன் பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது.  ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை. ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள்  பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறவை இந்த விளக்குகள். குயிலியின் உள்ளங்கையில் டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது. பொருள் வயின் பயணம் என்று எழுதிய […]

நட்பூ

This entry is part 17 of 22 in the series 26 மார்ச் 2023

ஜனநேசன்       சந்திரவதனாவின்   பார்வை, நீர்வழிய ,  மரணப்படுக்கையில்  கிடந்த  அம்மாவின்  மீது  நங்கூரமிட்டிருந்தது. மனதுக்குள்  எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. அம்மாவுக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது . இதயத் துடிப்பும்  குறைந்து  வருகின்றது . மருத்துவர்  சொன்னக் கெடு  தாண்டி இரண்டு நாள்கள்  உதிர்ந்து விட்டன. ஆனால்  பேச்சற்று, உணர்வற்ற அம்மாவின் உயிர்  மட்டும்  தொண்டைக்கும் நெஞ்சுக்குமிடையே  உள்ளேயா, வெளியேவா  என்று கயறு இழுப்புப் போட்டி நடத்திக் கொண்டிருந்தது. உயிர்ப்புறா  நெஞ்சுக்கூட்டுக்குள்ளே  கரபுறத்துக் கொண்டிருந்தது. நெருங்கிய  உறவுகளும், […]

பூமியில்  உயிரின மூலவிகள் தோற்றம்

This entry is part 16 of 22 in the series 26 மார்ச் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html ******************************* சட்டியில் ஆப்பம் ஒன்றைச்சுட்டுத் தின்னஅண்டக்கோள் ஒன்றை முதலில்உண்டாக்க வேண்டும் !அண்டக்கோள் தோன்றப்பிரபஞ்சத்தில் ஒருபெருவெடிப்பு நேர வேண்டும் !உயிரினம் உருவாகசக்தி விசையூட்ட வேண்டும் !கோடான கோடி யுகங்களில்உருவான இப்பூமி ஓர்நுணுக்க அமைப்பு !தனித்துவப் படைப்பு !அகிலாண் டத்தில்நிகரில்லை அதன் படைப்பிற்கு !நாமறிந்த பிரபஞ்சத்தில்பூமியைப் போல் கடல்சூழ்ந்தபாறைக் கோள் ஒன்றைவேறெங்கும் கண்டிலோம் இதுவரை !நீர் ஆவியாய் நீங்காமல்வைத்திருப்பதுவாயுக் குடை ! அஃதில்லையேல்மாயும் உயிரினங்கள் !அகிலப் பிரமாண்டத்தைநுணுகி நோக்கமனிதரினம் தோன்றியபுனித […]

அந்தரம்

This entry is part 15 of 22 in the series 26 மார்ச் 2023

உஷாதீபன் அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன்.இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள்வரைக்கும் யாருக்கும் தெரியாது. […]

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்

This entry is part 14 of 22 in the series 26 மார்ச் 2023

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ் தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான உரையாடல் களமானதில்லிகையின் மார்ச் மாத நிகழ்வு வரும் சனி நடைபெற உள்ளது. தலைப்பு : புனைவு : எழுதுதலும் வாசித்தலும் உரை : பா. வெங்கடேசன், எழுத்தாளர், தமிழ்நாடு. உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். அதைத் தொடர்ந்து  புத்தகங்களை அறிமுகம் செய்தல். பங்கேற்பாளர்கள் தாங்கள் படித்த, பகிர விரும்பும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களின் கருத்துகளை 5 நிமிட அளவில் சுருக்கமாக அறிமுகம் செய்யலாம். நாள் : 25.03.23நேரம் : மாலை 3.30 மணி. இடம் […]

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2

This entry is part 13 of 22 in the series 26 மார்ச் 2023

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள். https://youtu.be/ZcytUz4g-jo  [ Part -1] […]