விண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு

This entry is part 20 of 22 in the series 2 மார்ச் 2014

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழி முதல்வன் வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி  விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை ! பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் இயங்கிச் சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் மண்ணுலகம் […]

பொறுமையின் வளைகொம்பு

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

பொறுமைக் கொம்பின் நுனிவரையேறி வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறேன் விட்டுவிடுவேனோ என்ற பெரும் பயத்தில் மனது துடிக்கிறது படபடத்து விட்டுவிட்டேனென்றால் வளைந்த கொம்பு முழு வீரியத்துடன் எம்பி நிமிரும் அதன் தாக்கம் சாமன்யமாய் இருக்காது.. விடக் கூடாதென்ற வைராக்கியம் வளைத்துப் பிடித்தபடியே இருக்கிறது அழுத்திப் பிடித்திருப்பதால்  தசைகள் வலிக்கிறது.. ரத்தமும் கசிகிறது கை ரத்தக் கசிவால் ஒருவேளை விட்டுவிட நேரலாம்..  கூடாதென்ற பிடிவாதத்தில் தொங்குகிறது மனம் ஆனால் விடாமல் இருந்தால்  மீண்டும் மீண்டும் நான் ரணப்பட வேண்டி வரலாம் முடியும்வரை […]

காத்திருப்பு

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

அமுதாராம் நோய்வாய்ப்பட்ட பிணம் குளிர்சாதனப் பெட்டிக்குள் பைய நாற ஆரம்பித்ததும் ஆளாளுக்குப் பேசத் தொடங்கிவிட்டிருந்தனர்.மாலை,சாம்பிராணி,ஊதுவத்தி இத்யாதி நாற்றம் துக்கப்பட்டினிக் கிடந்தோருக்கு வெறும்குடலைப் பிறட்டிக்கொண்டு வந்தது.மெல்ல அழுதுபுலம்பியபடி நடப்பவற்றை உணர்ச்சியற்று அரை மயக்கத்தில் மேய்ந்தவாறு ஜீவனின்றிப் பிணத்தின் கால்மாட்டின் மூலையில் சரிந்துக்கிடந்தாள் மீனாட்சிப்பாட்டி. செத்த கிழவருக்கு வயது தொண்ணூற்றாறை நெருங்கும்.சதத்தை அவ்வூரே ஆச்சரியத்தோடும் சற்றுப் பொறாமையோடும் எதிர்நோக்கியிருந்த சமயம்,காலன் கறாராக சுப்பிரமணியத்தின்மீது மாயச்சுருக்குக் கயிற்றைவீசிக் குரல்வளையினை நெரித்துத் தள்ளிவிட்டான் போலும்.இப்போதும் அந்த பழைய மங்களகரம் மீனாட்சிப்பாட்டியிடம் குன்றிமணியளவு கூடக் […]

தொடுவானம் 5.எங்கே நிம்மதி

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

” சரி. நீயும் கவலைப் படாதே. நாம் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. கடிதம் எழுதிக் கொள்வோம். ” ” எப்படி? ” ” வேறு வழியில்லை. நான் கோவிந்தசாமியிடம் பேசிப் பார்க்கிறேன். ” ” என்னவென்று ? ” ” அவனிடம் நீ பேசினால் யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள். நீ கடிதம் எழுதி அதை ஒரு புத்தகத்தில் வைத்து அவனிடம் கொடுத்து விடு. நான் பதிலை அதே புத்தகத்தில் வைத்து அவனிடம் தந்து விடுகிறேன். நீ அவனிடம் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

   (Children of Adam)   உலகம் சுற்றித் தேடினேன்   (Facing West from California Shores) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       காலிஃபோர்னியா கடற்கரைக்கு மேற்புறம் நோக்கி களைப்படை யாது விபரம் கேட்டேன் இன்னும் என்ன வெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று ! வயது முற்றிய ஒரு சிறுவன் நான், புலம் பெயர்ந்தார் புகுந்த பூமி இது ! அலைகளுக்கு அப்பால் உற்று நோக்கினேன் பிள்ளைகள் […]

பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

நண்பர்களே, பாலு மகேந்திராவின் நினைவுக் கூட்டத்தில், பாலு மகேந்திராவின் பத்து சிறந்த படங்கள் (தமிழ், மலையாளம், கன்னடம்) அடங்கிய DVD தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. இதில் பெரிதும் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயன், பாலு மகேந்திரா பெயரில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்களுக்கு விருது கொடுத்து கவுரபடுத்தவுள்ளது என்கிற என்னுடைய அறிவிப்பையடுத்து, இந்த பத்துப் படங்கள் அடங்கிய தொகுப்பை நண்பர்களுக்கு கொடுத்து, அதில் இருந்து நன்கொடை பெற்று, விருது நிகழ்வை இன்னமும் சிறப்பாக நடத்துங்கள் […]

படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

முழுவேகத்தில், உலகத் தரமான பாடத்திட்டத்தோடு படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தை மார்ச் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இடையில் மார்ச் முதல் வாரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்கள் படிமை மாணவர்களோடு உரையாடுகிறார். இன்னமும் ஐந்து மாணவர்கள் இதில் இணைந்துக் கொள்ளலாம். பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறை மூடப்படுமாயின், அதில் இதுவரை பயின்று வந்த மாணவர்களையும் இந்த பயிற்சி இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன். வணிக சினிமா, வெகுஜன சினிமா, கலைப் படங்கள் என்கிற போலிக் கற்பிதங்களை […]

வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம்’ புதினத்தின் இறுதிப்பகுதியாக இடம்பெற்றிருந்த பிரளயத்தின் காட்சிகளை ஒருபோதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அக்காட்சிகள் பல நாட்கள் என் கனவில் தோன்றித்தோன்றி என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தன, இடைவிடாது பொழியும் மழை. கடல்போல வெள்ளம் பொங்கி வந்து விஷ்ணுபுரத்தையே சூழ்ந்துகொள்கிறது. வயல்வெளிகள், தோப்புகள், சின்னச்சின்ன குன்றுகள் எல்லாமே மெல்லமெல்ல வெள்ளத்தில் மூழ்கி மறைகின்றன. கால்நடைகளின் பிணங்கள் மிதந்து செல்கின்றன. மனிதர்களின் பிணங்கள் மரக்கிளைகளில் சிக்கி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கரையுள்ள இடங்களில் […]

”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

    ஒரு பயண நூல் எழுதுவது என்பது எளிதான செயலன்று. அதை விட அதனை வாசிப்பது என்பதும் சாதாரண செயலன்று. ஏனெனில் பயண நூல் படிக்கும் போது அதை எழுதிய பயணியுடன்  சேர்ந்து நாமும் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லக் கூடிய மனப் பாங்கினைப் பெற வேண்டும். அதற்கு ஏற்றபடி அப்பயண நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏதோ போனோம் வந்தோம் என்றிராமல் தான் சென்ற இடங்களில் பார்த்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, அவர்களின் மொழி, பண்பாடு, […]

தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

(முன்குறிப்பு: முக்கியமான, சிறுவர்களுக்கான உலகத் திரைப்படங்களைப் பார்த்து, ஆங்கில சப்-டைட்டிலை தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க வேண்டும், சிறுவர்களுக்கான சில சினிமா நூல்களை மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்துக் கொடுக்க ஆர்வம் இருக்கும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள். 9578780400) நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ இந்த வருடம் முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டையும், வெவ்வேறு பருவத்தினருக்கான திரைப்பட ரசனை வளர்க்கும் ஆண்டாக கொண்டாடவிருக்கிறது. அதன் படி இந்த ஆண்டு (2014) சிறுவர்களுக்கான திரைப்பட […]