அரிய பொக்கிஷம் அது பதறி அடித்துப் பறந்து தேடியும் கிடைக்கவில்லை மென் நகலும் தான் பிக்காஸா கூகுள் + பிக்ட்சர்ஸ் மின்னஞ்சல் எதிலுமே என் காலத்திலேயே என் நிழற் படம் காலாவதியாகி விடுமோ முகநூலில் வெறியாய்த் தேடினேன் என் முகங்களே எங்கெங்கும் கூர்மையான நிழல்கள் கீறிய தழும்புகளுடன்
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி மாற்றுத்திறனாளி என்றால் வானத்தில் வெட்ட வெளியில், பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குதித்து வந்த ஜந்துவா?… அப்படி ஒன்றும் இல்லை, சராசரி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் தான் இருந்தன எனக்கு. காலம்தான் கனவுகளை செதுக்குகிறது போலும். பால்யப் பருவக் கனவுகளில் முதலாவதாக இருந்தது என்னவோ இந்த அம்மா எப்பவும் பழைய கஞ்சிதான் ஊத்துறா, ஒரு நாளாச்சாம் சுடு சோறு சாப்பிடனுங்கறது தான். அதன் பிறகு ஒர்த் டிரஸ்ட் பயில வந்த பிறகு தான் […]
தாரிணி பதிப்பகம் மற்றும் ஹார்ட் பீட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி
பாவண்ணன் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் பெயரைத் தாங்கி அந்தத் தொடக்கப்பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. ஏழைப் பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லாத பள்ளிக்கூடம். நாலரைக்கு கடைசி மணி அடித்ததும் பிள்ளைகள் எல்லோரும் கன்றுக்குட்டிகள்போல வாசலை நோக்கி ஓடினார்கள். விதவிதமான உயரங்களில் விதவிதமான ஓசைகளை எழுப்பியபடி அவர்கள் ஓடியது விசித்திரமாக இருந்தது. குதிரை, யானை, பூனை, கோழி, ஆடு என எல்லாவிதமான விலங்குகளின் சத்தங்களும் அப்போது கேட்டது. ஆனால் ஐந்தாவது வகுப்பு பி செக்ஷன் வீரமுத்து மட்டும் ஓடவில்லை. சத்தம் போடவும் இல்லை. […]
ஜோதிர்லதா கிரிஜா 1983 ஆம் ஆண்டு என்று ஞாபகம். குடும்பக் கட்டுப்பாட்டு இலாகாவைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் என் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டுமே இருந்தது என்று நினைக்கிறேன். குடும்பக்கட்டுப்பாடு தொடர்புள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்பது பற்றி என்னைக் காணவந்திருந்ததைத் தெரிவித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ‘நீங்கள் தப்பான ஆளிடம் வந்திருக்கிறீர்கள்!’ என்று நான் சொன்னதும் அவர் புன்னகை பூத்தார். ‘இல்லை, மேடம். அது பற்றிய கருத்தைப் பொறுப்பு உணர்வுள்ள மக்களில் எவர் […]
’ரிஷி’ (1) பட்டுப்போய்விட்டது என்று திட்டவட்டமாகத் தெரியும் நிலையில் இட்ட தெய்வம் நேரில் வந்ததேபோல் மொட்டவிழ்ந்து விரிந்திருந்தன மலர்கள் சில. கண்வழி நுகரக்கிடைத்த நறுமணத்தின் கிறக்கத்தில் கணத்தில் இடம் மாறி ‘வேண்டும் வரம் கேள்’ என்று இறைவனிடம் சொல்ல எண்ணி அண்ணாந்தேன் நான் ஆகாயமெங்கும் சிறகடித்துக்கொண்டிருந்தேன்! (2) முதன்முறையாய் பார்த்துக்கொள்கிறோம் என்னிடம் பாய்ந்தோடி வந்தது குழந்தை. விட்டகுறை தொட்ட குறையாய் இது என்ன ஒட்டுதல்? அள்ளியெடுத்துப் பின் யாரோவாகிவிட்டால் எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம்… எப்படி எதிர்கொள்வது […]
வில்லவன் கோதை . பகற்பொழுது முழுதும் சாய்ந்தபோது நாங்கள் விடுதிக்குள் பிரவேசித்தோம். இரவுக்கான உணவாக கோதுமையில் சுடப்பட்ட சப்பாத்தியும் மைதாவில் தயாரித்த பரோட்டாவும் விடுதியில் பரிமாறப்பட்டது. கோதுமையில் இருக்கும் நல்ல குணங்களையெல்லாம் அகற்றிவிட்டால் கிடைப்பது மைதா என்று சொல்லக்கேட்டுருக்கிறேன். இருந்தாலும் ஒருசுவைக்காக நண்பர் ஜெகநாதன் புரோட்டாவை விரும்பிக்கேட்டார். பெரும்பாலும் வீடுகளைவிட உணவகங்களில் சிறப்பாக செய்யப்படுவதும் பெரிதாக விற்பனை ஆவதுமான ஒரு உணவு வகை பரோட்டா. ஆனால் என்ன காரணத்தினாலோ பரிமாறப்பட்ட பரோட்டா அத்தனை நயமாக இல்லாமல் போயிற்று. […]
புதியமாதவி, மும்பை அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு தலைமுறை கேட்டது… சூரியனே , உனக்குச் சூடில்லையா? உனக்கு மட்டும் சாவி, எங்களுக்குப் பூட்டா? என்று. ஆனால் இக்கேள்விகள் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே இருந்தது என்பது தான் உண்மை. ஏனேனில் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தப் பின் திமுகாவில் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக 1971ல் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று கலைஞரின் தலைமையில் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தப்பின் நகர்ப்புறத்து முதலாளிகளும் கிராமப்புறத்து […]
வழக்கறிஞர் கோ. மன்றவாணன் இந்திய மக்களவைக்கான 16-வது பொதுத்தேர்தல் அண்மையில் நடந்தது. சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திரு. மணிரத்தினம் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்;டதற்குச் சொல்லப்பட்ட காரணம், வேட்பு மனுவில் 10 பேர் முன்மொழிவதற்குப் பதிலாக ஒரே ஒரு நபர்தான் முன்மொழிந்துள்ளார் என்பதாகும். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால், வேட்பு மனுவில் ஒருவர் முன்மொழிந்தால் போதும். அங்கீகரிக்கப்படவில்லை எனில் வேட்பு […]
[…]