வாஸந்தியின் நாவல், “விட்டு விடுதலையாகி” ஒரு நாவல் என்பதற்கும் மேல், நம் வாழ்க்கை மாற்றங்களையும் அவ்வப்போது மாறும் நம் பார்வைகளையும், மதிப்பீடுகளையும், ஸ்தாபன தோற்ற காலத்து தர்மங்கள் நம்மின் குணம் சார்ந்து, மாறுவதையும் பற்றியெல்லாம் சிந்திக்கத் தூண்டும் களமுமாகிறது தேவதாசி என்றும் தேவரடியாள் என்றும் அழகான பெயர் சூட்டி நடனத்தின், சங்கீதத்தின் பக்தியின் உறைவிடமாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம் தேவடியாளாகச் சீரழிந்தற்கு, அல்ல, சீரழிக்கப் பட்டதற்கு நம் குணமும் பார்வையுமே தான் காரணமாகியுள்ளன என்பதை நாம் […]
சரோஜ் நீடின்பன் சந்தீப் முகர்ஜி என் நண்பன். கல்கத்தாவில் படித்துவிட்டு என்னுடன் உத்திரப்ரதேசத்திலுள்ள இஜ்ஜத்நகரில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் இளம்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தான். நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தோம். பணிபுரியும் இடத்தினருகிலேயே ஊருக்குள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நானும் அவனும் வசித்து வந்தோம். பக்கத்து வீட்டிலிருந்த குடும்பத்தினரிடம் காலையும் இரவும் எங்கள் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்டோம். சுமாரான சம்பளம். பேச்சிலர் வாழ்க்கை. […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) என்மேசையில் எழுதாத சில நாட்குறிப்புப் புத்தகங்கள் எல்லா நாள்களும் முழுப்பக்கமாய் அமைந்த நாட்குரிப்பு ஏடுகள் நடந்தாண்டாக இருந்தாலும் நடப்பாண்டாக இருந்தாலும் எழுதாத தாள்கள்மீது தீராக்காதல் இவற்றை விரும்பிசேர்ப்பதும் வேண்டிக்கேட்பதும் என் அகலாநோய் எப்போதும் என்பையில் பலவண்ணமையில் எழுதுகோல்கள் எழுதித்தீர்க்கும் பேராவலில்தான் இந்தச்சேகரிப்பும் சிரத்தையும் தீவிரமான வாசிப்பும் எழுத்தும் நிகழ்ந்தால் பரிமாணத்தைக் கூட்டலாம் பரிணாமத்தைக் காட்டலாம் நாட்குறிப்புத் தாள்கள் தீரும்போதும் எழுதுகோல்கள் […]
சிறகு இரவிச்சந்திரன் தேர்தல்சுரம்கொஞ்சம்குறைந்ததால், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு,மீண்டும்இலக்கியம்பக்கம்திரும்பிஇருக்கிறார்உயிர்மைபத்திரிக்கையின்ஆசிரியர்மனுஷ்யபுத்திரன். தனதுஆதர்சஎழுத்தாளர்சுஜாதாவின்பிறந்தநாளானமே 3ம்தேதிசென்னையில்ஐந்தாவதுஆண்டாகதொடர்ந்து,ஆறுபிரிவுகளில்விருதுவழங்கும்விழாவினைநடத்தினார். சிறுகதை, நாவல், கவிதை, உரைநடை, சிற்றிதழ், இணையம் என சுஜாதா ஆர்வம் கொண்டு பங்காற்றிய அத்துணை பிரிவுகளிலும் ஒவ்வொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் சுஜாதாவின் மனைவி திருமதி சுஜாதாவால் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா சாலையில் உள்ள குளிரூட்டப்பட்ட புக் பாயிண்ட் சிற்றரங்கு, ஆறுமணிக்கெல்லாம் பாதி நிறைந்து விட்டது. வழக்கம்போல் மனுஷ்யபுத்திரன் மேடைக்கு முன்னால், தன் தோழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். வரவேண்டிய பிரபலங்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, […]
இயக்கம்: ஏ.ராமகிருஷ்ணன் இசை: கண்ணன் ஒளிப்பதிவு : எம்.யூ. பன்னீர்செல்வம் பாடல்கள் : அண்ணாமலை 136 நிமிடப்படத்தைஇவ்வளவுவறட்சியாகஎடுத்ததற்குஇயக்குனர்ராமகிருஷ்ணனுக்குஒருவிருதேகொடுக்கலாம். அவரேநாயகவேடம்போட்டு, நல்லநடிப்பையும்சிலதெறிப்பானவசனங்களையும்எழுதிஇருப்பதால், தண்டனைபாதியாககுறைக்கப்படுகிறது. கண்ணனின்இசையும், அண்ணாமலையின்பாடல்களும்நல்லமுறையில்வெளிவந்திருக்கின்றன. ஆனால்அவைகுப்பையில்கிடக்கும்வைரமாகபோயிருப்பதுதான்அவலம். மீராஜாஸ்மின் சாயலில்இருக்கும்ஆத்மியா, நடிப்பில்சக்கைபோடுபோடுகிறார். காதலும்குரூரமும்நொடிக்கொருதரம்மாறும்அவரதுமுகபாவங்கள்பளிச். தோழியாகவரும்புதுமுகம்காருண்யாராம்நல்லதேர்வு. நாயகனின்நண்பன்புள்ளியாகவரும்சென்ராயன், நல்லநகைவெடிகளைகோர்த்திருக்கிறார். பலே. இமான்அண்ணாச்சியும், லொள்ளுசபாசுவாமிநாதனும்அவருக்குசரியானபக்கவாத்தியங்கள். காவல்நிலையகாட்சிகள்காமெடிதர்பார். வேலைவெட்டிஇல்லாமல்ரோட்டில்சுற்றிதிரியும்ராமகிருஷ்ணனும், சென்ராயனும்சில்லறைதிருடர்கள். அடித்தபணத்தைஒரேஇரவில்காலிபண்ணிவிட்டுபோலீசிலும்மாட்டிக்கொள்ளும்அல்லக்கைகள். ராமகிருஷ்ணனைதுரத்திதுரத்திக்காதலிக்கிறாள்பணக்காரப்பெண்ணானதிவ்யா ( ஆத்மியா ) ஆனால்அவளதுதுரத்தலுக்குப்பின்னால்ஒருகாதல்இருக்கிறது. காதலனுடன்ஓடநினைக்கும்அவளதுதிட்டத்தை, திருடன்ராம்கெடுத்துவிடுகிறாள். அவன்செய்யும்கலாட்டாவால், வீடேவிழித்துக்கொள்கிறது. திவ்யாவின்காதல்க்ளோஸ். அவசரமாகவெளியேறும்காதலனும்விபத்துக்குள்ளாகி, மனநிலைமருத்துவமனையில்.. தன்காதலைக்கெடுத்து, காதலனைநோயாளிஆக்கியராமைபழிவாங்ககாதலிப்பதுபோல்நடிக்கிறாள்திவ்யா. காதல்வயப்படும்அவனை, போலீசில்மாட்டவைத்துதுன்புறுத்துகிறாள். ஆனால்காவல்அதிகாரிஜெயப்பிரகாஷின்மகளைக்கற்பழித்துகொன்றவர்களில், முக்கியமானவன்திவ்யாவின்காதலன்தான்என்கிறஉண்மைதெரியவரும்போது, ராமகிருஷ்ணனிடம்திவ்யாமன்னிப்புகேட்பதோடுபடம்முடிகிறது. பெண்களைக்குறித்தவிமர்சனவசனங்களுக்குஇளைஞர்கள்மத்தியில் எகவரவேற்பு. […]
தாரமங்கலம் வளவன் ‘அன்ன பூர்ணியம்மாள் நினைவு பெண்கள் மன நல காப்பகம்’ என்ற அந்த பெயர் பலகையை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு இறங்கினாள் லதா. சற்று தள்ளி, சாலையின் ஓரமாக, அவள் பணி புரியும் அந்த டிவி சேனலின் வேன் நின்று கொண்டிருந்தது. கேமராமேன் ரமேஷ் தன் கேமரா, ஸ்டாண்ட் மற்றும் வீடியோ பதிவுக்கான பைகளை எடுத்துக் கொண்டு இருந்தான். ஆட்டோவில் வந்ததினால் அவளுக்கு முடி கலைந்து […]
இன்பா (சிங்கப்பூர்) வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணி, வெயில் நான் போக மாட்டேனென்று முறைத்துக்கொண்டு அடம்பிடித்து நிற்க, சையது ஆல்வி ரோடு நெடுகிலும் மக்கள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்துகொண்டிருந்தனர். சாலையில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. 24 மணி நேரம் முஸ்தபா சென்டர் அந்த மிக பிரமாண்ட ஷாப்பிங் மால் திறந்திருந்தாலும் நான் எப்போது போனாலும் கூட்டமாகத் தான் இருக்கிறது என்று ஒருசிலர் முனகிக்கொண்டே போக, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நான் எரிச்சலாய், கூட்டம் இல்லாத நேரத்தில […]
சுப்ரபாரதிமணியன் ஆவணப்படத்தயாரிப்பிற்கான பணி அனுபவங்களை இனவரவியல்;, நிலவரவியல் அம்சங்களோடு “ டாக்கு நாவல் ‘ என்ற முத்திரை கொள்ளும்படி இந்த நாவலை இரா. முருகவேள் கட்டமைத்திருக்கிறார். இனத்தைப் பற்றிப் பேசும்போது நிலவரவியல் அம்சங்களும், அரசியலும் இயைந்து போவது சாதாரணம்தான். தான் சார்ந்து இயங்கும் சமூக ஆய்வுத்துறையின் அனுபவங்களைக் கொண்ட முறைப்படுத்தலில் இவை அலசல்கள், உரையாடல்கள் , எதிர்வினைகள் என்று முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஓர் ஆவணப்படத்தயாரிப்பு சார்ந்த அனுபவ விசயங்கள் அப்படம் தயாரிப்பில் சாத்தியமாகாத போது நாவலின் வெளிப்பாடு என்ற […]
சீனாவின் நட்சத்திர உலகில் பல விதமான நட்சத்திரங்கள் உண்டு. அந்த உலகிற்கு ஒரு பேரரசனும் இருந்தான். அவன் மாணிக்கப் பேரரசன் என்று அழைக்கப்பட்டான். அவனுக்கு ஏழு பெண் குழந்தைகள். அவர்களை பேரரசிப் பாட்டி கவனித்து வந்தார். அவர்களில் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு மகள், நெய்வதில் திறமை படைத்தவளாக இருந்தாள். அவள் தான் திருவோண நட்சத்திரமான ஜி நு சிங். சொர்க்கத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு பணியில் திறமை படைத்தவர்களாக இருந்தனர். ஒரு நட்சத்திரம் இதமான காற்றை வீசி […]
இப்ராஹிம் பெங்களூர். அனிமேஷன் படங்கள் என்றால் எல்லோருக்கும் தனிப்பிரியமும்,குழந்தைகள் போல இன்னும் குதூகுலமும்,அது எடுக்கப்படும் விதம் குறித்து அதன் மீது தீராவியப்பும், உண்டு.இன்றைய அனிமேஷன் படங்கள் வெறும் பொம்மைகளின் கேலிக்கூத்தாக இல்லாமல் தீவிர சினிமா ரசிகர்கள் கூட ஒதுக்கிப்போக முடியாமல் உன்னதமான சினிமாவுக்கு உண்டான ஆழமான கதை,திரைக்கதை,வசனங்கள் போன்றவைகளுடன் ஒரு மாயையான உலகை ஒன்றரை மணி நேரம் மட்டும் உண்மையென நம்பவைப்பதர்க்கான அணைத்து முயற்சிகளுடன் எடுக்கப்படுகின்றது.இதனாலேயே அனிமேஷன் படங்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது மேலும் […]