‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே. கதையா? அதே யதே – சபாபதே. கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே மதிப்புரை யெழுத ? பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான மொத்தம் 500 போல் வெள்ளைத்தாள்களில் விரைவோவிரைவில் வெளியாகிவிடும் கெட்டி அட்டையிட்ட புத்தம்புதிய புத்தகமாய். விமர்சனம் செய்வதென்றால் எனக்கு ஏற்படும் பரவசம் சொல்லிமாளாது. நாட்கணக்காய் எழுதுவேன், யாரும் கேட்கா விட்டாலும். யார் சொல்லி வீசுகிறது காற்று? நேற்றும் இன்றும் நாளையும் […]
லதா ராமகிருஷ்ணன் ’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது அலங்கார விளக்குகள் தொங்கும் அதி யகன்ற அரங்குகளில். அதனால் என்ன? அம்மாவும் சரி அன்பும் சரி முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான அதலபாதாளத்தை வென்றுவிட்டது தெரிந்தது தானே! கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை எந்தக் கவிதையும் மட்டமல்ல. _ தனக்குள் சொல்லிக்கொண்டவள் வெளியே தெரியாத தன் எளிய தாய்க்கு அவளறியாதவாறு பரிசளிக்க சிறிய பொட்டலமாய் ஒரு புத்தம்புதுக் கவிதைக்குள் பத்திரமாகப் பொதிந்துகொள்கிறாள் தானாகிய கொத்துமலர்களை! • [’இப்போது’ கவிதைத்தொகுப்பிலிருந்து கவிதை எண். […]