நல்ல காலம்

This entry is part 11 of 25 in the series 3 மே 2015

  ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்திலேயே புதிய ஆண்டில் பயிலவிருக்கும் மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கிய நேரம் அது. “என் பிள்ளைங்க இரண்டு பேரையும் இந்தப் பாலர் பள்ளியில சேர்க்கனும், இடம் கிடைக்குமா ஐயா?” “முன்கூட்டியே நீங்க வந்ததால உங்க இரண்டு பிள்ளைங்களுக்கும்   படிக்க இடம்  இருக்கு. எந்தப் பிரச்னையும் இல்லாம அவர்கள் இருவரும் இங்கே படிக்கலாம்….” “நன்றிங்கையா.என் பெயர் தமிழரசி. பிள்ளைங்க இரண்டு பேரும் இரட்டையர்களா பிறந்தவங்க.அவுங்களுக்கு வயசு நான்காவுது. மூன்றாண்டு பாலர் பள்ளி முடிந்ததும் அவர்கள் இருவரும் அருகிலுள்ள […]

பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்

This entry is part 12 of 25 in the series 3 மே 2015

    ‘பிரபல பின்நவீனத்துவ (Postmodernism) எழுத்தாளர் சாரங்கன் அவர்கள் எதிர்வரும் மாதத்தில் (20.06.2015) நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவில் இருந்து வருகை தர இருக்கின்றார். ஒரு வாரகாலம் நடைபெறும் இந்த எழுத்தாளர் விழாவின்போது அவர் என்னுடைய வீட்டில் தங்கியிருப்பார். அவருடன் கலந்துரையாடுவதற்கு வசதியாக ஒருநாள் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்படுகின்றது. கலந்துகொள்ள விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ளவும் – பாலமுருகன்’ – என்று ஒரு விளம்பரம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.   பெண்கள் பற்றியும் செக்ஸ் […]

Release of two more books in English for teenagers

This entry is part 13 of 25 in the series 3 மே 2015

  This is to inform Thinnai readers that two more English books of mine have been published by Cyberwit.net Publishers of Allahabad very recently. They are – 1        English translation by me of my locally award-winning teenagers’ Tamil novel which was chosen by the Russian writer Vithali Fournika   for translation into the Ukraine and released […]

விவேக் ஷங்கரின் ஐ டி ( நாடகம் )

This entry is part 14 of 25 in the series 3 மே 2015

  சளைக்காமல் நாடகம் எழுதுவதிலும், அதை மேடையேற்றுவதிலும் விவேக் ஷங்கரின் பிரயத்தனா குழு ஒரு முன்னுதாரணம். இப்போதுதான் “நதிமூலம்” பார்த்த மாதிரி இருக்கிறது. உடனே இன்னொரு புதிய நாடகம். இம்முறை நதிமூலம் இல்லை! நாசவேலைகளின் மூலம், பவுத்திரம் எல்லாமும்! ஹாக்கர்ஸ் எனப்படும், கணிப்பொறி வலைப்பதிவுகளில், கன்னம் வைப்பவர்களின் கதை. அதன் மூலம் சமூக விரோதிகள் தண்டிக்கப்படுவது மெசேஜ்! இன்செப்ஷன் என்று நீங்கள் கத்துவது தெரிகிறது. ஆனால் தமிழ் நாடக மேடைக்கு இந்தக் கரு ஒரு எக்ஸப்ஷன்! ஒரே […]

எட்டுத்தொகை இலக்கியங்களில் வியாபாரம் (வீதி நடை பெண் வியாபாரிகள்)

This entry is part 15 of 25 in the series 3 மே 2015

முனைவர் ந.பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1.   பழந்தமிழரின் வாழ்வியலைப் பலநிலைகளில் பழந்தமிழிலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பழந்தமிழர் மிக வளமான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைப் பொதுமையாகக் கூற வாய்ப்புகளில்லை. அன்றும் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்குப் பல்வேறு பாடுகளைப் பெரும்பாலானத் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளனர். இன்றைக்கு அதிகமாகக் காணப்படும் சூது, வஞ்சம் போன்ற மனிதமனங்களின் அழுக்கு அன்றைக்கு மிகப்பெரும்பான்மையும் இல்லை என்றே துணியலாம். பலர் வளமாக இருக்க அவர்களிடையே ஒருவர் வறுமையுற்றிருந்த நிலைக்கான சமுதாய மற்றும் […]

போன்சாய்

This entry is part 16 of 25 in the series 3 மே 2015

ஹரீஷ் “இன்னும் கொஞ்சம் ஹீல் இருக்கற மாதிரி கட் ஷூ குடுங்க” . ஒவ்வொரு முறையும் பாயிடம் சொல்லும் அதே வார்த்தை தான். ஒவ்வொரு முறையும் பார்ப்பது போலவே இந்த முறையும் அதிசயமாகப் பார்த்தார். அவனுக்குப் பழகி விட்டது. இது போன்ற பார்வைகள்.பாய் அந்த மாதிரிப் பார்த்தவுடன் கீழே ஷூவைப் பார்க்கக் குனிவது போல் குனிந்து கொண்டான். பள்ளி முடியும் வரை இது ஒரு பெரிய விஷயமாகத் தெரிந்ததே இல்லை அவனுக்கு. பள்ளி முடிந்து புது கல்லூரியில் […]

மஞ்சுளா கவிதைகள் – ஒரு பார்வை ” மொழியின் கதவு ” தொகுப்பு வழியாக …..

This entry is part 17 of 25 in the series 3 மே 2015

    மதுரைக்காரரான மஞ்சுளாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது ! இதில் 50 கவிதைகள் உள்ளன. ” அவள் என் தாய் ” ஒரு வித்தியாசமான கருப்பொருள் கொண்ட கவிதை. கருவில் உள்ள ஒரு குழந்தையின் எண்ணங்களின் பதிவாகக் கவிதை தொடங்குகிறது. மிக எளிய நடையில் கவிதை வளர்கிறது. அசைந்து… அசைந்து அவளுள் உரசிக்கொண்டே அவளிடம் பேசுகிறேன் அவள் என் அசையை ரசித்தபடி பொறுத்திருக்கிறாள்   குழந்தை பிறந்துவிடுகிறது, தாய் தூக்கத்தில் இருக்கிறாள். அவள் என்னைப் […]

இந்த கிளிக்கு கூண்டில்லை

This entry is part 18 of 25 in the series 3 மே 2015

  மழை சாரல்கள் திண்ணையை நனைத்திருந்தன. வெகுமழை பெய்யும் போதோ மழைக்காலங்களிலோ திண்ணை இப்படிதான் நனைந்து விடுகிறது. இரண்டு நாட்களாக வன்மமாக.. மிதமாக.. இதமாக.. தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்த மழை தனது அடையாளத்தை சரிவர பதித்து விட்ட திருப்தியில் சற்று இடைவெளி கொடுத்திருந்தது. இருண்ட மேகங்கள் சற்றே நகர்ந்தில் பகல்; பளிச்சென்றிருந்தது. மரங்களின் இடையே புகுந்த காற்று சிலிர்ப்பான அசைவுகளாய் வெளியேறிக் கொண்டிருந்தது. தோட்டத்துடன் கூடிய வீடு.  கதவை திறந்து வெளியே வந்தாள் வினயா. கனத்திருந்த […]

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4

This entry is part 19 of 25 in the series 3 மே 2015

  மங்கலான தெருவிளக்கின் வெளிச்சத்தில் குறுகிய அந்த தெருவில் நடந்தாள் யாழினி. அவள் வீட்டின் முன் தெருமக்கள் குழுமியிருக்க, அங்காங்கே சிலர் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.   வயிற்றை பிசைந்து குடல் தொண்டையில் ஏறுவதைப் போன்று அடைத்தது யாழினிக்கு.   அருகில் வந்த சகாதேவன் இப்பதான் வரியா யாழினி என்றான்   “ம் என்னாச்சு, அம்மா அப்பா எங்க சகா,” என்றாள் யாழினி. சகா தேவன் எதிர்வீட்டில் வசிப்பவன் சம வயதுடையவன், தூரத்து உறவில் […]

வைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்

This entry is part 20 of 25 in the series 3 மே 2015

  “அவள் ஞாபகத்திற்காகக் குடிக்க ஆரம்பித்தேன்.”   சரக்கு அடுக்குவதற்காக மேலே ஜிங்க் ஷீட் போர்த்தி நீளக் கிடங்கு போல் கட்டப்பட்டிருந்த அந்தக் கிராமத்துக் கடை மாடியில் ராமகிருஷ்ணன் சொன்னான்.   நிலா வெளிச்சம் பெரிதாய் விரித்திருந்த பாயில், முழ உயரத்தில் ஒரு பச்சைப் பாட்டில், மினுமினுக்கின்ற இரண்டு எவர்சில்வர் டம்ளர்.   முறுமுறுவென்று ஓசையிடும் ஓர் உடைத்த கோலி சோடாப்புட்டி. ஒரு தட்டிலே வாணியம்பாடி கடையில் வாங்கிய காராபூந்தி.   இந்தப் பின்னணியில் அவன் சொன்னது […]