கவிதைகள்

This entry is part 19 of 28 in the series 5 மே 2013

உளி   அவர் பயன்படுத்திய சூரல் நாற்காலி அனாதையாய் கிடந்தது அவர் மணி பார்த்த கடிகாரம் இன்றும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது பத்திரிகை தலையங்கங்களில் பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை காலையில் சூரியன் உதிப்பதும் மாலையில் மறைவதிலிருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை ஆஷ்ட்ரேவில் சாம்பல் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது அவர் பயன்படுத்திய அத்தனையையும் தீயிலிடுவது இயலாத காரியமாயிருந்தது எழுதுகோல் எழுதித் தீர்க்க காகிதத்தை எதிர்பார்த்திருந்தது கவிதை தன்னையே எழுதிக் கொள்ள அவர் சிதையில் தீயை மூட்டியது.     […]

இன்னொரு எலி

This entry is part 18 of 28 in the series 5 மே 2013

எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு?   எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும்.   சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும்   புத்தகங்களின் தராதரம் தெரியவில்லை அதற்கு.   எழுதப் படிக்கத் தெரியாத அற்பம் அது.   சினந்து கவிதை எழுதி சபித்து விடலாம் அதை.   ஆனால் அதற்கு கவிதையை இரசிக்கத் தெரியாது. சுட்ட தேங்காய் ருசி தான் தெரியும்.   திருத்த முடியாது எலியை. எப்படியும் பிடித்து விட வேண்டும்.   வன்மம் கூடிய இரவில் […]

துறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பு

This entry is part 17 of 28 in the series 5 மே 2013

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் 150, விலை : ரூ60   எந்தக் காலத்திலும், எந்த மொழியிலும் இயற்கையின் வண்ணங்கள் வடிவங்கள், அர்த்தப்பரிமாணங்களால் ஆட்கொள்ளப்படாத, இயற்கை சார்ந்த உவமான உவமேயங்கள், உருவகங்கள், குறியீடுகளைக் கையாளாத கவிஞர்களே இல்லையெனலாம். இயற்கையை அதன் அழகுக்காக ஆராதிப்பவர்கள் உண்டு. இயற்கைக் காட்சிகள், நிகழ்வுகள், சுழற்சிகளிலிருந்து வாழ்க்கைத் தத்துவங்களை உள்வாங்கிக்கொண்டவர்கள் உண்டு. வாழ்வில் வரவாகும் காயங்களுக்கெல்லாம் வலிநிவாரணியாக இயற்கையைத் தஞ்சமடையும் நெஞ்சங்களும் உண்டு.   சில கருப்பொருள்களைக் கையாண்டால் உடனடி தனிக்கவனம் கிடைக்கும். […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! 4

This entry is part 16 of 28 in the series 5 மே 2013

    நான் அங்கயே தலையால அடிச்சுண்டேன் கேட்டியோடா நீ….இப்பப் பாரு அந்தப் பொண்ணோட அப்பா எவ்வளவு இளக்காரமா நம்மளப் பார்த்து வெளில போங்கோன்னு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத  குறை தான்….எப்படிப் பேச்சாலயே உந்தித் தள்ளினார்  பார்த்தியோன்னோ …? நேக்கு எப்படி இருந்தது தெரியுமா? ரத்தம் கொதிச்சது…ஏற்கனவே நேக்கு ரத்தக் கொதிப்பு….இந்த மாதிரி அவமானமெல்லாம் என் வாழ்கையில வந்ததில்லை.நோக்கோசரம் நான் இப்போ இவர்கிட்ட இது மாதிரி  அவமானத்தையும் தாங்க வேண்டியதாப் போச்சு….உன்னைச்  சுமந்து பெத்தவளாச்சே……அதான்  நேக்கு நெஞ்சு […]

ஆனந்தயாழ் – தங்கமீன்கள்

This entry is part 15 of 28 in the series 5 மே 2013

  ‘கற்றது தமிழ்’ போலவே வரிகளுக்கும் ராகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்தனை பாடல்களிலும், பின்னணி இசை அடக்கியே வாசிக்கிறது. தெரியாத இசைக்கருவிகள் கொண்டு இசைக்காது எப்போதும் வழமை போல இருக்கும் சாதாரண கருவிகள் கொண்டே இசைக்கப்பட்டிருக்கிறது. மெல்ல இறங்கும் விஷம் போல தன்னையறியாமல் எனக்குள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளுக்குள்ளே ஊறிப்போய் வழியும்போது புறங்கையை கொஞ்சம் சுவைத்துப்பார்க்கவே தோணும் தேன் குடித்தவன் நிலையில் இப்போது நான், இது ஒரு புதிய அவதாரம் யுவனுக்கு. ‘கற்றது தமிழ்’, ‘பருத்திவீரன்’, […]

தெளிதல்

This entry is part 14 of 28 in the series 5 மே 2013

    ஏமாற்றத்தின் சலனங்களோடு மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும் அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம் இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள் மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை   மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள் ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும் மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து […]

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)

This entry is part 13 of 28 in the series 5 மே 2013

  நான் முதன் முதலாக 1961-ல் செல்லப்பாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கு திரிகோணமலையிலிருந்து வந்திருந்த தருமு சிவராமுவை, செல்லப்பாவின் வீட்டில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன். அது எனக்கு எதிர்பாராத  மகிழ்ச்சி தந்த ஒரு சந்திப்பு. திரிகோணமலையிலிருந்து வந்தவருக்கு தமிழ் நாட்டில், சென்னையில் யாரைத் தெரியும்? எழுத்து பத்திரிகையைத் தெரியும். அதன் ஆசிரியர் செல்லப்பாவைத் தெரியும். செல்லப்பா அப்போது என்ன, எப்போதுமே சம்பாத்தியம் என்பது ஏதும் இல்லாத மனிதர். வத்தலக்குண்டுவிலிருந்து சென்னைக்கு எழுத்தாளராகவே வாழ வந்தவர். க.நா.சு […]

நிழல்

This entry is part 12 of 28 in the series 5 மே 2013

உன் குற்றப்பத்திரிக்கையின் கூர்முனையிலிருந்து வெளிவரத்துடிக்கிறதொரு நிழல் உன் புறக்கணிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் எனதிந்த உடலை திண்ணத் தொடங்க கொடூரத்தின் கோரத்திலும் புன்னகித்தபடியே கடக்கிறது வன்முறையொன்று ப்ரியத்தின் பொருட்டு வழக்கொழிந்து போவதாய் வழமை போலவே நினைக்கிறது அது புலங்கப்படா பாதையில் படிந்திருக்கும் தூசிதனை தட்டியெழுப்புவது போல் இருக்கிறது நினைவின் தடம் செய்யத்துடிக்கும் அனைத்திலும் செயலின்மையை கைக்கு கொடுக்கிறது கையாளாக அன்பு இறுகப்பற்றுதலிலோ நீண்ட முத்தத்திலோ சில துளி கண்ணீரிலோ மீட்டெடுக்கலாமென நினைக்கையில் மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது அந்நிழல்   ரேவா

அரிசிபருப்பு சோறு: சுப்ரபாரதிமணியன்

This entry is part 11 of 28 in the series 5 மே 2013

* நாவல்= ஆகஸ்ட் 15 : குமரி எஸ். நீலகண்டன் ஆகஸ்ட் 15  நாவல் : வித்தியாசமான வடிவம் . இணையதள பக்கங்கள், அவற்றின் பின்னோட்டம் என்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இதில் காந்தியின் உதவியாளர் கல்யாணசுந்திரத்தின் வாழ்க்கை அனுபவங்களும் இளம் வயது சத்யாவின் சில பக்கங்களும் இந்த புது வடிவத்தில்  சொல்லப்பட்டிருக்கின்றன.கல்யாணத்தின் தீவிர அனுபவங்கள் பெரிதாய் ஆக்கிரமிக்கின்றன. சத்யாவின் அனுபவங்கள் வயது காரணமாக சற்றே மேலோட்டமானவை. இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பது கல்யாணம் மூலம் காந்திய நெறிகள் வலியுறுத்தப்படுவது, அதை இளைய தலை […]

“ 13 ”

This entry is part 10 of 28 in the series 5 மே 2013

  “முனுசாமி….முனுசாமி…! ” “அட….மாரிமுத்துவா….? என்னப்பா…..சவுக்கியமா…?” மனைவிக்கு உதவியாக சனிக்கிழமை சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த முனுசாமி  தன் கையில் வைத்திருந்த கூடையை மனைவியிடம் கொடுத்துவிட்டு அழைத்த நண்பனை நோக்கிச் செல்கிறார் முனுசாமி. “நல்ல சவுக்கியமா இருக்கேன் முனுசாமி…..!” சந்தித்து பல வருடங்களாகியும்,தன்னை நினைவில் வைத்திருக்கும் நண்பனை நோக்கி ஆவலுடன் செல்கிறார் மாரிமுத்து. “சௌக்கியத்துக்கு என்னப்பா குறை மாரிமுத்து….?ஆண்டவன் புண்ணியத்தால நான் நல்லா இருக்கேன்…!” முனுசாமி தன் பால்ய நண்பனைக் கண்ட மகிழ்வில் அவரைக்கட்டிப் பிடித்துக் கொள்கிறார் […]