human zoo போல மனிதர்களை அடைத்து ஐரோப்பிய மேற்குடி மக்களுக்கு காட்சி படுத்திய காலனியாதிக்கத்தை விதந்தோதும் முரசொலி பத்தி எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கும் இடதுசாரி கேரள அரசாங்கம், கேரள பழங்குடியினர் என்ற பெயரில் சிலருக்கு வேடமிட்டு கேரளீயம் கொண்டாடுகிறார்கள். இதுதான் அந்த கேரள பழங்குடியினராம். இடுப்பில் நார்களை கட்டிகொண்டு முரசுகளை வைத்துகொண்டு கழுத்தில் வினோதமான சங்கிலியை அணிந்துகொண்டு முகத்தில் ஏதோ கேரளாவுக்கு சம்பந்தமில்லாத டிசைன்களில் வரைந்துகொண்டு இருக்கும் இவர்கள்தான் கேரள பழங்குடியினராம். எந்த கேரள பழங்குடியினர் இது […]
“அப்பா, நீ குளிக்கப் போகலாம்…” என்றவாறே வெளிப்பட்ட ரமேஷைப் பார்த்து ‘தலையை அழுந்தத் துடை’ என்றான். சென்ற வருடம்வரை இவன்தான் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் வேண்டாம் என்கிறான். உடம்பைத் தொட்டுத் துடைத்தால் கூச்சப்படுகிறான். ஒரு நாள் அவன் தலையில் கைவைத்துப் பார்த்தபோது, சொட்டச் சொட்ட ஈரம் தென்பட்டது. “இந்தத் தண்ணீர் அப்டியே தலைல இறங்கும்…சளி பிடிக்கும்…அதனால ஈரம் போகத் துடைக்கணும்…புரிஞ்சுதா?” – என்றவாறே நன்றாகத் துவட்டிவிட்டான். வேண்டாம் என்று சொல்லும்போது தினமும் எப்படித் துடைப்பது? அந்தச் சிறு […]
கர்ப்பூரம் நடுராத்திரிக்கு இரண்டு பிசாசுகளைக் கண்டான். அவன் படுக்கையில் அவன் தலைமாட்டில் ஒன்றும் கால்மாட்டில் இன்னொன்றுமாக துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தன அவை. அவற்றின் கண்கள் குழிந்திருந்தன. பாதி திறந்த இமைகளில் பீழை கனமாக ஒட்டியிருந்தது. வாய் தான் முழு துர்நாற்றத்துக்கும் காரணம் என்று தெரிய வாய் திறந்து வாச்சி வாச்சியாக நான்கு வரிசை மஞ்சள் பல் காட்டி ஏன்யா என்று ஒரு பிசாசு சத்தம் தாழ்த்தி அழைத்தது. கர்ப்பூரம் பின்னால் இருக்கிற யாரையோ கூப்பிடுகிறது […]
குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் […]
https://youtu.be/_7pZAuHwz0Eசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ ********** சுழலும் புவிக் கோளைச்சுற்றும் நிலவின் பின் முகத்தைநாசா துணைக்கோள்முதன்முதல் படமெடுக்கும் !இதுவரை தெரியாத பின்புறம்இப்போது கண்படும் !சைனா 2020 இல் நிலவின்பின்புறம் காண விண்ணுளவி அனுப்பும்.அண்டவெளிப் பயணம் செய்துவிண்வெளியில் நீந்திவெற்றி மாலை சூடி மறுபடிமண்மீது கால் வைத்தார்சைன விண்வெளித் தீரர் !அமெரிக் காவின்விண்வெளி வீரர் போல்விண்சிமிழில் ஏறிவெண்ணிலவில் தடம் வைக்கமுயற்சிகள் நடக்கும் !நிலவைச் சுற்றி வந்துமனிதரில்லா விண்சிமிழ் ஒன்றுபுவிக்கு மீண்டது .இன்னும்ஐந்தாறு ஆண்டுகளில்சாதனை யாகச் சைனத் […]
எஸ் ஜெயலஷ்மி 48. ஆலம் அமர் கண்டத்து அரன் ——-ஆலகால விஷத்தைத் தன் கழுத்திலே கொண்ட சிவன் தேவர்களும் அசுரர்களும் கூடி திருப்பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப் பட்டது. அதன் வெம்மையைத் தாங்க முடியாமல் தேவர்கள் முறையிட்டபோது சிவன் அந்த விஷத்தை விழுங்கினார்.இதைக் கண்ட உமாதேவியார் தடுக்க அவ்விஷம் சிவனின் கழுத்திலேயே தங்கி விட்டது. சிவன் நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார். ஆலம் அமர் கண்டத்து அரன், ஆலமர […]
ஆர் வத்ஸலா சிறு வயதில் மும்பை திரையங்கில் அப்பா அம்மாவுடன் 10 மணி காட்சியில் ‘ஜெமினி’யின் ‘ஏ.வி.எம்.’ மின் தமிழ் படம் பார்க்கையில் இடைவேளையில் வெவ்வேறு அழகான நிறங்களில் கண்ணாடி தம்ளர்களில் விற்கப்பட்ட திரவங்களின் (கற்பித்துக் கொண்ட) ருசி நாற்பது வயதில் முதன்முதலாக வீட்டில் கலர் படம் பார்க்கையில் நானே செய்த மாம்பழ மில்க் ஷேக்கில் காணவேயில்லை தெருவோர சாக்கடைக்கு மிக அருகில் இயங்கும் தள்ளுவண்டி ‘பவனை’ தாண்டிப் போகையில் மூக்கைத் துளைக்கும் வாசனையுடைய வெங்காய பஜ்ஜி […]
ஆர் வத்ஸலா அம்மா போன பின் நான் எப்படி காபி கலந்தாலும் ‘ஒங்கம்மா போட்றா மாதிரி இல்லெ’ என்பார் என் அப்பா சாகும் வரை மாய்ந்து போனாள் அம்மா அப்பாவின் அம்மா போடும் காபி போல் அவளுக்குப் போடத் தெரியவில்லை என்று அப்பா தினமும் சொல்வதை சொல்லிச் சொல்லி