[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 10 & படம் : 11 ++++++++++++++++++++++++++++++++++++++++ காட்சி மூன்று ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம். நேரம்: மாலை அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை […]
பவள சங்கரி “எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாய் நீ? உனக்கு என்ன பிரச்சனை? என்னால் உனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? எப்படி உதவ முடியும் உனக்கு நான்? ஏன் என்னை இப்படி சுற்றிச் சுற்றி வருகிறாய்? என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் மச்சி….?” “ஓ, இதுதான் உன்னோட பிரச்சனை மீத்து.. எதுக்கு இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கறே. அதுவும் மச்சினெல்லாம் சொல்றே ஃபிரண்ட்ஸ்குள்ளதான் இப்படியெல்லாம் பேசுவாங்க. இல்லேனா அக்கா ஹஸ்பண்டை […]
டாக்டர் ஜி. ஜான்சன் பனம்பழத்தின் சுவையே தனி. அதன் மணமும் அப்படியே. இனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும் நாரையும் கொண்டது பனம்பழம். பனம்பழம் எப்போதும் கிடைக்காது. வருடத்தில் சில மாதங்களில்தான் அது கிடைப்பதுண்டு. அப்போதுதான் கிராமங்களில் நொங்கு, பதநீர் எளிதில் கிடைக்கும். பனை மட்டைகளில் மடித்து நொங்கு விற்பார்கள். மண்பானைகளில் பதநீர் கொண்டுவருவார்கள். பனம்பழம் அப்படி கொண்டு வந்து […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா இதுதான் பெண்ணின் வடிவழகு, அந்த வடிவி லிருந்து தான் வெளிப்படும் உச்சி முதல் பாதம் வரை தெய்வத்தைச் சுற்றியுள்ள ஒளிவட்டம் ! தவிர்க்க முடியாக் கடும் கவர்ச்சி அந்த வடிவி லிருந்து தான் முந்துகிறது ! துணையற்ற நீர் ஆவிபோல் என்னைத் தன்வசம் இழுத்திடும் அவ்வடிவ உயிர்ப்பு ! என்னையும் அவ்வடிவையும் தவிர மற்ற எல்லாம் அப்புறம் விழுகின்றன ! கலைகள், நூல்கள், காலம், மதம், கண்ணுக்குத் […]
கம்பன் உறவுகளே வணக்கம் திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை அனுப்பியுள்ளேன் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். கவிஞா் கி. பாரதிதாசன் Vallalar – 2
– நரேந்திரன் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா சாலைப் பயணிகளுக்கு ஒரு ஆபத்தான இடமாக இருந்தது. பயணம் செய்யும் பல நூற்றுக் கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கானவர்கள் எந்தத் தடையமும் இன்றி மறைந்து போனார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாரும் அக்கறையெடுத்து விசாரிக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்தார்கள். காளியை வழிபடும் ஒரு பெரும் ரகசியக் கூட்டமொன்று இப்பயணிகளைக் கொல்வதாக வந்த வதந்திகளையும் பிரிட்டிஷ் […]
புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 32.உலகின் சிறந்த சிறுகதையாசிரியராகத் திகழ்ந்த ஏழை…….. “பெத்து எடுத்தவதான் என்னயே தத்துக் கொடுத்துப்பிட்டா பெத்த கடனுக்குத்தான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா பெத்தவ மனசு கல்லாச்சு பிள்ளையின் மனசோ பித்தாச்சு இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு போன வில்லாச்சு” என்னங்க […]
பாவண்ணன் வீட்டுக்குள் நுழைந்து அலுவலகப்பையை ஆணியில் மாட்டும்போதே “ரெண்டு தரம் அட்ட வந்துவந்து ஒன்ன தேடிட்டு போனாண்டா” என்றாள் அம்மா. திரும்பி அம்மாவை முறைத்தேன். சட்டைப்பையில் இருந்த கைப்பேசியை மேசைமீது வைத்துவிட்டு உட்கார்ந்தேன். “எங்களுக்குள்ள கூப்ட்டுக்கறதுக்குத்தான் பட்டப்பேரு, ஒனக்கு கெடயாதுன்னு எத்தன தரம் சொன்னாலும் எப்படித்தான் மறந்துபோவுமோ தெரியலை” என்றேன். அம்மா சிரித்தபடியே தலைமுடியை ஒதுக்கிக்கொண்டு “சரிடா, ரொம்பத்தான் முறுக்கிக்காத. ஒன் அரும கூட்டுக்காரன் கோபால் வந்துட்டு போனான். போதுமா?” என்றாள். பிறகு, ‘ஒன்ன செல்லுல கூப்ட்டானாம். […]
மருத்துவக் கட்டுரை கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகிறது. ஆனால் மது அருந்துவோருக்கு கல்லீரல் கரணை எனும் உயிருக்கு உலை வைக்கும் நோய் உண்டாகிறது. இது நோய்க் கிருமிகளால் உண்டாவது அல்ல. முழுக்க முழுக்க மது அருந்துவதால் மட்டுமே ஏற்படுவது. மதுவை உடைத்து உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த […]
நான் யாரு? மாடியில் துணி காயபோட்டுவிட்டு அவரும் அவர் மனைவியும் கீழே இறங்கி கொண்டிருந்தார்கள் “ஏங்க நான் கடைக்கு போய் காய் ஏதாவது வந்திருக்கான்னு பார்த்திட்டு வாங்கி வாரேன். நீங்க வீட்டுக்கு போங்க ” கடைசி படி இறங்கி மனைவி கடைக்கு போவதை வெறிக்க பார்த்துவிட்டு திரும்பியவரின் மண்டையில் மின்னலேன சின்னவலி வந்து போய் சரியாயிற்று. நடந்து சென்ற அவர் கதவை திறந்து உள்ளே நுழைய எத்தனிக்கையில் “சார் என்ன வேண்டும் நான் இங்க இருக்கிறேன் ” […]