தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 135. மருந்தியல் நான்காம் வருடத்தில் இன்னொரு பாடம் மருந்தியல் ( Pharmacology ). மருத்துவப் படிப்பில் இது மிகவும் முக்கியப் பிரிவாகும். நோயின் தன்மையைக் கண்டறிந்தால் மட்டும் போதாது. அதைக் குணப்படுத்துவது இன்றியமையாதது. அதற்கு சரியான மருந்துகள் தந்தாகவேண்டும். அப்போதுதான் நோய் குணமாகும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எவ்வளவுதான் சிறப்பாக ஒரு மருத்துவர் நோயின் உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் வல்லுனராக இருந்தாலும், அதை அவர் சரியான மருந்துகள் மூலம் குணமாக்கினால்தான் […]
அழகர்சாமி சக்திவேல் மாமன் மீசை மழித்து அத்தை ஆனால்? அவள் திருநங்கை.. சில ஆண்குலம் ஏக்கத்தில் சப்புக்கொட்டி ஜொள்ளு விடும்.. சில ஆண்குலம் எரிச்சலில் உச்சுக்கொட்டித் தள்ளி விடும்… அத்தை மீசை வளர்த்து மாமன் ஆனால்? அவன்தான் திருநம்பி.. சமூகம் இன்னும் சரியாய்ப் புரிந்து கொள்ளாத ஊமைகள்.. உலகச் சுவற்றில் புரியாத கோடுகளால் வரையப்பட்ட புதிரான மாடர்ன் ஆர்ட்கள். நானும் ஒரு திருநம்பி.. வளர்ந்த தாடி மயிரைச் சிரைப்பதற்கு சலூன் செல்ல முடியவில்லை. கடைக்குச் சென்று பிளேடு […]
தினேசுவரி,மலேசியா உன் கொலைகளில் ஒன்றில் மரணித்தவள்தான் நான்… இரத்தம் சுண்டி என் நரம்புகள் இருகி மீண்டு வந்தேன் மரணம் தாண்டி… இனி மீண்டும் மீண்டும் நீ கொலை செய்வதால் இறக்கப் போவதில்லை நான்… இருத்தலின் வலியும் இல்லாதலின் வலியும் வெள்ளை கருப்பாய் மாறி மாறி நல்லதில் கெட்டதும் கெட்டதில் நல்லதுமாய் தத்துவம் தாண்டி எல்லாமே இங்கு திட்டுத் திட்டாய்… என் வார்த்தைகளை விழுங்கினாய் கத்தி தொலைகிறேன்… கேட்டு தெளிதலும் கெட்டு தெளிதலும் இங்கு கோட்பாடுகள் அல்ல முரண்பாடுகள் […]
பொன் குலேந்திரன் -கனடா அன்று என் தாயார் இறந்ததினம். கன்னி மேரியின் தேவாலயத்துக்குப்; போய் அவர் நினைவாக மெழுகுவரத்தி ஏற்றி பிரார்த்தனை செய்துவிட்டு தேவாலயத்துக்கு அருகே உள்ள இடுகாட்டுக்குப் போய், மலர் வலையம் வைக்கச் சென்றேன். என் பெற்றோர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாது கன்னி; மேரி தேவாலயத்துக்குப் போய்வருபவர்கள். அதனால் தேவாலயத்துக்கு அருகே உள்ள இடுகாட்டில் தாங்கள் இறந்த பின் தங்கள் உடல்களை அருகருகே அடக்கம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் எனக்கு இட்டக் கட்டளை. […]
வளவ. துரையன் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து] பேராசிரியர் திருமிகு ம.இலெ. தங்கப்பா அவர்களின் படைப்புகளின் அடிப்படைகள் அன்பு, அறம் மற்றும் இயற்கை என உறுதியாகக் கூறலாம். நான் இத்தனை உறுதியாகக் கூறக் கரணியம் யாதெனில் அப்பெருமகனாரை நான் பல்லாண்டாக அறிவேன். அவரை நெட்டப்பாக்கம் பள்ளியில் பணியாற்றும் காலந்தொட்டே வளவனூர் அர. இராசாராமன் அவர்களுடன் சென்று சந்தித்திருக்கிறேன். குறிப்பாக முதலில் நான் சென்றபோது அவர் தென்மொழியிலிருந்து விலகியிருந்த நேரம். தென்மொழியாசிரியர் எழுதிய “ஐயை” […]
J.P. தக்சணாமூர்த்தி 1930 களில் தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதா மாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்ட்ரி பவுடர் அதாவது பசை மாவு. நீண்ட காலமாக பசைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டால், மைதா மாவு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. பசை பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா, கோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு மாவாக்கப்படுவது தான். இது […]
சோம.அழகு நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் அத்தனை மனிதர்களையும் கவனிக்கும் சாத்தியக்கூறு இல்லை. இருப்பினும் சிலர் நம்மிடம் தங்கள் இருப்பைப் பதிவு செய்வதுண்டு. சில சமயங்களில் அறிவுக்கு அப்பாற்பட்டு உணர்வு மட்டுமே இதற்குக் காரணியாக அமையலாம். அவ்வாறே குழந்தைப் பருவத்தில் என்னுள் பதிவேறிய, சமூகத்தின் பார்வையில் பெரும்பாலும் தப்பிச் செல்கிற ‘சைக்கிள் அங்கிள்’ஐ வாசகர் முன் நிறுத்த முனைந்தேன். என்னுடைய ஏழு வயதில் எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தரப்பட்டது. அன்று முதல் சைக்கிள் அங்கிள் எனக்கு அறிமுகம். […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com சீவகசிந்தாமணி காப்பிய காலத்தில் ஆண்களும் பெண்களும் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறான நம்பிக்கைகள் நிலவியது. இந்நம்பிக்கைகள் அவர்களின் உள்ளக்கிடக்கையினைப் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன. பெண்கள் மலைக்குச் சென்று தவம் செய்தால் நல்ல மைந்தர்களைப் பெற்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை அக்காலத்தில் நிலவியது(465). ஈடும் இணையுமற்ற குழந்தைகளைத் தவத்தால் மட்டுமே பெற இயலும் என்று அவர்கள் நம்பினர்(467) பெண்கள் […]
தில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாத இலக்கியச் சந்திப்பு பேச்சாளர் பெரியார் இன்று, 50. நிமிடம். பேரா. இராஜன் குறை திரைத்துறை, முதன்மையர், பண்பாடு மற்றும் படைப்பாக்கப் புலம், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. கலந்துரையாடல் – 30 நி 10 செப்டம்பர் 2016, சனிக்கிழமை, பிற்பகல் சரியாக 3 மணிக்கு பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக! […]
சேலம் எஸ். சிவகுமார் காலையின் அமைதி – வெள்ளை மனதில் நீல மலர்களாய் நினைவின் சாரலாய்ப் பொங்கித் ததும்பும் இன்ப அலைகளாய் ! மாலைச் சூரியன் மறையும் வரையில் மாசில் இதயக் கூட்டில் ஆத்மா மயங்கிக் கிடக்கும் பிரிவை நோக்கி ! இரவுத் தாய்மடிக் குழந்தை நிலவின் இனிமைச் சிரிப்பு இருளைக் கிழிக்கும் ; வளர்ந்த சிரிப்பால் வானமும் தாரகைக் கண்கள் சிமிட்டிப் பூமியைத் தழுவும் ! புன்னகை விரியும் பொன்னுலகதிலே புதுப்புதுக் கனவுடன் இதயம் உறங்கும் […]