கவிதைகள் – நித்ய சைதன்யா

This entry is part 12 of 24 in the series 1 நவம்பர் 2015

நித்ய சைதன்யா 1.வாசனை வாசனை நேற்றின் சாவி நாசி மோதிய சிகரெட் புகை திறந்து காட்டிற்று பால்யத்தின் கட்டடற்ற நாட்களை உலகை சுத்திகரிக்கும் தினவுசூழ அச்சமற்ற நீரோட்டம் விரும்பிய பாவனைகளை விரும்பிய போதெல்லாம் அணியலாம் காலையில் விட்டுவிடுதலையான இருப்பு உத்வேகம் தள்ளிய வீதிஉலா பொன்வெயிலில் நட்சத்திரங்கள் விழிக்கும் சமயம் உன் பின்னால் விழியடி வேண்டி வாசனை இன்றின் துயரம் கடந்து சென்ற மரிக்கொழுந்தில் உன் விசுவரூப தரிசனம் நுகத்தடி புதைத்தது போக செக்குமாட்டுத்தனத்தின் இன்றில் பேருவகை உன்னில் […]

வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்

This entry is part 22 of 24 in the series 1 நவம்பர் 2015

  வெங்கட் சாமிநாதன் (1933-2015) எப்போதும் ஒற்றை ஆள் போர்ப் படையாகத்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைப்  பெயர், புகழ், பணம், சமூக அந்தஸ்து ,கூட்டம்  இத்தியாதிகளால் நெருங்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவரது இயல்புதான். ஐம்பது வருஷங்களுக்கும் மேலாகப் பேனா பிடித்த கை சஞ்சலத்துக்கு ஒரு பொழுது கூட ஆளானதில்லை. விமரிசனம் என்றால் விமரிசனம்தான் என்ற கறார்த்தனம் மேலோங்கிக் காணப்படும் எழுத்து அவரது. இதனால் நட்புக்கள் நொறுங்கிப் போயின. அப்படிச்  சொல்வது கூட சரியில்லை. நட்புக்கள் என்று […]

வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை

This entry is part 23 of 24 in the series 1 நவம்பர் 2015

21.10.2015 அன்று வெங்கட் சாமிநாதன் இயற்கையெய்தினார். அவருடைய விழிகள் தானமாக வழங்கப்பட்டன. அவருடைய உடல் அன்றைய நண்பகலிலேயே பெங்களூரு ஹெப்பாள் மின்தகன மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது. அவருடைய உடலை தகனமையத்தின் வண்டியில் ஏற்றும்போது ஆறேழு நண்பர்கள் மட்டுமே இருந்தோம். தகன மையத்தில் மேலும் ஆறேழு நண்பர்கள் காத்திருந்தார்கள். அஞ்சலி செலுத்தும் விதமாக நின்றுகொண்டோ அல்லது உட்கார்ந்துகொண்டோ பேசுவதற்கு அந்த இடம் சிறிதும் பொருத்தமாக இல்லை. வேறொரு நாளில் அந்த நிகழ்ச்சியை விரிவாகவே நடத்தவேண்டும் என நண்பர்களும் […]

எல்லையைத் தொட்டபின்பும் ஓடு!

This entry is part 13 of 24 in the series 1 நவம்பர் 2015

நிலாவண்ணன் அந்த வலி நிரம்பிய செய்தியைக் கேட்டவுடன் செண்பகம் ஒரு நிமிடம் தடுமாறிப் போனாள். அந்தத் தடுமாற்றம் மருத்துவர் கூறிய செய்தியிலிருந்தும் அவர் காட்டிய அறிக்கையிலிருந்தும் ஏற்பட்டிருந்தது. “டாக்டர் உங்களுடைய அறிக்கை மிகச் சரியானதுதானா… ஒரு தாய் என்னும் முறையில் என்னால நம்பவே முடியலையே… இது ஏன் பொய்த்துப் போகக் கூடாது…?” செண்பகம் அந்தக் கை தேர்ந்த மருத்துவரைப் பார்த்துத் தன் மன ஆதங்கத்தை வெளியிட்டாள். அவளைக் கூர்ந்து நோக்கிய டாக்டர், “இல்லம்மா, உங்க மகளோட ரிபோர்ட்ல […]

கரடி

This entry is part 3 of 24 in the series 1 நவம்பர் 2015

0 Bears have been used as performing pets due to their tameable nature. கொஞ்சம் கரடிக்கு முஸ்தீபு 0 தண்டலம் வழியாக நரசிங்கபுரம் போகும் வழியில், இடது பக்கம் திரும்பினால், ஒரு பழங்கால சிவன் கோயில் இருக்கிறது. சிவன் தன் பக்தனுக்காக ரதம் ஓட்டியதாகவும், அது ஒரு கட்டத்தில் மண்ணில் புதைந்தபோது, சிவனே இறங்கி அதன் சக்கரத்தைத் தூக்கி நிறுத்த முயற்சித்தாகவும், அப்போது கடையாணி சிவன் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் ஐதீகம். […]

சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.

This entry is part 14 of 24 in the series 1 நவம்பர் 2015

அன்புடையீர் வணக்கம். சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழ் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது. இதழில் வெளியாகியுள்ள அஞ்சலிகள் , படைப்புகள்: வெ.சா- இறுக்கங்களும் நெகிழ்வுகளும் கலந்த ஒரு நினைவுப் பயணம் – கி. பென்னேஸ்வரன் வெ.சா என்ற வெங்கட் சாமிநாதன் – எனது நினைவுகள் – வண்ண நிலவன் வெங்கட் சாமிநாதன் – முழுமையின் தொடக்கம் – அரவிந்தன் நீலகண்டன் மறந்துவிட்டீர்களா – […]

நித்ய சைதன்யா – கவிதைகள்

This entry is part 15 of 24 in the series 1 நவம்பர் 2015

நித்ய சைதன்யா   1.தவம் வழியெங்கும் மலர்களாய் மலர்ந்திருக்கிறது மரணம் சிதறிக்கிடந்த ஒவ்வொரு மலரும் விட்டுச்சென்றுள்ளது சொல்ல மறுத்த பிரியத்தை உள்ளம் பதற சிதையில் உன்னை கிடத்தும் கோலம் கண்டு துக்கித்து நடக்கமுயன்றேன் முன்னால் திறந்து கிடந்தது பாதைகளும் திசைகளும் அற்ற பாழ்வெளி இன்று இம்மண்ணில் இருந்து மறைகிறாய் உன்னைப் புசித்த தானியமாகி பசிதேடி நாளை வருவாய் அதுவரை என் இருப்பு நினைவுகளின் தாழ்வாரத்தில்         2.விசை யாருமற்ற அறைகளில் சதா கேட்டுக்கொண்டே […]

எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்

This entry is part 16 of 24 in the series 1 நவம்பர் 2015

எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )   ஒருங்கிணைப்பு: இலக்கிய அமர்வுகள் :               இளஞ்சேரல் குறும்பட, ஆவணப்பட  அமர்வுகள்:   அமுதன் சுற்றுச்சூழல் அமர்வுகள்          :    சேவ் அலோசியஸ்   இரு தின உணவு, சனி இரவு தங்கல் ( 40 பேருக்கு மட்டும்) விபரங்களுக்கு: கா. ஜோதி ( 90255 26279) பதிவுக்கு     ; subrabharathi@gmail .com ல் மின்னஞ்சல் அனுப்பவும் நுழைவுக்கட்டணம் : ரூ 100 மட்டும்

பூச்சிகள்

This entry is part 17 of 24 in the series 1 நவம்பர் 2015

  கலவரப்பட்ட ஒட்டகம் மாதிரி அந்த அம்மா கத்தியதில் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே ணங்கென்று விழுந்து உடைந்தது. சில்லுகள் காலில் குத்திவிடாமல் தாண்டித் தாண்டி சென்று பார்த்தால் அந்த அம்மா நெற்றியைப் பிடித்தபடி கழிவறையிலிருந்து வந்துகொண்டிருந்தார். என்ன நடந்ததாம்? கழிவறையில் ஒரு கரப்பான் பூச்சி மல்லாந்து கிடந்து கால்களை உதறிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு கத்தி எதிர்ச் சுவற்றில் மோதி நெற்றியைப் பிடித்துக் கொண்டு வருகிறார். அந்தக் கரப்பான் பூச்சியைக் கையில் பொத்தி எடுத்து உயிரோடு வெளியே போட்டுவிட்டேன். […]

மகன்வினையா? அதன்வினையா?

This entry is part 18 of 24 in the series 1 நவம்பர் 2015

மனோன்மணி தேவி அண்ணாமலை விரிவுரைஞர் சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் மலேசியா. முன்னுரை தொல்காப்பியம் தமிழ்ப் பழமை காட்டும் வரலாற்றுச்சுவடி; வருங்காலப் புத்தமிழுக்கு அறிவூட்டும் வழிகாட்டி என்கின்றார் வ.சுப.மாணிக்கனார். இருப்பினும், தொல்காப்பியருக்குப் பின் மொழிவளர்ச்சியால் நிகழ்ந்த மாற்றங்கள், இலக்கண வளர்ச்சி போன்றவை பிற்காலத்தவருக்குத் தொல்காப்பிய நூற்பாக்களுக்குப் பொருள் அறிவதில் இடர்ப்பாட்டை உண்டாக்கின. இந்த இடர்ப்பாட்டினைக் களையும் வகையில் தொல்காப்பிய நூற்பாக்களின் பொருளைத் தெளிவுபடுத்தும் முறையிலும், அதனுள் கூறப்படும் இலக்கணக் கூறுகளை இலக்கிய வழக்கு மேற்கோளைக் கொண்டு விளக்கும் […]