வித்யா ரமணி ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும் வித்யா ரமணி [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் […]
ம.தேவகி பூமிக்கு போர்வையென நீ அளித்த புல்வெளியில் எப்பொழுதும் மகிழ்ந்தாட – உன்னை பிரியாத வரம் வேண்டும் என்றேன் நீ வழங்கினாய் வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்க துவங்கினோம் நாம் புல்வெளியில் என் ஸ்பரிசம் பட்டவுடன் தாய்மடியின் சுகம் உனர்ந்தேன் உனக்கும் அந்நிலைதானே உணர்ச்சி பிரவாகத்தில் கண்ணீர் சொரிகிண்றாயே பனித்துளியாக! இப்பனித்துளிக் கண்ணீரை அவலக்கண்ணீராக்கிக் கொண்டுல்ளோம் நாம் அயல் நாடுகளை கவர்ந்த அந்நாட்டு மன்னர்கள விஷ விதைகளை விதைத்தனர் ஆனால் இன்றோ! தெரிந்தே பயன்படுதுகின்றோம் மானிடர்களே […]
சூர்யா லட்சுமிநாராயணன் ஒரு நிமிடம் முந்தியோ அல்லது ஒரு நமிடம் பிந்தியோ சென்றிருக்கலாமே… இந்த ஒரு துர்சம்பவம் நிகழ்ந்திருக்காதே என்று எல்லோரும் அவரவர் வாழ்வில் விரக்தியின் உச்சத்தில் ஒரு நிமிடமாவது புலம்பியிருப்போம்….. ஆனால் அந்த ஒரு நிமிடநேர மாற்றத்தைக் கூட விரும்பாத ஒருவன், நேரத்திற்கு சென்று சமப்வத்தை சந்திக்க துணிந்த ஒருவன், நேரத்தை கடைபிடிப்பதில் தீவிரவாதியைப் போன்ற ஒருவன் எங்கள் அறையில் இருந்தான். புத்தருக்கு அடுத்தபடியாக முதுகெலும்பு மடங்காமல் உட்காருபவன் காந்தி கிருஷ்ணா மட்டும்தான். ஆனால் அவனது […]
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=dWlNdGaZ0YE http://www.dailymail.co.uk/sciencetech/article-2842299/Cern-scientists-discover-two-new-particles-smashing-protons-shed-new-light-universe.html#v-1315707993001 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுக்கருத் தொடரியக்கம் புரிந்து அணுசக்தி வெளியானது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதல் டியென்ஏ மூலச் சங்கிலி வடித்தது போல் அகில தேச விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றிச் சோதிக்கும் ! கடவுள் துகள் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டதை உறுதிப் படுத்தினர் . ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில் எதிர் எதிரே விரைவாக்கியில் இரு புரோட்டான்கள் மோதி […]
பாண்டித்துரை 1. மேய்ப்பனின் வசைச்சொற்களை திருப்பிவிடத் தெரியாமல் மலை முகட்டிற்கு சென்ற ஆடு கிடை நோக்கித் திரும்புகிறது 2. என்னைச் சுற்றிலும் மிதந்துகொண்டிருக்கும் காற்றில் கலந்துவிட்ட உனதான சொற்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன் தீர்ந்தபாடில்லை உன்மீதான ப்ரியமும் ப்ரியம் கடந்த உன் வன்மமும் பாண்டித்துரை
ருத்ரா (இலக்கிய இயக்குனர் ருத்ரய்யா அவர்களைப் பற்றிய நினவு கூர்தல்) திரைப்படக்கல்லூரியில் சினிமா லென்சை கூர்மைப்படுத்திக்கொண்டு உயிர்ச் சிற்பம் செதுக்க வந்தவர். நடிகர்களிடம் இருந்த தேவையற்ற காக்காய்ப்பொன் மினு மினுப்பை எல்லாம் சுரண்டி விட்டு அந்த ரத்த நாளங்களில் அவர் உளியின் சத்த நாதங்களை துடிக்கச் செய்து வெளிப்படுத்தியவர். ஸ்ரீ ப்ரியா கமல் ரஜனி…. அந்த முக்கோணத்தில் பெண்ணியம் ஆணியம் ஆகிய இரண்டின் இடையே உள்ள அர்த்தபுஷ்டியுள்ள கண்ணியம் பற்றிய முதல் தூரிகைக்கீற்றின் அமரத்துவமான கீறல் வெள்ளித்திரையை […]
– கொஞ்சம் பின் கதை நான் தில்லி வாசியானது, வேடிக்கையாக இருக்கும், 1956-ம் வருடம் டிஸம்பர் மாதம் 30 அல்லது 31-ம் தேதி முதல். இது வருடக் கடைசி மாதக் கடைசி என்ற சுவாரஸ்யத்துக்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். தில்லி வந்த முதலே எனக்கு தில்லி வாழ்வின், அதன் கலைமுகங்களின், அதன் பத்திரிகைகளின் பங்களிப்பு மிக சந்தோஷம் தருவதாக இருந்தது. நான் கண்விழித்ததும், எனக்கான விருப்பங்களை நான் தேர்ந்துகொள்ள உதவியதும், அல்லது நான் என்னை உணர்ந்து என் தேர்ந்த […]
ருத்ரா சன்னலை ஊடுருவிப்பார்க்கிறாய். தூரத்துப்புள்ளியில் ஒரு புள்ளின் துடிப்பு. வானக்கடலில் சிறகுத்துரும்பு. கனவு அப்படித்தான் சிறகடிக்கிறது. அதற்கு காலம் சட்டை மாட்டுவதில்லை. நினவு ரத்த சதையை கழற்றிய நிர்வாணம் அது. சித்தர்கள் உள்ளத்தையே குகையாய் செதுக்கி குடியிருந்தார்களாம். அதில் வெளிச்சம் தெரியும்போது அவர்களே புத்தர்கள். மனிதனுக்கு தனி முயற்சிகள் தேவையில்லை. அவனது கவலைகள் ஆசைகள் பொறாமையில் சுரக்கும் அட்ரீனலின் அமில ஊற்றுகள்… இவை போதும். குகை வெட்டும்.பகை மூளும். குழி வெட்டும். அவனது நாட்கள் எல்லாம் மண் […]
ருத்ரா இ.பரமசிவன் அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக என்னால் முடிந்தது……. தென்னை மரங்கள் தலை சிலுப்பும் அந்த சின்னத்தீவில் எறும்புகளுக்கு கூட நோவும் என்று மயில் பீலிகள் கொண்டு செய்யப்பட துடைப்பம் கொண்டு கூட்டப்படும் புத்த விகாரைகள் அன்பை ஒலிக்கும் அந்த பூமியில் தமிழ் மொழி எலும்புக்குப்பைகளாய் எருவாகிப்போனதற்கு என்னால் முடிந்தது ….. இங்கே காலி டப்பாக்கள் தட்டி கொட்டி விடுதலை கீதம் என்று வீண் ஒலிகளை கிளப்பிக்கொண்டு கிடக்கையில் என்னால் முடிந்தது ….. தேர்தல் கால […]
ராம்ப்ரசாத் பேரண்டம் முப்பரிமாணங்களை கொண்டது. அதனோடு, காலம் நான்காவது பரிமாணமாகிறது. இதை ஸ்பேஸ்டைம் (Spacetime) என்கிறார்கள். இதை ஒரு அலையாக கொண்டோமானால், பேரண்டத்தில் ஈர்ப்பு விசை கொண்ட ஒவ்வொரு வஸ்துவினது ஈர்ப்பு விசையிலும் , அதனருகில் வர நேரும் பிரிதொரு வஸ்துவினால், ஈர்ப்பு விசை அலையில் வேறுபாடு உருவாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஒரு நீச்சல் குளத்தில் யாரேனும் கால் வைத்தாலோ, அல்லது சிறியதாக இலையொன்று விழுந்தாலோ, ஒரு அலை உருவாகும் அல்லவா. அது போல் என்று […]