ஒற்றை ஆளாகப் பரணிலிருந்து பொம்மைப்பெட்டிகளை இறக்கப் போன வருடமே சிரமப்பட்டதை நினைவில் கொண்டு, என்னிடமும் என் தம்பியிடமும் ” போதும் போதும் உங்க பராக்கிரமமெல்லாம். ஓடற காவேரித் தண்ணில லைட் வெளிச்சம் நடுங்கற மாதிரி, பொட்டிய எறக்கிவைக்கிற வரைக்கும் ஒடம்பு முழுக்க நடுங்கித் தவிச்சது ரொம்ப நன்னாயிருந்தது. பொம்மையெல்லாம் பொழைக்குமான்னு பட்ட கவலையெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும் ” என்று சொல்லி எப்போதும் அவளுடன் ஒத்துப்போகாத என் சின்னக்காவையும் பிரச்சனைகளைத் தவிர்க்க எப்போதும் ஆமாம் போடும் என் தர்ம […]