புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு கூட பறைச்சிறகை படபடத்து துடி துடித்துக்காட்டுதையா. உள்ளே நில நடுக்கம் தவிடு பொடி ஆக்கியதில் நான் எங்கே? என் உடல் எங்கே? என் உறுப்புகளும் கழன்றனவே! இதழ் குவிக்கும் ஒரு பக்கம் சொல் அங்கே […]
எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு ( உயிர்மெய் பதிப்பக வெளியீடு, சென்னை ) திருப்பூரில்” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” விருது இன்று தரப்பட்டது. காது கேளாதோர் பள்ளி சார்பில் தரப்பட்டது இவ்விருது… இப்பள்ளி முன்பு நம்மாழ்வார், ஜெயமோகனுக்கும் விருது வழங்கியுள்ளது. புதன் மாலை திருப்பூர் கோதபாளையம் காது கேளாதோர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முருகசாமி பரிசு வழங்கினார், பள்ளி அறக்கட்டளைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காது கேளாத […]
ரஜூலா கப்பல் சிங்கப்பூர் துறைமுகம் வந்துவிட்ட போதிலும் சற்று தொலைவில்தான் நின்றது. கொஞ்ச நேரத்தில் கரையிலிருந்து பல இயந்திரப் படகுகள் கப்பலை நோக்கி விரைந்தன. கப்பலிலிருந்து ஏணிப் படிகள் இறக்கப்பட்டன. படகுகளிலிருந்து சில போர்டர்கள் கப்பலுக்குள் புகுந்தனர். அவர்கள் எங்களுடைய சாமான்களைத் தூக்கிக்கொண்டு பின்தொடரச் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ” நாம் புற மலைக்குப் போகிறோம். ” என்று பக்கத்தில் இருந்த பெரியவர் […]
பெண்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கான சலுகைகளும் சட்டங்களும் இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.. வாரிசு உரிமைச் சட்டம், வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்கொடுமை தடுப்புச்சட்டம்னு ஒரு சில சட்டங்கள் பத்தி ஓரளவு விலாவாரியா தெரிஞ்சிருக்கும். ஆனா பெண் குழந்தை கருவில் இருப்பதிலிருந்தே அரசாங்கம் கொடுக்கும் பலவிதமான சலுகைகளையும் பெண்களுக்கான சட்டங்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம். முதலில் கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையா ஆண் குழந்தையா அப்பிடின்னு ஸ்கேன் செய்து சொல்வதால் […]