எட்டாங்கரை

This entry is part 8 of 8 in the series 13 அக்டோபர் 2024

பாலன் ராமநாதன் “என்ன மாமா கோயில் திருவிழா நெருங்குது ஊர் கூட்டம் போடலாம்ல”என்றான் கணேசன் ஊர்ல நல்லது கெட்டது எல்லாத்துலயும் முதல் ஆளா நிக்கிறவன் கணேசன் .   “சீக்கிரமா போற்றுவோம் மருமகனே” என்றார் துரைப்பாண்டி .துரைப்பாண்டி ஊர் தலைவர் நல்ல மனிதர் பணம் காசு இல்லாட்டாலும் ஊர் மீது பற்று கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். 25 வருடத்துக்கு முன்னாடி நடந்த கம்மா விறகு வெட்டின பிரச்சனையில் ஊருக்காக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்ற வேல்சாமியோடு பையன் அப்பாவைப் […]

கிரிவலம்

This entry is part 6 of 8 in the series 13 அக்டோபர் 2024

கங்காதரன் சுப்ரமணியம் நான் ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் கிரிவலம் போக வேண்டுமென்று. ரொம்ப நாளாக என்றால், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக. போய் அருணாச்சலேஸ்வரனையும், உண்ணாமலையையும் தரிசித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை. என்ன காரணமோ தெரியவில்லை, தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் வேளை வர வேண்டுமே? ஐந்து வருடங்களுக்கு முன், ஒரு சித்ராபவுர்ணமியன்று கிரிவலம் போய் வந்த என் நண்பர், அந்த அனுபவத்தை மெய்சிலிர்ப்புடன் விவரித்திருந்தார். அந்த மலை முழுக்க நிலவொளியில் ஜொலித்து, […]

பைத்தான்

This entry is part 5 of 8 in the series 13 அக்டோபர் 2024

சொற்கீரன் என்னைச்சுற்றிக்கொண்டுஇருக்கிறது.ஆனால் என் உள்ளெலும்புகளைஇன்னும் முறிக்கவில்லை.எனக்குள் ஊர்கிறது.என் மூளைச்செதில்களிலுமாஅது பொந்து வைக்கும்?உள்ளிருந்து ஊசிக்குருவிகளைசிறகடிக்கச்செய்கிறது.என் ஒவ்வொரு மயிர்க்கண்களிலும்வெர்ச்சுவல் பிம்பங்களைசமைத்துக்கொட்டுகிறது.சிந்தனைப்பசிக்குசோறு போட‌இந்த ஆயிரம்பேரலல் யுனிவெர்ஸ் தியரியால்முடியுமா?விஞ்ஞானத்தின் பசியேவிஞ்ஞானத்துக்கு உணவு.ஆனால்இந்த அனக்கொண்டாஎன்னை இன்னும் விழுங்கவில்லை.விழுங்க முடியாதுஅதனுடைய இரையாக‌இருப்பது போய்என்னுடைய இரையேஇப்போது இது தான்.அறிவுக்குஆயிரம் திசைகளிலும்வேர்!

லயப்புரிதலின்கரைதல்

This entry is part [part not set] of 8 in the series 13 அக்டோபர் 2024

ரவி அல்லது முளைத்துக்கிடந்த அறிவுச் செடிகள் வறண்ட நிலமென கொள்ள வைத்தது கொஞ்சம் காகிதக் குப்பைகளை கையில் திணித்து. பிரபஞ்சம் யாவருக்கும் பொதுவென பொருள் கொண்ட பொழுதும் பெரு மதிப்புக் கருணையைக் காணவே இல்லை உதிர்ந்த சொற்களைத்தவிர. மரபணுவில் பொதிந்த மாறிடாத அன்பை இழந்த தருணமொன்றில் சிலையெனத்தான் வாய்த்தது மலர்தலின் உதிர்தலென. நகலென நாற்புறமோடிய பிள்ளையின் குறும்பினை பேருவகையாக ரசித்தபொழுது நோவினையொன்றிக்காக வழிந்தோடும் கண்ணீர் கடந்த வாழ்வில் புதிதினும் புதிதுதாம். யாவினும் வியத்தலாக நோவினையை எப்புறம் காண்கிலும் […]

கனடாவில் மார்க்கம் விவசாயக் கண்காட்சி – 2024

This entry is part [part not set] of 8 in the series 13 அக்டோபர் 2024

குரு அரவிந்தன் சென்ற வாரம் ரொறன்ரோவில் மார்க்கம் விளையாட்டரங்கில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. கனடாவில் கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்துடன் குளிரும் வந்துவிட்டது. மரங்கள் எல்லாம் நிறம் மாறி இலைகளை உதிர்க்கத் தொடங்கி விட்டன. இலை உதிர்க்குமுன் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஒரேன்ச் என்று பலவிதமாக மரங்களின் இலைகள் மாறி இருப்பதைப் பார்ப்பது மிக அழகாக இருக்கும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட காட்சியாகத் தெரியும். இங்கே உள்ள ஊசியிலை […]

கலைந்த கனவு.

This entry is part 2 of 8 in the series 13 அக்டோபர் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                          பனி படர்ந்த  குன்றுகளின் அருகிலிருந்த அடர்ந்த அந்த வனப்பகுதியில் கோபாலனின் கார் விரைந்துகொண்டிருந்தது. பெரிய வேன் ஒன்றும் உடன் வந்தது. வனத்தில் அவரது குலதெய்வக் கோவில் உள்ளது, வருடம் தவறாமல் சொந்தங்களோடு அங்கு வந்து பொங்கல் வைத்து கிடா வெட்டி படையலிடுவது அவரது வழக்கம். அம்மா  இருந்த வரையில் தவறாமல் நினைவூட்டுவாள். தைமாதத்தில் இங்கு வந்து விடுவார்கள். தொண்ணூற்றைந்து  வயது வரை அவளது வழிகாட்டலில் பூஜைகள் நடந்து வந்தது. அவள் […]

நீளும் நீர் சாலை

This entry is part 1 of 8 in the series 13 அக்டோபர் 2024

வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம்   கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு   சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]

கனடா – நடேஸ்வரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்

This entry is part [part not set] of 8 in the series 13 அக்டோபர் 2024

குரு அரவிந்தன் கனடா – காங்கேசந்துறை நடேஸ்வரக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் சென்ற சனிக்கிழமை செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 10 மணியளவில் கனடா ரொறன்ரோவில் உள்ள 1160, ராப்ஸ்கொட் வீதியில் உள்ள தமிழர் செந்தாமரை மண்டபத்தில் இடம் பெற்றது. இந்தப் பொதுக்கூட்டம் நடேஸ்வரக்கல்லூரியின் பழைய மாணவர்களும், சங்கத்தின் காப்பாளர்களுமான திரு. பி.விக்னேஸ்வரன், திரு. குரு அரவிந்தன், திருமதி ராஜி அரசரத்தினம், திரு. முரளிதரன் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது. முதலில் […]