ஜோதிர்லதா கிரிஜா (28.12.1969 ஆனந்த விகடனில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்–இன் “கோபுரமும் பொம்மைகளும்” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) மங்களம் ஜன்னலைத் திறந்து அதனருகே நின்றுகொண்டாள். ஈரத்தலைக்குள் ஊடுருவிய இதமான காற்றின் சிலுசிலுப்பை நுகர்ந்தவாறு அவள் கண்களை மூடிக்கொண்டு நின்றாள். பக்கத்து வீட்டுப் புறக்கடைக் கதவு திறக்கப்பட்ட ஓசையைக் கேட்டு அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். திறக்கப்பட்ட கதவுக்குப் பக்கத்தில் ராமையா நின்றுகொண்டிருந்தான். நுரை வழியும் வாயுடன் தூரிகையால் பல் துலக்கியபடி […]
கடல்புத்திரன் (குறிப்பு : நான் எழுதிய முதல்ச் சிறுகதை இது ! .நேர்த்திக்கடன் வைத்து கோவிலில் நிறைவேற்றுவது போல ,இதை எழுதுற போது, “என் தங்கச்சிக்கு எவ்வளவு தூரம் அதிருஸ்டமிருக்கிறது பார்ப்போம் ? …..”.என்று தாயகம் பத்திரிக்கைக்கு எழுதி, அனுப்பியது, அதுவரையில், இலங்கையில் இருக்கிற போதும் எழுதி அனுப்பி இருக்கிறேன் ஒன்றுமே அச்சிலே வந்திருக்கவில்லை. வருவதாய் இருக்கவில்லை, , என் அதிருஸ்டம் அவ்வளவு தான் என மாய்ந்திருக்கிறேன். அது தான் தங்கச்சி அதிருஸ்டக்காரியா? என சோதித்தது ? […]
திருப்புல்லாணி என்னும் பாண்டியநாட்டு திவ்யதேசம் ராமநாத புரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது. முன்னோர்களுக்கு இங்கு நீர்க்கடன் செய்வ தால் அவர்கள் நற்கதி யடைகிறார்கள் என்ற நம்பிக்கை பரவ லாக உள்ளது.. திருப்புல்லாணிப் பெருமான் மேல் மையல் கொள்கிறாள் பரகாலநாயகி (பரகாலன் என்றழைக்கப் படும் திருமங்கை ஆழ்வார்) பெருமான் தன்னிடம் சொன்னபடி தானே வந்து சேர்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நாயகி ஒரு கட்டத்தில் காத்திருந்தது போதும், வெறுமனே உருகித் தவித் துக் […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம் என் கொல்லைப்புறத்துக் காதலிகள் எழுதிய ஜே.கே.யின் இரண்டாவது கதைத்தொகுதி சமாதானத்தின் கதை. எவரும், நூலின் தலைப்பினைப் பார்த்ததும், “ இது ஏதோ இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் இடையில் வந்த சமாதான காலத்தின் கதையோ..? “ என்றுதான் எண்ணக்கூடும். இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் வீதியிலும் நகரம், கிராமத்திலும் நாம் அன்றாடம் காணக்கூடிய பரிதாபத்துக்குரிய பாத்திரம்தான் அந்த சமாதானம். அத்தகைய […]