பி.கே. சிவகுமார் நமது அமெரிக்கக் குழந்தைகள் (மூன்று பகுதிகள்) – 2022ல் எழுதியது அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை – 2022ல் எழுதியது ஓர் அமெரிக்கக் கனவு – அக்டோபர் 26, 2023ல் எழுதியது மேற்கண்ட ஜெயமோகன் கட்டுரைகள் ஜெயமோகன்.இன் என்கிற அவர் இணையதளத்தில் கிடைக்கின்றன. அக்கட்டுரைகளை முன்வைத்து என் சில சிந்தனைகள்.. **** ஜெயகாந்தன் 2000-ஆம் ஆண்டில் அமெரிக்கா வந்தபோது அவரிடம் அறிவுரை கேட்டார்கள். அமெரிக்காவுக்கு அறிவுரை தர வரவில்லை என்ற ஜெயகாந்தன், இங்கிருக்கிற தமிழர்கள் பிற […]
நான் வேணு. பொது யுகம் ஐயாயிரத்தில் பிறந்து சகல இனநல அரசில் குடிமகனாக உள்ளேன். அந்த சொற்றொடரை எடுத்து விடலாம். மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம். நான் வேணு. இல்லை வாசு. அதுவும் இல்லை. நான் காசி. மாரி. ராஜு. சாமி. என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். பெருந்தேளரசர் ஆட்சி செய்யும் கோகர்மலை சார்ந்த விரிந்து பரந்து நீளும் நிலப்பரப்பில் வசிக்கும் சாதாரண குடிமகன் நான். நான் இருக்கும் நையாண்டி ராஜ்ஜியத்தின் ஏறுமாறும், கோமாளித்தனமும், அராஜகமும் பற்றி […]
குரு அரவிந்தன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அழைப்பின் பெயரில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ரொறன்ரோவிற்குச் சென்ற வாரம் வருகை தந்திருந்தார். சென்ற சனிக்கிழமை 21-10-2023 கனடா இலக்கியத் தோட்டத்தின் ஏற்பாட்டில், மார்க்கம் நகரசபை மண்டபத்தில் ‘தமிழ் இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் அவர் இலக்கிய ஆர்வலர்களுக்கு உரையாற்றினார். கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் எல்லாவற்றையும் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, உரையைக் கேட்கும் ஆர்வத்தில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். […]
ஆர் வத்ஸலா வேகும் வெயில் முட்டை அவிக்கவும் அப்பளம் சுடவும் அதை தாராளமாக உபயோகிக்கலாம் தோன்றுகிறது நல்ல வேளையாக கணவர் மகன் மருமகள் மூவரும் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் வீட்டுக் கடனடைந்தவுடன் நான் விருப்ப ஓய்வு எடுத்தாகி விட்டது பேரக் குழந்தைகளை “வீடியோ கேம்”உடன் ஒரு அறையில் அமுக்கி விட்டேன் சமையல் வாயு தீர்ந்தவுடன் இன்னொன்றுக்கு பதிவு செய்துவிட்டேன் கடன்காரன் இன்னமும் வரவில்லை நேற்று மாலையில் நடைப்பயிற்சி செய்கையில் தெருக்களில் குப்பை கண்டேன் புகைப்படத்துடன் மாநகராட்சிக்கு புகார் செய்தேன் […]
பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், ‘இந்த மரத்தில்தான் நான் சிறகுகள் பெற்றேன்’ என்று தேடி வருவதில்லை. ஆனால் மனிதன்? பிறந்த உடனேயே புலம்பெயர்ந்தாலும்கூட பிறந்தமண்ணைத் தேடிவந்து பார்த்துவிட்டுப்போக ஆசைப்படுகிறான். நான் 70ஐக் கடந்துவிட்டேன். என்னோடு பட்டம் விட்டவர்கள், பம்பரம் குத்தியவர்கள், கிட்டிப்புல்லு ஆடியவர்கள், கோலிக்குண்டு அடித்தவர்கள், குட்டையில் மீன் பிடித்தவர்கள், உதைத்தவர்கள், உதைபட்டவர்கள் […]