தாய்மொழி

This entry is part 10 of 19 in the series 30 அக்டோபர் 2016

இ.பு.ஞானப்பிரகாசன் “ஏய்! என்னடா சொல்ற!… எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” – அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான். “உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… […]

தொடுவானம் 142. தடுமாற்றம்

This entry is part 11 of 19 in the series 30 அக்டோபர் 2016

மாதந்தோறும் அப்பா தவறாமல் பணம் அனுப்புவார். ஆனால் அந்த மாதம் பணம் வரவில்லை. கடிதம் வந்திருந்தது. அதைப் பிரித்துப் படித்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்! ” நான் உனக்கு பணம் அனுப்புவது உன் படிப்புச் செலவுக்காக. அருமைநாதனை உன்னுடன் வைத்துக்கொண்டு  அவனுக்கும் செலவு செய்ய அல்ல. அவன் அங்கு உன்னிடம் இருக்கும்வரை உனக்கு இனி பணம் அனுப்பமாட்டேன்.  ”  என்னும் வரிகள் கண்டு தலை சுற்றியது. அருமைநாதன் வந்தது அப்பாவுக்கு எப்படித் தெரிந்தது? என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. […]

தீபாவளி

This entry is part 12 of 19 in the series 30 அக்டோபர் 2016

பூங்காவனமானது புக்கித்தீமா ஆறு   பூங்காவனம் பாட புள்ளிமயில்கள் ஆட வண்ண மயில்கள் வணங்க அழகு மயில்கள் ஆரத்தி சுற்ற கொள்ளை அழகாய் விரிகிறது – நம் மரபுகளின் திறவுகோலாம் தேக்கா   நகைக்கடை பூக்கடை பலகாரம் பட்டாசு துணிகள் தோரணங்களாய் தேனடைகள் தேக்காவில் தேனீக்கள் மக்கள்   ‘போன தீவாளி மசக்கையோட இந்தத் தீவாளி மகனோட’ கூட்டத்தில் ஒரு மாதின் குரல்   மாங்கன்னு பூத்திருச்சா’ தொலைபேசியில் பூக்கிறார் இன்னொருவர்   உள்ளமெல்லாம் ஹீலியம் உற்சாக […]

”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”

This entry is part 13 of 19 in the series 30 அக்டோபர் 2016

”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்துத் திருமாலால் எங்கும் திருவருள்பெற்[று] இன்புறுவர் எம்பாவாய்”   ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 30-ஆம் பாசுரமான இது இந்நூலின் இறுதிப்பாசுரமாகும். பகவான் வங்கக் கடல் கடைந்த விருத்தாந்தம் இங்கு சொல்லப்படுகிறது. ஆயர்குலச் சிறுமிகளைப் பார்த்துக் கண்ணன் […]

முகில் காடு

This entry is part 14 of 19 in the series 30 அக்டோபர் 2016

  சேயோன் யாழ்வேந்தன்   முன்பெல்லாம் காடு வரைந்தால் அங்கங்கே விலங்குகளை வரைந்துவைப்பான் முகில். ஒருமுறை காட்டுக்குக் கூட்டிப்போனேன் இப்போதெல்லாம் காடு வரைந்தால் அங்கங்கே கட்டடங்களை வரைகிறான்.   seyonyazhvaendhan@gmail.com  

வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு

This entry is part 15 of 19 in the series 30 அக்டோபர் 2016

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்   நிகழ்ச்சி எண் : 162   வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு     நிகழ்ச்சி நெறியாளர் : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை   வரவேற்புரை        :  திரு இரா. வேங்கடபதி இணைச்செயலாளர், இலக்கியச் சோலை   நூல் வெளியிடுபவர் :  திரு கண்மணி குணசேகரன் எழுத்தாளர், விருத்தாசலம்.   நூல் பெறுபவர்      :   […]

செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்

This entry is part 16 of 19 in the series 30 அக்டோபர் 2016

    “விதந்தகு கோடி இன்னல் விளைத்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே…” என்று பாடிய விடுதலை மகத்துவத்தின் யாசகனான மகாகவிஞன் சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கைப் பதிவையும், ஏனைய  பல இசைமேதைகளின்  பதிவுகளையும் கொண்ட ‘Subramanya  Bharathi and other legends of Carnatic music’ எனும் நூல் வெளியீடு கடந்த  22.10.2016  சனிக்கிழமை அன்று  மண்டபம்  நிறைந்த ஆர்வலர்கள்  முன்னிலையில்  இடையிடையே  நூலாசிரியரின்  இன்னிசைச் சமர்ப்பணத்துடன்  மிக நேர்த்தியாக  நடந்தேறியது. வரவேற்புரைகளும், மனமார்ந்த வாழ்த்துரைகளும், […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! செங்குள்ளி விண்மீனை அண்டக்கோள் உருவாக்கும் பண்டைத் தட்டு சுற்றுவதைக் கண்டுபிடித்தார்

This entry is part 17 of 19 in the series 30 அக்டோபர் 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/xOYBWAJ_Eeo https://youtu.be/S4oLvQCcJRg http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A சூரிய குடும்பத்தின் பின்னலில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? அண்டத்தில் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ? நீள் வட்ட வீதியில் கோள்கள் மீள் சுற்றும் நியதி என்ன ? பூமியில் மட்டும் புல்லும், புழுவும், புறாவும் ஆறறிவு மானிடமும் பேரளவில் பெருகிய தென்ன ? அகக்கோள்கள் பாறையாய், புறக்கோள்கள் வாயுவாய் […]

கவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)

This entry is part 18 of 19 in the series 30 அக்டோபர் 2016

  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொம்பூர் குமரேசனின்,’ அப்பாவின் வேட்டி’, கவிதைத் தொகுப்பு குறித்து உரையாற்றினேன். அப்பேச்சின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். ‘நறுமுகை’, சார்பாக ஜெ. ராதாகிருஷ்ணன் நூலினைப் பதிப்பித்திருக்கிறார்.   ’அப்பாவின் வேட்டி’, என்கிற தலைப்பே ஒரு அணுக்கத்தை உண்டு பண்ணுகிறது. ஒப்பீட்டளவில் அம்மாவின் அன்பைப் போல, பொதுவாக அப்பாவின் அன்பு சிலாகித்துப் பேசப்படுவதில்லை. அது ஒரு மழை மறைவுப் பிரதேசம் போல. அம்மாவின் அன்பெனும் பெருமலையின் மறைவில் […]