இந்த வாரம் இப்படி (அக்டோபர் 4, 2020) அகழ் இதழ், மேற்கு வங்க வன்முறைகள், உபி குற்றங்கள், துரைமுருகன்

This entry is part 12 of 12 in the series 4 அக்டோபர் 2020

சின்னக்கருப்பன் அகழ் இதழ் சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் இணைப்பு கிடைக்கப்பட்டு அகழ் இதழை வாசித்தேன். இதழில் “போருக்கு எதிரான அசல் பிரகடனம் – சக்கரவர்த்தியின் கதைகளை முன்வைத்து” என்று சுரேஷ் பிரதீப் எழுதிய கட்டுரை மூலமாகவே சக்கரவர்த்தியின் கதைகளின் களத்தை அறிந்துகொண்டேன். போர்களும் அதன் வலிகளும் மிகப்பெரிய உணர்வுந்தலை அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டவரின் உள்ளத்தில் உருவாகிறது. அங்கிருந்து மிகப்பெரிய இலக்கியங்களும், நேர்மையான பதிவுகளும் உருவாகியிருக்கின்றன. இந்த கால கட்டத்தின் தமிழ் இலக்கியத்தில் உன்னதமான படைப்புகள் […]

தலைமுறை இடைவெளி

This entry is part 10 of 12 in the series 4 அக்டோபர் 2020

எனக்கும் என் மகனுக்குமிடையே அரைநூற்றாண்டு இடைவெளி அப்பா-மகன், குரு-சீடன் இப்படித்தான் நாங்கள் குருவாக அப்பாவாக என்மகன் எங்கள் மல்லிப்பூ உரையாடலில் முட்கள் இருந்ததில்லை கின்னஸ்களில் அவர் வாழ்க்கை கிண்ணத்தில் என் வாழ்க்கை போயிங்கில் அவர் பயணம் பொட்டு வண்டி என்பயணம் அவரின் ரசிகர்கள் மின்மினிகள் என் ரசிகர்கள் மினுக்கட்டான்கள் அவரின் அசைவுகளுக்கு  ஆயிரக்கணக்கில் லைக்குகள் சிதறிய ஒன்றிரண்டே எனக்கு அவர் சம்பளம் கொடுக்கிறார் நான் சம்பளம் பெறுகிறேன் மனங்களால் அவர் மாலை மலர்களால் என் மாலை நான் […]

நம்மாழ்வார் காட்டும் பரமபத தரிசனம்

This entry is part 8 of 12 in the series 4 அக்டோபர் 2020

                                       இன்று பல இடங்களுக்கும் சென்றுவர பலவகையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சந்திரமண்டலம் சென்றுவரக்கூட போக்குவரத்து வசதி வந்துவிட்டது! ககன்யான் செல்லப் பயணிகளுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார் கள்! இந்நிலையில் உலகவாழ்வை நீத்தபின் பரமபதம் சென்று அனுபவிக்கக்கூடிய எம்பெருமானின் வடிவழகையும் மேன்மை யையும்  விமானம், பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமல் தரி சனம் செய்ய வழிகாட்டியிருக்கிறார் நம்மாழ்வார். அவர் கூறு வதைக் கேட்போம் அவர் காட்டும் காட்சியைத் தரிசனம் செய் வோம் வாருங்கள். […]

தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15

This entry is part 9 of 12 in the series 4 அக்டோபர் 2020

  கால தேச வர்த்தமானங்களைக்  கடந்து நிற்பதுதான் இலக்கு என்று இலக்கியம் வளர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சீரிய இலக்கியவாதியின் பார்வை, நட்டு வைத்த மைல்கல் போல அன்றும் அதற்கு அப்புறமும்  தான் முதலில் கொண்ட அபிப்பிராயத்தையே ஒரு சுமையாக முதுகில் ஏற்றிக் கொண்டு, கண் திறந்து பார்க்காத நிரட்சரகுட்சியாக இருப்பதில்லை. மாறுதல்களின் வர்ணஜாலத்தில் மனதைப் பறி கொடுப்பவன்தான் எழுத்தை ஆராதிக்கும் இலக்கியவாதியாக மிளிர்கிறான். கோஷங்கள், கட்சி ஈடுபாடுகள், ஜாதிப் பிரேமை, மேற்கைப் பார்த்துக் கூவும் ‘இச’ வழிபாடுகள் போன்ற பிசுநாரிகளைத் தவிர்த்துக் கலை எழுகிறது. கலைஞனும். ஜானகிராமன் 1982ல் காலமானார். […]

வாங்க, ராணியம்மா!

This entry is part 7 of 12 in the series 4 அக்டோபர் 2020

ஜோதிர்லதா கிரிஜா (23.11.1978 குமுதத்தில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “விடியலின் வருகையிலே” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) மணியின் பார்வை காற்றில் படபடத்துக்கொண்டிருந்த நாள்காட்டியில் பதிந்தது. மே, பதினெட்டு. மே பதினெட்டு? ஆம். மே பதினெட்டு. அவன் வேலைக்கு வந்து சேர்ந்த நாள், இதே போல் ஒரு மே பதினெட்டுதான். பெரிய குளம் … பாதி நாள் பட்டினி. மீதி நாள்களில் அரை வயிற்றுக்குச் சாப்பாடு.  நான்கிலக்கச் சம்பளம் வாங்குகிற அளவுக்கும், கார் வைத்துக்கொள்ளுகிற அளவுக்கும் தன் […]

இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து

This entry is part 6 of 12 in the series 4 அக்டோபர் 2020

                             [எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து] சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, மொழிப்பெயர்ப்பு எனப் பலதுறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர் தோழர் எஸ்ஸார்சி. அவரின் அண்மை வெளியீடு “இன்னும் ஓர் அம்மா” எனும் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் பதினாறு கதைகள் அடங்கி உள்ளன. அவற்றில் முதல் ஒன்பது சிறுகதைகள் அம்மா பற்றி உள்ளன. அம்மாபற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே இருக்கலாம் அன்றோ? ”தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாய் உடன் அணைப்பள்” […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்

This entry is part 5 of 12 in the series 4 அக்டோபர் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ் 27 செப்டம்பர் 2020 அன்று பிரசுரமாகியது. அதன் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: (மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றியவை) அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!  – விக்கி எஸ்.பி.பி. என்னும் H2O – சுரேஷ் கண்ணன் பூப்போலே உன் புன்னகையில்… குமரன் கிருஷ்ணன் இதர கட்டுரைகள்: இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல் – பழனி ஜோதி யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல் – ரா. கிரிதரன் தடுப்பூசியும் முதியோரும் – கடலூர் வாசு யோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனம் – விஜய் சத்தியா மங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை? – கோரா பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2 – ரவி நடராஜன் யார் யார் யார் இது யாரோ? – ரோபோ எழுதிய கட்டுரை – பானுமதி ந. திருப்பரங்குன்றம்- திருக்கோயில் – முனைவர் இராம் பொன்னு செயற்கை நுண்ணறிவு – கோரா வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2 – அ. வெண்ணிலா வாழ்த்து: கமலதேவி: மூன்றாவது தொகுப்பு – பதிப்புக் குழு […]

கவிதைகள்

This entry is part 4 of 12 in the series 4 அக்டோபர் 2020

புஷ்பால ஜெயக்குமார் 1 அவள் சிலையாய் இருந்தால் பொய்யாய் நிறுவுவதை உடைக்கலாம் அறிவதன் பொருட்டு தானாக அது தேர்ந்தெடுத்துகொள்கிறது மறுப்பதற்கு வழியில்லாமல் பிறகு ஒரு இடத்தில் ஒரு கொடி வளர்வதை போல்  அதை பயத்தின் ஆசையோடு தோன்றும் அவளது வாசனை மற்றும் அறிந்து அழிந்துபோன மினுங்கும் நினைவில் விரையமான விருப்பம் உடலை பெரும் ரகசியமாக அவளைபற்றி முன்பே எழுதிவைத்திருந்த மங்கலான வரிகளை நான் படிக்கிறேன் வெவ்வேரான அங்கங்கள் என் நரம்புகளின் தெரிப்பில் காட்சிப்படுத்தப்பட்டன திருடல் தான் கூடுதல் […]

வற்றும் கடல்

This entry is part 3 of 12 in the series 4 அக்டோபர் 2020

கு.அழகர்சாமி ஆர்ப்பரிக்கிறது அது- ஆச்சரியத்தில் ததும்பும் குழந்தையின்  விழிகளில் தளும்பி வழிகிறது அது. அலையலையாய்க்  குழறுகிறது. அதே போல் குழறுகிறது குழந்தையும். என்ன  அது? விடாது வினவுகிறார் தந்தை. உணர்ந்த குழந்தை உச்சரிக்காது திகைக்கிறது. ’கடல்’- கற்பிக்கிறார் தந்தை. வார்த்தை கற்ற குழந்தையின் விழிகளில் வற்றுகிறது கடல். கு.அழகர்சாமி

கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை

This entry is part 11 of 12 in the series 4 அக்டோபர் 2020

  சு.பசுபதி, கனடா   ==============  பத்மஸ்ரீ, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் மண்வாசனை கமழும் கவிதைகளை ரசிகமணி டி.கே.சி. , பேராசிரியர் கல்கி போன்றோர் ரசித்து, அந்த நடையிலேயே தொடர்ந்து எழுதச் சொன்னார்கள் என்பதை நாடு அறியும். அப்படிப்பட்ட மண்மணமும் , தமிழ்மரபின் வளமும்  சேர்ந்த கவிதைத் தொகுப்பே “மருக்கொழுந்து”.  இந்தத் தலைப்பைக் கவிஞர் அவர்களே பல வருடங்களுக்கு முன்பு தன் நூலுக்குத் தேர்ந்தெடுத்தார் என்பதும் தொகுப்புக்கு ஒரு தனிச் சுவையைச் சேர்க்கிறது. இப்போது அவருடைய குடும்பத்தினர் […]