(2) நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன் மிதவை என்னும் நாவலில் தான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வேலை தேடி பம்பாய் வந்த கதையைச் சொல்கிறார். அதில் தான் சந்திக்க நேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வெளி வேஷங்களையும், சாதி உணர்வுகளையும் பற்றி கொஞ்சம் விரிவாகவே எவ்வித தயக்கமின்றி […]
“உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது” மக்கள் கவிஞர் நினைவேந்தல்அன்புடையீர் வணக்கம்! மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்வில் தாங்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் விழைகின்றோம். நாள் : 8/10/2013, செவ்வாய்க்கிழமை நேரம் : இரவு, 7.30 மணி இடம் : 140, சிராங்கூன் சாலையில் உள்ள சூரியா உணவகத்தில் வி ராஜாராம் செயளாலர் மக்கள் கவிஞர் மன்றம் சிங்கப்பூர்
ஊழலின் செயல்பாட்டை இரு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமைப்பு ரீதியில்; மற்றொன்று அன்றாட வாழ்வின் தளத்தில். அமைப்பு சார் ஊழல்கள்(systemic corruption) சமுதாயத்தைச் சீரழிக்கின்றன. பொருளாதாரத்தைப் பாழடிக்கின்றன. அலைக் கற்றை, நிலக்கரி, மணல், நிலம் என்று ஒன்றையும் விட்டு வைக்காமல் இயற்கைத் தாதுப் பொருட்களைச் சுரண்டி இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள் இதனைத் தெளிவாக்குகின்றன. அன்றாட வாழ்வில் நிகழ்த்தப்படும் ஊழல்கள் அமைப்பு சார் ஊழல்கள் போலல்லாமல் மக்களை நேரடியாய்ப் பாதிக்கின்றன. நச்சாய் நச்சரிக்கின்றன. இவை மக்கள் மேல் […]