மென்மையான​ கத்தி

This entry is part 20 of 27 in the series 6 செப்டம்பர் 2015

  சத்யானந்தன்   பேரங்கள் அச்சங்கள் பின்புலமாகாத​ புன்னகை அபூர்வமாகவே தென்படும்   மலர்கள் தேடப்படும் காரணங்களே அவற்றை வணிகப் பண்டமாக்கின​ மலர்கள் புன்னகைப்பதில்லை வாடாமலிருக்கின்றன​ பின் இதழ்கள் நீங்கி விடுதலையாகின்றன​   மென்மையான​ கத்தி என்று ஒன்று இருந்தால் அதைச் சுழற்றி புன்னகைப் பட்டறை நடத்தலாம்   விரைவில் காலாவதியாவதெல்லாம் பூவென்றால் புன்னகையும் ஒரு பூதான்   எவ்வளவு நேரமாகி விட்டது? ‘உன் புன்னகை வன்முறை’ என்று இந்த​ அலுவலக​ வரவேற்பாளரிடம் நான் மானசீகமாகவே கத்த​ […]

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’

This entry is part 21 of 27 in the series 6 செப்டம்பர் 2015

வணக்கம்! நான் முகிலன் என்ற முகுந்தன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047 காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. […]

கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!

This entry is part 22 of 27 in the series 6 செப்டம்பர் 2015

கயல்விழி கார்த்திகேயன்   கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா! மயங்கிப் பாசுரமும் இயற்றினேன், சூடிக்கொடுத்தேன்.. சிலநாளில் நீ விஷமக்கண்ணன் என்றறிந்தேன்.. கோபிகைகள் கொஞ்சினால் கூட என்ன? பாமா கிருஷ்ணனோ? ஆனால் என்ன! கோகுலக்கிருஷ்ணனாம், அனந்தகிருஷ்ணனாம், நந்தகிருஷ்ணனாம்! ஏதானால் என்ன? காதல் குறையாத வரமுண்டு எனக்கென்றிருந்தேன்! ஒரு நன்னாளின் முன்னிரவில் ராதாகிருஷ்ணன் நீயென அறிந்தேன், இதொன்றில் ஆய்ப்பாடிவிட்டு வந்தேன், சூடிய மாலையைத் திருப்பிக் கொடுத்துவிடு ஆழிமழைக் கண்ணா

அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள்

This entry is part 23 of 27 in the series 6 செப்டம்பர் 2015

அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/q3beVhDiyio http://www.biography.com/people/groups/the-wright-brothers https://youtu.be/Wfyvspnko04 https://youtu.be/RLv55FSuyu4 https://youtu.be/dWP7A02tv4U ++++++++++++++++ பறவையைக் கண்டான்! மனிதன் பறந்திட முயன்றான்! மனிதன் தோன்றிய காலம் முதல் பறவைகளைப் போல் தானும் வானில் பறக்க வேண்டும் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகக் கனவு கண்டு, காவியங்கள் எழுதி, காற்றில் பறக்கவும் முயன்றிருக்கிறான். புராண இதிகாசக் காவியங்களில் புஷ்பக விமானங்கள் இருந்ததாக நாம் படித்திருக்கிறோம்! விஞ்ஞானக் கதைகள் எழுதிய பல எழுத்தாளர்கள், ஃபிரான்ஸிஸ் […]

கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்

This entry is part 24 of 27 in the series 6 செப்டம்பர் 2015

அன்புடையீர் வணக்கம் கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மடல் இதனுடன் வருகிறது. இணைப்பில் உள்ளதைத் தாங்களும். தாங்கள் அறிந்த நண்பர்களும் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யவேண்டியது.   தாய்க் கழகமான காரைக்குடி, கம்பன் கழகமும், கிளைக் கழகமான அந்தமான் கம்பன் கழகமும் இணைந்து நடத்தும் கம்பராமாயணப் பன்னாட்டுக் கருத்தரங்கு 2016 அறிவிப்புமடல் நிறுவன அறிமுகம் கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய […]

நிஜங்களைத் தேடியவன்

This entry is part 25 of 27 in the series 6 செப்டம்பர் 2015

தாரமங்கலம் வளவன் நிஜங்களைத் தேடியவன் உறங்குகிறான் என்று இவனின் கல்லறையில் எழுதுங்கள்.. இவனை எழுப்பி கேளுங்கள் காலமெல்லாம் நிஜங்களைத் தேடினாயே கடைசியிலாவது அது கிடைத்ததா என்று..

பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –

This entry is part 26 of 27 in the series 6 செப்டம்பர் 2015

பாவண்ணன் முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன. சீனப்புரட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் தொடர்ந்து அந்நாடுகளில் நிலவிய கடுமையான கண்காணிப்புகளையும் மீறி புரட்சியின் விளைவுகளைப்பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மானுடத்தின் உலராத கண்ணீர்த்தடத்தை அடையாளப்படுத்தியபடி இருக்கின்றன. ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தவைத்த போர்களும் புரட்சிகளும் அதிகாரத்தை அடைந்துவிட்டால் வெற்றியின் வரலாறாக மாறிவிடும். அதிகாரத்துக்கு அடிபணிந்துவிடும்போதோ அல்லது […]