நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்

This entry is part 6 of 37 in the series 18 செப்டம்பர் 2011

சிரித்து  வாழ வேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் வெளியான தொடர் ” நான் நாகேஷ்” என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. நாகேஷ் பேசுவது போலவே அமைந்த இந்த புத்தகத்தை எழுதியவர் எஸ். சந்திர மவுலி.   நாகேஷ் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான ஒரு நடிகர். பொதுவாய் அதிகம் பேட்டி தராத. தன் திரை உலக வாழ்க்கை பற்றி பேசாத இவர் வாழ்க்கை குறித்து புத்தகம் என்பது ஆச்சரியமான விஷயம் தான். புத்தகம் 250 பக்கங்கள் இருந்தாலும் மிக லைட் […]

கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்

This entry is part 5 of 37 in the series 18 செப்டம்பர் 2011

  “இராணுவ ஆட்சியே இங்கு நடைபெறுகிறது. இங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது.”   ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.உதுல் பிரேமரத்னவுக்கு கிளிநொச்சி இராணுவ உயரதிகாரியால் மேற்குறிப்பிடப்பட்டவாறு சொல்லப்பட்டிருந்தது.   அதற்கு அடுத்ததாக யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட மைதானத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளதாக நாம் கேள்வியுற்றோம். சற்குணராஜா எனும் இளைஞனுக்கு இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் தங்கையுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்தே அவருக்கு இம் மாதிரியான துயரமான சம்பவத்துக்கு முகம்கொடுக்க நேர்ந்திருப்பதாக சற்குணராஜாவின் தந்தை ஊடகங்களுக்கு […]

சமனில்லாத வாழ்க்கை

This entry is part 4 of 37 in the series 18 செப்டம்பர் 2011

நான் நெருங்கிப்போகிறேன் அவர்கள் என்னை மதிப்பதில்லை   என்னை நெருங்கியவர்களை நான் நினைப்பதேயில்லை   …..   வலியின் அலைகற்றை சுமந்து வந்த  என் குரலை சலனமில்லாமல் வீசி எறிகிறார்கள் அவர்கள் . அவர்களை பின்தொடர்கிறேன் .. காயங்களை விசிறிவிட என்னை பின்தொடர்கிறவர்களை பொருட்படுத்தாமல்….   என்னிடம் ஏங்கி தவிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தபடி , யாரோ சிலரின் தாழிடப்பட்ட கதவுகளின் வெளியமர்ந்து யாசிக்கிறேன் , பிச்சையாய் பெற அவர்களிடம் ஏதுமில்லை  என தெரிந்திருந்தும் …   நிரம்ப  […]

இரண்டு கூட்டங்கள்

This entry is part 3 of 37 in the series 18 செப்டம்பர் 2011

  வாழ்த்த ஒரு கூட்டம் தூற்ற ஒரு கூட்டமின்றி வாழ்க்கையே இல்லை   அவன் நெருப்பில் எழுதி நீரில் பொட்டு வைப்பான் நுனி நாக்கசைவில் நோபல் வெல்வான் அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   அவன் புன்னகை வீச்சில் வெளிச்சமாகும் இரவு தெறிக்கும் ஒரு சொல்லில் எரியும் கடல்வெளி அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   அவன் பெயரோ கால்வரி பட்டங்களோ மூன்று வரிகள் அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   வரிகளற்ற பட்ஜெட் சாத்தியம் அவனின் […]

இதற்கும் அப்பால்

This entry is part 2 of 37 in the series 18 செப்டம்பர் 2011

  கதவில் பூட்டு தொங்கியது யார் பூட்டியிருப்பார்கள் காலையில் நான் தான் பூட்டினேன் இந்த நாய் நகர்ந்து தொலைக்க கூடாது வாலை மிதித்துவிட்டேன் நல்ல வேளை கடித்து தொலைக்கவில்லை வீட்டில் வைத்தது வைத்தபடி அப்படி அப்படியே இருந்தது கலைத்துப் போட குழந்தையுமில்லை துவைத்துப் போட மனைவியுமில்லை அலமாரியிலிருந்து புஸ்தகங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தேன் தன்னைப் பற்றிச் சிந்திப்பது ஞானத்தை பரிசளிக்கும் ஆனால் ஊர் பைத்தியம் என பட்டம்கட்டிவிடும் வாசலில் பூனை கத்தியது இரவு உணவில் பங்கு […]

தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு

This entry is part 1 of 37 in the series 18 செப்டம்பர் 2011

இப்போது அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது. கவிஞர் ஹெச். ஜி. ரசூலுக்குப் பத்மனாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது. தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோஷியேஷன் முஸ்லிம் ஜமாத் கவிஞர் ரசூலை ஊர்விலக்கம் செய்தது சட்டப்படி ஏற்கப்படக்கூடியதாக இல்லையென்று முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கூறியிருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் இலக்கியவுலகம் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் மத்தியில் தக்கலை அபீமுஅ ஜமாத் உண்டாக்கிய அதிர்வலைகள் இப்போது வெறும் நுரைகளாகப் படிந்துவிட்டன. ஊர்விலக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தில் […]

பேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….

This entry is part 34 of 37 in the series 18 செப்டம்பர் 2011

போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி…. மத்த நாட்டில் நடக்குமா தெரியாது. இதோ, தேவராஜ முதலி தெரு, சென்னையில், அங்கு ரொம்ப நேரமா லோடு அடித்துக் கொண்டிருந்த டிரக்கை எடுக்க சொல்ல, அந்த டிரைவர் முறைத்து பேசியது தொடர்ந்த டிராபிக் காவல் அதிகாரி, லைசன்ஸ் விவரம் பெற்று உடனடியாக தானியங்கி பில் போடும் முறையில் உடனே அபராதம் தயார் செய்ய, அங்கு வந்த கடை முதலாளி, சிங் ஒருவர், காவல் அதிகாரியிடம் அபராதம் […]