கைப்பிடிச் சோறு

This entry is part 11 of 17 in the series 18 செப்டம்பர் 2016

  ஹேமா  பானையில் வெந்துக் கொண்டிருந்த இட்லியின் மணம் நாசியுள் நுழைந்து செரிமான உறுப்புகளை இதமாய் தடவி விட்டது. அத்தோடு சட்டினி தாளிக்கும் ஓசையும் வாசமும் சேர்ந்துக் கொள்ள தன்னிச்சையாய் எச்சில் சுரந்தது.  தாளிப்பில் இன்று உளுத்தம்பருப்பு சேர்க்கவில்லைப் போல! என்னயிருந்தாலும் நான்கு பருப்பைப் போட்டு தாளித்தால் வரும் மணமே அலாதி. கோதாவரிக்கு பசிக்கத் தொடங்கி விட்டது. தலையை வீட்டினுள்ளே நீட்டிப் பார்த்தாள். நீண்ட ரேழி, கூடம், சாப்பாட்டு அறை, இவற்றையெல்லாம் தாண்டி வீட்டின் புழக்கடை தெரிந்தது. […]

கவி நுகர் பொழுது-9 அகிலா

This entry is part 12 of 17 in the series 18 செப்டம்பர் 2016

(கவிஞர் அகிலா எழுதிய, ‘மழையிடம் மௌனங்கள் இல்லை’, கவிதை நூலினை முன்வைத்து) கவிஞர் அகிலாவின், “மழையிடம் மௌனங்கள் இல்லை” , என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப்பினை வழங்கியதற்காக முதலில் என் அன்பும் நன்றியும். நவீன தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதைகளுக்கான பாடுபொருள்கள் மிகுந்த பெரும் பரப்பைக் கொண்டிருக்கின்றனவெனலாம். சமகாலத்தின் வாழ்வியல் சூழல் கொடுக்கிற பல்வேறு பிரத்யேகமான அனுபவங்கள் பயன்பாட்டுப் பொருள்கள் என இதுகாறும் தமிழ்க்கவிதை எதிர் கொள்ளாத பல விஷயங்களைப் பேசுபவையாக இருக்கின்றன. இப்படியான, சமகாலத்தின் […]

கேள்வியும் பதிலும்

This entry is part 13 of 17 in the series 18 செப்டம்பர் 2016

சேலம் எஸ். சிவகுமார்   கேள்வியும் பதிலும் எதிரும் புதிருமாய்க் கால்மேல் கால்போட்டுப் பட்டிமன்றம் நடத்திப் பரிமாறிக்கொண்டக் காலம் – மாள்வது அறியாமல் மயங்கும் மனதுக்கு,   கேள்வியே பதிலாய் மாறிவந்து, சந்தேகக் கடலில் சேற்றைப் பூசிச் சுகமாய்க் குளித்துக் கேள்விக் கணையாய் மாறி நின்றுக் கதவைத் தட்டி மிரட்டும்போது,   இனி, பதிலுக்குப் பதில் கேள்வியே கேட்கும் பதில்கள் என்றும் வேண்டாம், கேள்விகள் மட்டும் போதும் ! ___________________________________

உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்

This entry is part 14 of 17 in the series 18 செப்டம்பர் 2016

  உறவுகளை அன்பால் வகு ஈவு இன்பம் காசால் வகு ஈவு துன்பம் ******** ராட்சசன் நண்பனானால் அவனைவிட நீதான் பலசாலி ********** சிக்கலை நீக்கையில் சில முடிகள் உதிரும் ************** வினாடிகளாகத்தான் கழிகிறது வாழ்க்கை நினைவு கூரப்படுவது சில வினாடிகளே *********** மலரப்போகும் வினாடியை எழுதிவிட்டுத்தான் ஒரு மொட்டு பிறக்கிறது *********** மிதப்பவை ஒருநாள் கரை ஒதுங்கும் ******** ஆயுளுக்கும் தேவையான பிசின் நூலோடுதான் ஒரு சிலந்தி படைக்கப்படுகிறது ******* தன்னை உருவாக்கிய மரத்தையே உருவாக்கமுடியுமென்று […]

சில மருத்துவக் கொடுமைகள்

This entry is part 16 of 17 in the series 18 செப்டம்பர் 2016

  அழகர்சாமி சக்திவேல் மருத்துவம்.. மானிட உலகின் முதற் கணினியை வேதியியல் விரைநீக்கம் செய்தது.. விஷம் கொடுத்துக் கொன்றது.   அறுபது வருடங்கள் கழித்து அந்தக்கணினியிடம் மன்னிப்புக் கேட்டது வெள்ளையர் ஏகாதிபத்தியம்… “குற்றம் செய்யாத உன்னை தண்டித்தோமே” எனக் குமுறினார் ஒரு பிரிட்டிஷ் பிரதமர். விறைப்பாய் நிற்கும் வெள்ளைச்சட்டை அன்று மட்டும் கசங்கிப் போனது.   முடியாளும் மகாராணி எலிசெபத்துக்கு முடியாத சோகமும் கூடவே மானப்பிரச்னையும். என்பதால் மரணத்துக்குப் பின் வழங்கும் மன்னிப்பினை முதற்கணினிக்கு அருளினார். நீதி […]

“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 பத்திரிகையாளன் வருகை

This entry is part 3 of 17 in the series 18 செப்டம்பர் 2016

பொன் குலேந்திரன் -கனடா ஜோன் வைட் (John White), டொராண்டோ கனடாவில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம்மொன்றின் பத்திரிகையாளன். பல நாடுகளின் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை அலசி ஆராயந்து எழுதி விருதுகளையும், பராட்டுக்களைப் பெற்றவர் ஆப்கானிஸ்தான் , பாக்கிஸ்தான் , இரான் , இராக் சீரியா போன்ற நாடுகளுக்குச் சென்று ஆபத்தான நிலையிலும் முக்கியமானவர்களை நேர்கண்டு, அவர்களின் கருத்துக்களை பக்க சார்பற்ற வகையில் எழுதியவர். சிறிலங்காவினது இனக்கலவரங்கள் காரணமாக கனடாவிற்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத் […]