கடல் என் குழந்தை

This entry is part 8 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  கடலைக் கைகளில் தூக்கி வைத்துக் கொள்வேன்.   அடம் பிடிக்காதே என்று அறிவுறுத்துவேன்.   அழுது கொண்டே இருக்காதே என்று சமாதானப்படுத்துவேன்.   நிலாவைப் பார் என்று வேடிக்கை காட்டுவேன்.   அலைகளில் துள்ளித் துள்ளி விளையாடுவது கண்டு ஆனந்திப்பேன்.   ஆகாயச் சட்டை போட்டு விட்டு அழகு பார்ப்பேன்.   தினம் தினம் வீட்டுக்குக் கூட்டி வந்து விடுவேன்.   இரவில் என் கூடப் படுக்க வைத்துக் கொள்வேன்.   தூங்காத கடலைத் தூங்க […]

உயிர்த் தீண்டல்

This entry is part 7 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  மலையுச்சியில் அந்த மங்கைக் குரங்கு மலையடியில் அந்த மன்மதக் குரங்கு   ஒரு நாள் மன்மதன் மலைக்குச் சென்றான் கண்களிலெல்லாம் காதல் பொறியாய் மங்கையிடம் வீழ்ந்தான் மன்மதன்   மலையடியின் சுளைகளையும் கனிகளையும் மங்கையிடம் கொட்டினான் தழைகளால் பந்தல் செய்தான் கொடிகளால் ஊஞ்சல் செய்தான் ராணியானாள்  மங்கை சேவகனானான் மன்மதன்   கருவுற்றாள் மங்கை ஒன்று இரண்டு மூன்று   அடிக்கடி மலையடி செல்லும் மன்மதன் அப்பா முதுகு சொறிவான் அம்மாவுக்குப் பேன் பார்ப்பான் பாட்டி […]

கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

This entry is part 6 of 27 in the series 29 செப்டம்பர் 2013

ப.சுதா,                     முனைவர் பட்ட ஆய்வாளர்,        இலக்கியத்துறை    ,                தமிழ்ப் பல்கலைக்கழகம்,        தஞ்சாவ+ர்-10. மனிதர்களுக்கு இலக்கணம் கூறும்நூல் தொல்காப்பியம். மனிதர்களின் அக வாழ்க்கையை கூறும் நூல் கலித்தொகை. கலித்தொகையில் தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளதென்பதை விளக்குவதே இக்கட்டுரை. முடியுடைவேந்தரும் குறுநில மன்னரும் முதலாமனார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் நாடக நூலாசிரியருக்குப் பொருட்பகுதி பதினாறாகி அடங்கும். அதில் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வருவன எண்வகை […]

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

This entry is part 4 of 27 in the series 29 செப்டம்பர் 2013

    மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு மலட்டு வேப்ப மரத்திடம்   நீவியழித்திடவியலா நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும் நீயொரு மண்பொம்மை   உனது கண் பூச்சி செவி நத்தை கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் உன்னிடமும் வேம்பிடமும் இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன   திசைகளின் காற்று விருட்சத்துக்குள் சுழல்கிறது   தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம் கதை […]

ஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்

This entry is part 3 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  பாவ் தந்தையின் நேரடிப் பார்வையில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டான்.   தந்தையுடன் அதிகாலையில் செய்யும் கஷ்டமான உடற்பயிற்சிகள் உடல் வலியைத் தரும். இருந்தாலும், இருந்த இடத்தின் வனப்பும், காலைச் சூரியனின் மிதமான சூடும், தகதகக்கும் கடலின் எழிலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது.   அந்த நேரங்களையே தன்னுடைய சந்தோஷமான நாட்களாக இன்றும் ஜாக்கி சான் நினைவு கூர்கிறார்.   அதே வீட்டிலேயே, தாய்க்கு உதவி செய்து கொண்டும் தந்தை காய்கறியை வெட்டிக் […]

”தவிக்கும் இடைவெளிகள்”—-சிறுகதைத் தொகுப்பு—–ஆசிரியர்—உஷாதீபன்

This entry is part 2 of 27 in the series 29 செப்டம்பர் 2013

                  செய்யாறு தி.தா.நாராயணன்.                                                                             வெளியீடு—நியூ செஞ்சுரிஹவுஸ்(பி)லிட்.,  விலை-ரூ.85-00                                                                                      41-B-,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,                                                                                 அம்பத்தூர்,                                                                                                                     சென்னை—600 098. போன் –044—26359906.            எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை வாசகர் உலகம் நன்கு அறியும். தொடர்ந்து சிறுகதைகளை ,குறுநாவல்களை ,நாவல்களை,கட்டுரைகளை என்று எழுதும் பன்முகம் கொண்ட திறமையாளர். நான் உணர்ந்த அளவுக்கு இவரது எழுத்துக்கள் ஜாலிக்கானதோ,பொழுதை கொல்லுவதற்கானதோ அல்ல. சிந்திக்க வைக்கும் தரமுள்ளது. இது இவருடைய பத்தாவது சிறுகதைத் தொகுப்பு என்றறிய அ.ப்.ப்.ப்.பா…!..எனக்கு மூச்சு முட்டுகிறது.. ஆமாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறாராம்?. ஒரு சின்ன […]