தால் தர்கா ( பருப்பு )

This entry is part 8 of 8 in the series 30 செப்டம்பர் 2018

தேவையான பொருட்கள் 1 கோப்பை பயத்தம்பருப்பு 3 கோப்பை தண்ணீர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி கொஞ்சம் உப்பு தாளிக்க 2 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் 1 தேக்கரண்டி ஜீரகம் 1 சின்ன வெங்காயம். பொடியாக நறுக்கியது 1 அல்லது 2 காய்ந்த சிவப்பு மிளகாய்கள் கொத்தமல்லி கொஞ்சம் எலுமிச்சை இரண்டு துண்டுகள் செய்முறை ஒரு பெரிய வாணலியில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக கழுவிவிட்டு அதனை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மேலே வரும் நுரையை […]

நரேந்திரன் – வார குறிப்புகள் (செப்டம்பர் 30, 2018) இந்துக்கள், சிலைகள், ஜகதி ஸ்ரீகுமார்

This entry is part 1 of 8 in the series 30 செப்டம்பர் 2018

ஒன்று — இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து இந்திய ஹிந்துக்கள் மூன்றாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். பெரும்பான்மை மதத்தவர்களாக இருந்தாலும் அவர்களது உரிமைகள் மெல்ல, மெல்ல நசுக்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய சிறுபான்மை மதத்தவர்களின் அடிமைகளைப் போலவே இன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி. பெரும்பான்மையினரான ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளைக் கூடச் செய்யவிடாமல் தடுக்கப்படுவது அவர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதியின் உச்சகட்டம் என்றே சொல்லலாம். இதுவரை இந்தியாவை ஆண்ட அத்தனை அரசியல்கட்சிகளும் ‘வாக்குவங்கி’ அரசியலை மட்டுமே […]

தொடுவானம் 242. கிராம வளர்ச்சியில் கல்வி

This entry is part 3 of 8 in the series 30 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 242. கிராம வளர்ச்சியில் கல்வி திருச்சபை புத்துயிர் பெற்று சிறப்புடன் செயல்பட்டது. அதற்குக் காரணம் சபை மக்களிடம் உண்டான விழிப்புணர்வுதான். இது வரை திருச்சபையை யார் ஆண்டால் நமக்கு என்ன என்று இருந்த கிராம சபையினரும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் ஆட்சி புரிகின்றனர் என்பதை உணர்ந்தனர். தங்கள் கிராம ஆலயத்துக்கும் சபை மக்களுக்கும் தேவையானவற்றை இனிமேல் உரிமையுடன் கேட்டு பெறலாம் என்ற நிலை உருவானது. கிராம சபைகளுக்கு உதவ சமூக பொருளாதார வளர்ச்சிக் கழகம் […]

மருத்துவக் கட்டுரை- தட்டம்மை ( MEASLES )

This entry is part 4 of 8 in the series 30 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் தட்டம்மை ஒரு வைரஸ் நோய். இதற்கு ஆர்.என்.ஏ.பேராமிக்ஸோவைரஸ் ( Paramyxovirus ) என்று பெயர். இதற்கு தடுப்பு ஊசி போட்டபின்பு மேலை நாடுகளில் இந்த நோய் வெகுவாக குறைந்துவிட்ட்து. ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் இது இன்னும் அதிகமாகவே உள்ளது. வறுமையும், சுற்றுச் சூழல் சீர்கேடும், தடுப்பு ஊசி போடாமல் இருப்பதாலும் இந்த நிலை காணப்படுகிறது. தடுப்பு ஊசி போட்ட பின்பு வாழ்நாள் முழுதும் இந்த நோய்க்கான எதிர்புச் சக்தி உடலில் இருக்கும் என்பது […]

இராவணன்களே…..

This entry is part 5 of 8 in the series 30 செப்டம்பர் 2018

பிச்சினிக்காடு இளங்கோ அடிப்படையில் அனைவரும் பத்துத்தலையோடுதான் வடிவமைக்கப்படுகிறார்கள் பத்துத்தலையில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள் தலைமுறைக்குத் தேவைப்பட்டார்கள் சிலவற்றில் சிரத்தையும் சிலவற்றைத் தவிர்த்தும் வாழ்ந்தவர்கள் தலைவர்களானார்கள் நமக்குத் தத்துவமானார்கள் தத்துவம் தந்தார்கள் தலைமுறைகள் பேசவேண்டுமானால் உங்கள் கவனம் சில தலைகளில் மட்டுமே இராமராக இராமனே இல்லை ஏனெனில் இராமனே இல்லை தனக்கான தமக்கான பற்றுதலைத் தவிர்த்து மானுடப் பற்றுதலைப் பற்றினால் பற்றுதலால் வரும்வினை பற்றாது இதயங்களிலெல்லாம் உங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் வன்முறைக்கு எதிரான கோபம் வறுமைக்கு எதிரான வேகம் உயிர்கள்மீதான […]

2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்

This entry is part 6 of 8 in the series 30 செப்டம்பர் 2018

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++++ மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்கு மானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைத் துவக்க வேண்டும். தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928] “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவ தில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் […]

வாழ்க நீ எம்மான் வையத்து நாட்டில் எல்லாம்

This entry is part 7 of 8 in the series 30 செப்டம்பர் 2018

[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]   அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14 ++++++++++++++ சத்தியம், சுதந்திரம், சமத்துவம். [காந்தீயக் கோட்பாடு] *********************** காந்தீயக் கோட்பாடு என்ன என்பதை முதலில் நான் விளக்கமாகக் குறிப்பிட  வேண்டும். சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்று கோட்பாடுகளும் பின்னிய தேசம், ஆட்சி, […]

உன்னைக் காண மாட்டேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 2 of 8 in the series 30 செப்டம்பர் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ மீண்டும் உன்னைக் காண நான் விரும்ப வில்லை ! என்னைக் காதலிக்க நீ முன்பே திட்ட மிட்டாய் என்று கேள்விப் பட்டேன் ! புரிய வில்லை எனக்கது ! உன்னைக் காண. ஏன் அழுகிறேன் நான் எந்த காரண மின்றி இரவு வேளை களில் ? தவறானது சரியாக இருக்கலாம் ! நீ சொல்வது என் செவியில் விழுகிறது. மீண்டும் உனைக் காண நான், விரும்ப வில்லை ! […]