கவிதைகள்

This entry is part 10 of 10 in the series 3 செப்டம்பர் 2017

வான்மதி செந்தில்வாணன். மழை நாளொன்றில் நடைவாசல் திண்ணையில்  அமர்ந்தவாறு வேடிக்கை  பார்த்த  எனக்கு சட்டென ஒரு யோசனை . வீட்டிற்குள்  ஓடி சர சரவெனக் காகிதங்களைக் கிழித்து சிறிதும்  பெரிதுமாய் சில கப்பல்கள்  செய்து மிதக்கவிட்டேன் அக் கிடைமட்ட அருவியில். நீரோட்டத்தின் திசையில் ஒன்றையொன்று  விலகி மூழ்கிவிடாமல்  பயணிக்கும் அந்நிகழ்வை விழிகள் விழுங்கிய  அதேநேரம் மிக  அழகாய்  மிதந்துபோனது இதுவரை நான் செய்திடாத ஒரு  கப்பலாய் “நீர்க்குமிழி”. ****************** பள்ளி முடிந்து ஒட்டிய வயிற்றோடு  வீடு திரும்பிய […]

கருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்

This entry is part 2 of 10 in the series 3 செப்டம்பர் 2017

    Posted on September 2, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++   அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! மரணக் கல்லறைகள் ! காலக் குயவனின் களிமண் செங்கல் கருமைப் பிண்டம் ! சிற்பியின் கருமைச் சக்தி குதிரைச் சக்தி ! கவர்ச்சி விசைக்கு எதிராக விலக்கு விசை ! கடவுளின் கைத்திறம், கலைத்திறம் காண்பது மெய்ப்பாடு உணர்வது, […]

கம்பனின்[ல்] மயில்கள் -4

This entry is part 1 of 10 in the series 3 செப்டம்பர் 2017

எஸ் ஜயலட்சுமி இராமனின் தெய்வம்! தூய சிந்தை திரியக் காரணமான இராவணவதம் முடிந்ததும் சிவபெருமான் சொற்படி த்யரதன் போர்க்களம் வருகிறான். இராவணவதம் செய்து தேவர்கள் துயர் தீர்த்த அருமை மகனை ஆரத் தழுவிக் கொள்கிறான். மகிழ்ச்சியில் இராமனிடம் இரு வரங்கள் கேட்கும்படி சொல்கிறான்.  இராமன் என்ன கேட்கிறான்? தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தரும் படி கேட்கிறான். பெற்ற மகனான பரதனோ கைகேயியைப் பாவி என்று பழிக்கிறான். […]

கவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)

This entry is part 3 of 10 in the series 3 செப்டம்பர் 2017

கவிதை என்பது மொழியின் செயல்பாடு மட்டுமன்று; அது மனத்தின் செயல்பாடு. மொழியின் வாயிலாக நிகழ்த்திக்காட்டும் மனத்தின் செயல்பாடு. தன்னை தன்கருத்தை, தன்எண்ணத்தை எழுதிப்பார்க்கிற ஏற்பாடு. அதில் ஒரு கவிஞன் வெளிப்படுவது என்பது தான் அவனின் தனித்துவம். அது,அவன் சார்ந்தது. அவனின் திறன், மொழிவளம் சார்ந்தது. கவிதைப் போக்கின் எண் திசைக் கோணத்தில் எதில் பொருத்திக் கொள்வதென்பது அவனின் உரிமை. கவிதையாக்கத்தின் வாயிலாக சிலர் கொண்டாடக்கூடும். சிலர் நகர்ந்து செல்லக்கூடும். அவரவரின் எதிர்பார்ப்பும் அவாவும் கவிதை பற்றிய முன்முடிவுகளும் […]

மின்மினிகளின் வெளிச்சத்தின் பாதைகள் – கவிஞர் இரா.இரவி

This entry is part 4 of 10 in the series 3 செப்டம்பர் 2017

கவிஞர் இரா.இரவி      ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது.  நட்சத்திரங்கள் நிறைந்த வானம் என்பது எல்லாக் கவிஞர்களும் எழுதுவது.  நூலாசிரியர் கவிஞர் ப. மதியழகன் வித்தியாசமாக சிந்தித்து மிக இயல்பாக கவிதைகள் எழுதி உள்ளார்.  வசன நடையில் பல கவிதைகள் உள்ளன.  வருங்காலத்தில் ஆங்கிலச் சொல் வடசொல் தவிர்த்து எழுதிட வேண்டுகிறேன். கேடயம் !   சிநேகிதர்களுடைய இல்லத்தரசிகளின் கண் பார்த்து பேசுவதை தவிர்த்தே வருகிறேன் அவர்களுடைய மகள் மகன் அங்கிள் என்றழைப்பதை நூலிழை […]

தொடுவானம் 185. கனவில் தோன்றினார் கடவுள்

This entry is part 5 of 10 in the series 3 செப்டம்பர் 2017

          அனைத்து வழிகளும் மூடப்படட நிலை. நான் பெரும் கனவுடன் படித்து முடித்த மருத்துவப் படிப்பு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பயன்படவில்லை. சிங்கப்பூரில் இந்தியப்  பட்டங்கள் அனைத்துமே செல்லாது என்று சட்டம் இயற்றி ஆறு மாதங்கள் ஆகிறது. தேசியச் சேவையில் சேர்ந்தாலும் அங்கு இராணுவ மருத்துவராகப் ( கேப்டன் ) பணியாற்ற முடியாது. மலேசியாவில் என்னுடைய மருத்துவப் பட்டம் அங்கீகரிக்கப்பட்டாலும், நான் சிங்கப்பூரின் குடிமகன் என்ற ஒரே காரணத்தினால் எனக்கு அங்கும் வேலை […]

மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை

This entry is part 6 of 10 in the series 3 செப்டம்பர் 2017

முனைவர் மு.இளங்கோவன் muelangovan@gmail.com   இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிசர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டுக் காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை இதன் ஆசிரியர்; 25/04/1945 இல் பிறந்த இவர், இலங்கை யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் பெயர் சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை – சரஸ்வதி என்பதாகும். இவர் உயர்தரக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். […]

சென்னை தினக் கொண்டாட்டம்

This entry is part 7 of 10 in the series 3 செப்டம்பர் 2017

அன்புடையீர், வணக்கம். இத்துடன் ,வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நிகழவுள்ள சென்னை தினக் கொண்டாட்டம் அழைப்பினை இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர வேண்டுகிறேன் அன்புடன் தமிழ்மணவாளன்

ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்டு 2017

This entry is part 8 of 10 in the series 3 செப்டம்பர் 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்டு 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

காதலி இல்லாத உலகம்.

This entry is part 9 of 10 in the series 3 செப்டம்பர் 2017

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   வீட்டுக் குள்ளே என்னைப் பூட்டி வைப்பாய் ! பகற் பொழுதை நான் பார்க்க அனுமதி தராதே ! இங்கே எப்படி நான் தனிமையில் மறைந்து வாழ்வது ? பிறர் என்ன சொல்கிறார் என்று கவலைப் படேன் ! காதலி இல்லாத உலகில் நான் வாழ விரும்பிலேன். காத்தி ருப்பேன் சில காலம் ! உண்மைக் காதலி வரலாம் ஒருநாள், எப்போ தென்று […]