என்னுடன் கொண்டாடுவாயா?

மதுமிதா

என்னை கருப்பி என்றார்கள்.

என்னை கவிஞர் என்றார்கள்

என்னை பார்ப்பனத்தி என்றார்கள்

என்னை பொம்பளை என்றார்கள்

என்னை நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் கொல்ல முயன்றார்கள்.

இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே சிக்கி தவிக்கிறேன்

விளையும் ஒவ்வொரு மழைத்துளியிலும் என்னை சொல்லிவிட முயற்சிக்கிறேன்

இறங்குகின்ற நகல்களின் இறுக்கமான மூச்சடைப்பில் என்னை தப்பித்துகொள்வதிலும் மீண்டும் சிக்கிகொள்கிறேன்

ஒருநாள் என்னுடன் கொண்டாடுவாயா?

என்னை கொண்டாடுவாயா?

Series Navigationஇந்தியர்களின் முன்னேற்றம்?20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு