ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்


வாலஸ் ஸ்டீவென்ஸ்.
தமிழில். எஸ். ஆல்பர்ட்.

 1. இருபது பனிமலைகளில்
  அசையும் ஒன்று
  கரும்பறவையின் கண்ணே.
 2. மூன்று மனமெனக்கு
  மூன்று கரும்பறவைகள்
  ஒரு மரத்திலிருந்தது போல்
 3. இலையுதிர் காலத்தில்
  கரும்பறவை சுழன்றது
  ஊமைநாடகத்தில்
  ஒரு சிறுபகுதி.
 4. ஒருமனிதனும் ஒருபெண்ணும்
  ஒன்று
  ஒருமனிதனும் ஒருபெண்ணும் ஒருகரும் பறவையும்
  ஒன்று.
 5. நெளிவுகளின் அழகா,
  மறைமுகக் குறிப்புகளின் அழகா-
  கரும்பறவை கீச்சிடும் போதே
  உடன் பிறகா-
 6. நீண்ட ஜன்னலை
  பண்படாத கண்ணாடியால்
  நிறைத்தன பனித்துகள்கள்
  முன்னும் பின்னும்
  அதன் குறுக்கே சென்றது.
  கரும்பறவையின் நிழல்
  கண்டு விவரிக்காத காரணமொன்றினை
  நிழலில் வரைந்தது
  மனநிலை.
 7. ஓ, ஹாடம்-மின் மெலிந்த மனிதர்களே,
  நீங்கள் பொன் பறவைகளைக் கற்பனை செய்வதேன்?
  உங்களுக்கிருக்கும் பெண்களின்
  கால்கசை; சுற்றிநடக்கும்
  கரும்பறவை உங்கள் கண்ணில் படவில்லையா?
 8. பண்பட்ட மொழிகளும்
  தெளிவான கவனந்தருச் சந்தங்களும் எனக்குத் தெரியும், ஆனால்
  என்னறிவில் கரும்பறவை
  அடங்கியிருப்பதும் அறிவேன்.
 9. பார்வைக்கப்பால் கரும்பறவை பறந்தபோது
  பல வட்டங்களில் ஒன்றின்
  வினிம்பைக் குறித்தது.
 10. ஒரு பசுமையொளியில்
  கரும்பறவைகள் பறப்பதைக் காண
  இசைவழகின் தூதரெல்லாம்
  வீச்சிட்டுக் கத்துவர்.
 11. அவன் கனெக்டிக்கட்டைக் கடந்து
  ஒரு கண்ணாடிக் கோச்சில் போனான்.
  ஒரு பயிர் அவனை ஊடுருவியபோது
  ஒருமுறை தன் பரிவாரங்களின் நிழலையே
  கரும்பறவைகளெனத் தவறிக்கண்டான்.
 12. ஆறு அசைந்து கொண்டிருக்க
  கரும்பறவை பறந்து கொண்டிருக்கவேண்டும்.
 13. பிற்பகலெல்லாம் மாலையாயிருந்தது.
  பனிபெய்து கொண்டிருந்தது. இன்னும்
  பனிபெய்யப் போகிறது.
  சீடர் மரக்கிளையில்
  கரும்பறவை அமர்ந்தது.
Series Navigationஎனது யூடூப் சேனல்வெகுண்ட உள்ளங்கள் – 12