சுவர்களின் குறிப்புகளில்…

காடு நிரப்பும் நகரமென

சூரிய எச்சில்
படாத முகட்டோடு
நாகரீகக் குறிப்பெடுக்கும்
பென்னாம் பெரிய வீட்டுக்குள்

தூண்கள் அளவு
கனத்த கதைகளோடு
வாய்வு நிறைத்த வயிறும்
பசிக்கும் மனதோடுமாய்
ஞாபகத் திணறலோடு
மூப்பின் உதிர்வொன்று.

ஜாடைகள்  அப்பிய
முகங்களோடு

தலைமுறை காவும்
நீ…ண்ட  நிழல்கள்
சிரித்த முறைத்த
ஞாபகச் சுவரோடு
வெப்ப மூச்சு
விட்டு விட்டு ஒடுங்க
ஓடி ஒளித்து விளையாடிய
கண்ணாடி மைதானத்து
பல்லிகளும் இல்லாமல்.

காட்டிச் சொல்லும் தடயங்களை
காணாமல் போனவர்கள்
பைகளில் திணித்தவர்கள்
காதுகளோ

நிமிட முட்களோடு  மட்டுமே!!!

ஹேமா(சுவிஸ்)

Series Navigationபூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா ? (கட்டுரை 2)வல்லரசாவோமா..!