புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.

Spread the love

புத்தகப் பார்வை.

கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.
சந்திய பதிப்பகம் 2016 – விலை – 110/=

தமிழ் முஸ்லீம் சமூகத்தின், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை,கீரனூர் ஜாகிர் ராஜா, தனது எழுத்துத் திறமையால், மிக துல்லியமாக தனது சிறுகதைகளின் வழியாக நமக்கு காட்டுகின்றார்.

கொமறு காரியம்.… பள்ளிவாசலில் ஊழியம் செய்து, வயோதிகத்தில், பெண் பிள்ளையை வைத்துக்  கொண்டு, அவர் படும் அவஸ்தையை,  முஸ்ஸிம் மக்களின் கலாச்சார வாடையோடு, கதை உலா வருகின்றது.  அதே நேரத்தில், அந்த பெண் பிள்ளையின்,  மனக்குமறுலையும் வெளிபடுத்தியுள்ளார். அவள் , ஏழ்மையில், தனது இளமையை  கரைத்துக்கொண்டு, கனவிலேயே,  வாழ்க்கையை கடத்துகின்றாள்.

காப்காவின் நண்பனில்....ஒரு இளைஞன் தனது கனவுலகு வாழ்க்கையில் நிஜ வாழ்வின் முரண்களை ஏற்றி, அதில் அவன் வெற்றி பெற்றுவிட்டதாக, வாழ்வை கடத்துகின்றான். முற்றிலும் ஒரு மாறுபட்ட பார்வையில், கதையை நகர்த்துகின்றார்.

கசாப்பின் இதிகாசம்.…கதாசிரியரது நையாண்டி திறமையில், ஒரு பேராசைக்காரனின் முகமூடியை கிழித்துள்ளார். அவர்

சமூகத்தில் நடக்கும் சமூக கொடுமைகளயும், பிராணிகளின் உயிர்வதைக் கொடுமைகளையும், இவரைப்போன்று, தைரியமாக எழுதுகின்றவர் குறைவுதான்.தமிழகத்தில், பக்ரீத் காலங்களில்  ஒட்டகம் படும் அவஸ்தையை, நையாண்டி மேளத்துடன் சதி ர்ஆடுகின்றார். ஒரு தத்துவார்த்த பார்வையும் இதில், மெல்லிய

சரடாக ஓடுகின்றது.

பாவம் இவள் பெயர் பரக்கத்நிஸா  …. முஸ்லிம் சமூகத்தில் நிலவும், ஆண் ஆதிக்க திமி ரையும், அவர்களது அடக்கு முறையும், இலக்கிய நயத்தோடு அணுகியுள்ளார். எழ்மை வாசலில் நிற்கும் பல, திருமணமான, முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை, தலாக் என்ற ஒரு சொல்லில் முடிந்து போவது, எந்த சமூகத்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாத சட்டமாக உள்ளது, ஆனால், இவர்கள், இன்றும் இதை வைத்துக்கொண்டு,

பல பெண்களின், கண்ணீரோடு விளையாடுகின்றனர். இந்து சமூகம், என்றோ, சதி என்ற சமூக விதிகளுக்கு, முற்று புள்ளி வைத்துவிட்டது. ஆனால் இவர்கள் மாறவில்லையே……..

நாச்சியா (கனவில் வாழ்க்கை), மனுஷி, இப்படியாக ,

சினிமா என் சமூகத்தில், நரக்கத்திலிருந்து ஒரு குரல், கலைத்து எழுதிய சித்திரம் போன்று 11 கதைகளின்தொகுப்பாக ,சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஜாகிர் ராஜாவின், உருது கலாச்சாரத்தின் வாடையோடு, தமிழ் முஸ்லீம்களாக வாழும், தமிழக முஸ்லிம் மக்கள் பேச்சு நடையை, இவரது கதைகளில், விரவிக்கிடக்கின்றது.

இது, தமிழ் மொழியின் அகராதியை அகலப்படுத்தும் ,புதிய வரவுகள்.

இரா. ஜெயானந்தன்.

Series Navigationஇரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா