முகநூலில்…

Spread the love

அந்த சமூகமன்றத்தின்

சாதாரண உறுப்பினன் நான்

மக்களுக்காக வாழ்ந்த

மகத்தான தலைவனின்

நினைவுநாள் நிகழ்ச்சிக்கு

மூவாயிரம் திரட்டி

முதியோர் இல்லத்திற்கு

தரும் ஏற்பாடுகள் நடந்தன

நினைவு நாள் அன்று

தலைவர் நிதியளித்தார்

பெற்றுக்கொண்டார் இல்ல நிர்வாகி

நிகழ்ச்சி முடிந்தது

அந்த நிர்வாகியை

நெஞ்சோடு அணைத்து

நிழற்படம் எடுத்தேன்

‘முதியோர் இல்ல

நிதியளிப்பு விழாவில்

நானும் அதன் நிர்வாகியும்’

என்ற வாசகத்துடன்

நிழற்படத்தைப் பதிவிட்டேன்

முகநூலில்

அந்த நிதிதிரட்டில்

எள்மூக்கு கூட என் பங்கில்லை

‘கொடை வாழ்க’

‘கொற்றம் வாழ்க’

கொட்டிக்கொண்டே இருக்கிறது

வாழ்த்துக்கள்

அமீதாம்மாள்

Series Navigationதிருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்ஓடுகிறீர்கள்