மெல்ல இருட்டும்

Spread the love

தங்கம்மூர்த்தி

மெல்ல இருட்டும்
இவ்வேளையில்
உன் நினைவுகள்
ஒரு
நிலவைப்போல்
மேலெழுந்து
குளிர்ந்து ஒளிர்கின்றன.

நிலவின் ஒளி
மெல்லடி வைத்துப்
படர்கையில்

இருள்
நழுவி விலகி
நிலவுக்குப்
பாதையமைக்கிறது

குளிர்ந்த ஒளி
மழையெனப் பொழிந்து
என்னை
முழுவதும்
நனைத்திருந்தது.

அப்போது
பூமியெங்கும்
பூத்திருந்தன
நிலவுகள்.

Series Navigationமணிபர்ஸ்நம்பிக்கைகள் பலவிதம்!