வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3

 (Children of Adam)

ஆத்மாவின் களிப்பு .. !

 

walt-whitman 

 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

 

 

அப்படித்தான் இருக்கும் என்று

நினைப்பேன்

எனக்கு விருப்ப மானவர்

எண்ணிக்கை

போது மானது !

மாலையில் மற்ற நண்பர்கள்

மத்தியில் நின்று

நான் உரையாடுவது

போது மானது !

என்னைச் சுற்றிலும் வந்து

எழில் மேனியர்

புன்னகைத்து

ஆர்வ மோடி ருப்பது

போது மானது !

அவரோடு உலவிக் கொண்டு

அல்லது அவர்களில்

ஒருத்தியைத் தொடுவது,

அல்லது ஒருத்தியின்

கழுத்தைச் சுற்றி மென்மையாய்

ஒரு கணம் கரத்தால்

அணைத்துக் கொள்வது

எவ்விதக் களிப்பு உண்டாக்கும் ?

இதற்கு மேல் நானிச்சைப்

படுவ தில்லை.

 

 

கடலைப் போல் நானதில் நீந்தி

களித்தின் புறுவேன்.

ஆடவர், பெண்டிர் ஒருவரை

ஒருவர்

தேடிப் புரிந்து

நெருங்கி உறவாடுவது

ஒருவகை இன்பம்

தருவது.

ஆண், பெண் தொட்டு

அணைத்துக் கொள்ளும்

உணர்ச்சி,

உடலின் நறுமணம்

உல்லாசம் அளிக்கும்

நமது

ஆத்மா வுக்கும்.

அவை அனைத்துமே

ஆனந்தம் உண்டாக்கும்.

ஆத்மாவுக்கு !

 

 

 

++++++++++++++++++++++

 

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

6.      http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (November 1, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationஅப்பாஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு