கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)

This entry is part 7 of 51 in the series 3 ஜூலை 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“சித்தாந்த மேதை தாந்தே (Dante) என் உதவியின்றி ஆத்மாவின் இருப்பிடத்தைத் தேடிப் போக முடிய வில்லை. ஆன்மாவின் தனிமையை எடுத்துக் காட்டும் மெய்ப்பாட்டைத் தழுவும் உவமைச் சொல் (Metaphor) நான் ! கடவுளின் வினைகளை உறுதிப் படுத்துவதற்குச் சாட்சி நான்.”

கலில் கிப்ரான். (The Goddess of Fantasy)

++++++++++++++
அறிவும், புரிதலும்
++++++++++++++

அறிவும், உலகைப் புரிதலும்
இரு துணைவர் உனக்கு
வாழ்வின் மெய்யான துணைவர்
அறிவு என்பது உனது
சிரத்தில் உள்ள கிரீடம் !
புரிதல் உனக்கு ஊழியன் !
இரண்டும் உனக்கி ருந்தால்
இனித் தேவை யில்லை
எந்தச் செல்வக் களஞ்சியமும் !
உனைப் புரிந்து கொள்ளும் ஒருவன்
உயர்ந்த உறவாளி
சொந்தத் தமையனை விட !
பந்த உறவினர்
உந்தன் மதிப்பை அறியார்
உன்னைப் புரிவதும் இல்லை !
மூடனின் தோழமை
குடி போதையன் உறவுக்கு
ஈடாகும் !

++++++++++++

கல்வி அறிவும் ஞானமும்
கடவுள் கொடுத்தார்
வெகுமதி யாய் உனக்கு !
அந்தத் தெய்வ அருள் விளக்கை
அணைத்து விடாதே !
காரிரு ளான
காமமும், மனிதத் தவறும்
ஞான விளக்கைத்
தானாய் அழித்து விடும் !
ஏனெனில்
அறிவாளி ஒருவன்
மனித இனப் பாதை எல்லாம்
ஒளி விளக்கு ஏற்றுவான் !
ஞான மனிதன்
தீயவருக்குக்
காயத்தை உண்டாக்க முடியும்
ஆயிரம்
மூட நம்பிக்கை கொண்ட
மானிடரை விட !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 27, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)யுவன்-ன் “ஆரவாரக் கானகம்”
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *