This entry is part 26 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

 

முழுப் பூசணிக்காய்கள்

முற்றிலுமாய்

மறைக்கப்படுகின்றன சோற்றுக்குள்..

மீறியும் தெரிந்தால்,

அதை மறைக்க

அறப்போராட்டங்கள்..

திகார் கம்பிகளுக்கும்

தெரியாமல் வெளியே

தவறிழைக்கும் வாரிசுகள்..

ஆணவ அரசியலில்,

அக்கரையில்லாமல் போச்சுது

மக்கள் மீது..

போவது தெரியாததுபோல்

நடிக்கும்

பொம்மை அரசுகள்..

ஊழலை எதிர்ப்பவன்

கோமாளியாக்கப்படும்

கொடூரம்..

எப்போது

எங்கே வெடிக்குமோ என்று

மக்களை

ஏங்கவைத்திடும்

திசைதெரியா

தீவிரவாத அச்சுறுத்தல்..

தெரிந்தே ஏமாறுவோம்

என்ற

தெளிவிலே மக்கள்..

தெரிந்து சொல்-

வந்துவிட்டதா நாம்

வல்லரசாகும் காலம் !

 

     -செண்பக ஜெகதீசன்..

 

Series Navigationசுவர்களின் குறிப்புகளில்…நேரத்தில் மனிதனின் நெடும் பயணம்