கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)

This entry is part 31 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இந்தப் பாலைவன வெளியின்
இரவிலே
நடுங்கும் கடுங்குளிர்
இதயத்தின் இருண்ட கணப்புடன்
இதமாய் உள்ளது
எனக்குள் தூண்டப் பட்டு !
முட்போர் வையில் பூதளம்
மூடப் படட்டும் !
மிருது வான தோட்டம்
இருக்கிற திங்கு !
உட் பொருட்கள் வெடியில்
தெறித்துப் போயின !
கருகிச் சிற்றூர், நகரம் பற்பல
எரிந்து போயின !
என் செவியில் விழந்த செய்தி
எதிர் காலத் துக்கு
இதயத்தில் வேதனை தருவது !
உள்ளூரின் உண்மைச் செய்தி
என்ன வென்றால்
எந்தச் செய்தியும் உண்மை
இல்லை என்பதே !

++++++++++++

நமது நட்பின் நெருக்கம் இதுதான் :
உனது தடத்தை
எங்கெலாம் நீ பதிக்கி றாயோ
என்னிருப்பை உணர்ந்திடு
அங்கெலாம் !
நிமிர்ந்த வண்ணம்
நிற்பேன் உன் நிழலாய் !
இவ்விதக் காதல்
எப்படி என்று சொல் ?
உன் உலகைக் காண்கிறேன்
ஆயினும் நான்
உன்னைக் காண வில்லை
அங்கே !

+++++++++++++

கவிதைக்குள் ஒளிந்துள்ளதைக்
கவனித்து நோக்கு !
அவை தூக்கிச் செல்லும்
புவிக்குப் போக
அனுமதி கொடுப்பாய் !
பின்பற்றிச் செல்
தனியார் சமிக்கை களை !
அரங்க முற்றத்தை விட்டு
அப்புறம் செல்லாது !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 2, 2011)

Series Navigationசாத்திய யன்னல்கள்சிதைவிலும் மலரும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *