நிதர்சனம்

This entry is part 11 of 45 in the series 2 அக்டோபர் 2011

என்ன தான் தங்க கோவில் என்றாலும்
இடிதாங்கி என்னவோ அலுமினியத்திலும்
தாமிரத்திலும் தான் இருக்கிறது.

அ.லெட்சுமணன்

Series Navigationத்வனிஎனது இலக்கிய அனுபவங்கள் – 18 எழுத்தாளர் சந்திப்பு – 5. சி.மணி
author

அ.லெட்சுமணன்

Similar Posts

19 Comments

  1. Avatar
    ஸ்ரீதர் says:

    என்ன தான் முதல் அமைச்சர் என்றாலும் பாதுகாப்பது என்னவோ சாதாரண காவல்காரன் தான்.

    ஸ்ரீதர்

  2. Avatar
    Lakshmanan says:

    என்னதான் ஏசி பஸ் என்றாலும் ஏர்போர்ட்டிலா நிப்பாட்ட முடியும்? பாரிஸ் பஸ் ஸ்டான்ட் தான்

  3. Avatar
    காவ்யா says:

    Whether it is poetry or prose is difficult to say. The message is also quite commonplace. A villager can easily think on these lines. In fact, there r some Tamil proverbs similar to the message here I presume. The message is however interesting: everything has a limitation; or a thing is powerful only in its own place. Muthalaikkuth thanneerilthaan palam. Mudiysudia mannanum mudivil oru pidi man.

  4. Avatar
    Lakshmanan says:

    காவ்யாவின் குற்றச்சாட்டுக்கு பதில்கள்:

    1) கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

    கவிதை என்பதை ஒரு சட்டத்துக்குள் எல்லாம் அடைக்க முடியாது. அது ஒரு உணர்வின் வெளிப்பாடு. 4X4 சட்டத்துக்குள் அதை அடைக்க முயல்வது கடினம்.

    2. கிராமத்து மனிதர்களும் நன்றாக சிந்திக்க கூடியவர்கள் தான். கிராமத்தான் எல்லாம் முட்டாள், அப்படின்னு நினைக்காதீங்க. நான் ஒண்ணும் பெரிய உண்மையை கண்டுபிடிச்சு சொல்லலீங்க.

    3. ”என்னாதான் தங்க விளக்குன்னாலும் ஒரு தூண்டு குச்சி வேணும்” இது தாங்க அந்த பழமொழி.

    தேடிப்பிடித்து என்னுடைய இரண்டு வரியை எந்த விதமான “உள் நோக்கமும் இன்றி” விமர்சித்ததுக்கு நன்றி.

  5. Avatar
    காவ்யா says:

    இதென்ன நீதிமன்றமா அல்லது பஞ்சாயத்தா ? பாவலர்கள் என்ன குற்றவாளிகளா ? வாசகர்கள் என்ன குற்றம் சாட்டுபவர்களா ? காவ்யாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்றெழுதுகிறீர்களே ?

    வாசிப்பவர் தம் கருத்துக்களை சொல்வதாக எடுக்காமல், அக்கவிதை அவருள் என்ன உணர்வுகளை எழுப்பியது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும். உரைநடை வெறும் கருத்துக்களையோ, அல்லது பொருள்களையோ மட்டுமே சொல்வது. உணர்ச்சிகளையும் தொடர்ந்தெழும் சிந்தனைளைக்காகவும் உரைநடை எழுதப்படுவதில்லை. அப்படியே ஒருவர் தன் உணர்ச்சிகளுக்கு அழகிய வடிகாலாக உரைநடையை ஆக்கிவிட்டால் அது வசன கவிதை எனப்படும். பாரதியார் எழுதியிருக்கிறார். உணர்ச்சிகளைத் அழகாக மென்மையாகச் செய்யப் படைக்கப்ட்ட இலக்கிய உறுப்பே கவிதையாகும்.

    இப்படியாக ஒரு வாசகர் ஒரு கவிதையப்படிக்கும்போது தனக்கெழும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எடுத்துச் சொல்லுவதை குற்றச்சாட்டுக்கள் என எடுத்துக்கொண்டு பதில் அளிக்கக்கூடாது. கவிதையெழுதிய பின் கவிஞன் தன் பெட்டிபடுக்கைகளையெடுத்துக்கொண்டு வீடு திரும்ப வேண்டும் லக்சுமணன். அவன் காலிபண்ணியபின் கவிதைக்குச் சொந்தக்காரன் வாசகனே. கவிஞன் போய் வாசகன் வருகிறான். கவிஞன் மூக்கை நுழைத்து அய்யயோ நான் அப்படிச்சொல்லவில்லையே என்று அடம்பிடிக்கக்கூடாது. தன் வீட்டுக்குள்ளேயே அழுது கொள்ளலாம். அப்படியே விமர்சன அரங்கில் நுழைந்தால் தானும் ஒரு வாசகராகத்தான் நுழைய வேண்டும். இதன் பெயர் தமிழிலக்கியத்தில் தற்கிழமை, பிறிதின்கிழமையெனப்படும்.

    இதே திண்ணையில் ஒருவர் எழுதிய கவிதையைத் தூக்கியெழுதியது மட்டுமில்லாமல் என் பதிவிலும் அதைப்போட்டிருக்கிறேன். ஒரு கவிதை படிப்பவருள் உள்ளத்தில் உடனேயே ஒரு சில்லென்ற உணர்வை ஏற்படுத்தும்,. ஒரு தேர்ந்த வாசகனுக்கு முதற்படிப்பிலேயே இது ஒரு தேர்ந்த‌ கவிதை எனப் பொறிதட்டும். .

    கவிதைக்கு வரையறையில்லையென்ற ஒரு கோட்பாட்டை துர்பிரயோகம் பண்ணுவன்: ‘நான் கடைக்குப்போய் கத்தரிக்காய் வாங்கினேன்’ என எழுதிவிட்டு என் கவிதை எப்படியிருக்கிறது என்று கேட்பான். எனவே எந்த ஒரு கோட்பாடும் எல்லைகளுக்குட்பட்டே இருக்கும்.

    நீங்கள் எழுதியது கவிதை இல்லை. வெறும் வசனமே ஒரு கேள்வி வடிவில். அதோ அந்த ரோஜா எவ்வளவு அழகாய் இருக்கிறது? என்பதும் அல்லது இதோ இந்த ரோஜா நாளை வாடிவிடும் என்பதும் வெறும் அங்கலாய்ப்புக்கள். சா\தாரணனுக்கும் வரும் எண்ணங்கள். இதைச் சொல்ல ஒரு கவிதையா ? நான் கிராமத்தான் என்பது கவிதையுணர்வே இல்லாதோரைக் குறிப்பிடும் ஒரு அடையாளமே சிம்பல்.

    கேட்ட கேள்வியைக் கவிதைநயம் இருக்கிறது என்றெடுத்துக்கொண்டால் அதுவும் சிம்பாலிக்காகத்தான் வரும். சிம்பல்ஸ் இல்லாமல் உயர்ந்த கவிதைகளில்லை. உங்கள் ‘கவிதை’க்கு நீங்கள் சொன்ன பொருளும் தவறாகத்தான் படுகிறது. எனக்குத் தோன்றும்பொருள்: எவ்வளவுதான் பெரியது என்றாலும் சிலவேளைகளும் வெகுச்சின்னதன் துணையின்றி இருகக முடியாது. எனவே ‘உருவு கண்டு எள்ளாமை’ வேண்டும் என்பதே நீங்கள் எழுதிய வசன கவிதையின் இறைச்சி. அதைக்கூட ஏன் குழப்புகிறீர்கள் ?

  6. Avatar
    Lakshmanan says:

    1. காவ்யாவின் விமர்சனத்திற்கு என்று தான் இருந்திருக்கவேண்டும். “குற்றச்சாட்டு” தவறான வார்த்தை பிரயோகம்.மன்னிக்கவும்.

    2. அய்யயோ நான் அப்படிச்சொல்லவில்லையே இப்படி சொல்லவில்லையே – அப்படி எல்லாம் நான் அங்கலாய்க்கவே இல்லை.

    3. இது ஒரு மிக மிக சாதாரணமான கருத்து என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். இதை நான் “நான் ஒண்ணும் பெரிய உண்மையை கண்டுபிடிச்சு சொல்லலீங்க.” என்றும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

    ஆனால், மிக மிக சாதாரண கருத்துக்கள் கூட மகாகவிகளால் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    4. நான் என் கவிதைக்கு பொருள் சொல்லவே இல்லை. சொன்னதாக நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

    பாரதி பற்றி தாங்கள் எழுதிய கட்டுரைக்கு நான் எழுதிய ஒரு வரி பின்னூட்டத்திற்காக “இவன் என்ன பெரிதாக கிழித்திருக்கிறான் பார்ப்போம் என்று வரிந்து கட்டிக் கொண்டு என் இரண்டு வரியை தேடிப்பிடித்து விமர்சனம் செய்திருக்கிறீர்கள்”. நீங்கள் என்னைப் பார்த்து சொல்கிறீர்கள் – “விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளா முடியாவிட்டால் எழுதுவதை நிறுத்திக்கொள் என்று” உங்களுக்கு எவ்வளவு அடிச்சாலும் திருப்தியே வரல இல்லை.

    உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பு தாங்க வருது.

  7. Avatar
    GovindGocha says:

    காவ்யா நல்லா செட்டிலாகி இருக்காங்க போல , எங்கு பார்த்தாலும் தாக்குதல் தான்…

  8. Avatar
    GovindGocha says:

    என்னதான் ஏசி பஸ் என்றாலும் ஏர்போர்ட்டிலா நிப்பாட்ட முடியும்? பாரிஸ் பஸ் ஸ்டான்ட் தான்

    – மனது இலேசாகி சிரிக்க முடிந்தது. நன்றி லக்‌ஷ்

  9. Avatar
    காவ்யா says:

    என் இரண்டு வரியை தேடிப்பிடித்து விமர்சனம் செய்திருக்கிறீர்கள்”. //

    Lakshmanan

    தவறான புரிதல். அங்கே எழுதியவர் யாரென்று எனக்கு நினைவில்லை. இங்கே உங்கள் வரிகளைப் பார்த்தவுடன் பட்டென்று மனதிற்கு வந்ததை விமர்சனமாக எழுதினேன். அவ்வளவுதான். இவ்வளவு உணர்ச்சிவசப்படக்கூடாது. இராஜ்திலக்கின் “கரைகிறேன்” என்ற கவிதை சமீபத்தில் திண்ணையில் வெளிவந்தது. அங்கு என் விமர்சனத்தைப்பார்த்துக்கொள்ளவும்.

    பாரதிதாசன் கவிதையைப் பார்ப்ப்னர்களும் பாராட்டினார்கள். அதே வேளையில் அவரின் நாத்திகக்கொள்கை அவர்கள் ஏற்பதில்லை. கொள்கை வேறு கவிதை வேறெனக்கொள்ள்பவனே விமர்சகர்னாக முடியும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார் அண்ணாத்துரை. இல்லையா ?

    நிறைய எழுதுங்கள் உங்கள் திறமையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால். கண்டிப்பாக சிறந்த கவிஞராக மலர வாய்ப்புண்டு. வாழ்த்துகள்.

  10. Avatar
    Lakshmanan says:

    நல்லா சமாளிக்கிறீங்க.

    //தற்கிழமை, பிறிதின்கிழமை,சிம்பல்,இறைச்சி// என்றெல்லாம் அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்பட்டு உங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி தமிழ் பாடம் நடத்திவிட்டு நீ உணர்ச்சி வசப்படக்கூடாது என்று என்னிடம் சொல்கிறீர்கள்.

    பாரதி ஒரு நெருப்பு. அவனை சீண்டாதீர்கள்.

    ”நான் காவ்யாவை விமர்சித்தது பாரதியின் மீது கொண்ட காதலால், காவ்யா என்னை விமர்சித்து என் மீது கொண்ட கோபத்தால்” தான் என்பது எனக்கு கண்டிப்பாக தெரியும்.

    தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    1. Avatar
      காவ்யா says:

      //பாரதி ஒரு நெருப்பு. அவனை சீண்டாதீர்கள்//

      இப்பேச்சு என்னை இருநாட்களுக்கு முன் உச்சனீதிமன்ற மூத்த வழக்குரையர் புஷனைத் தாக்கிய்வர்களையும், அவ்வப்போது மனித உரிமை ஆர்வ்லர்களைத்தாக்கியவர்களையும் நினைவுபடுத்துகிறது. இப்படித்தாக்குவோர் அரைகுறை மனிதர்கள் என்று ஆங்கிலப்பத்திரிக்கைகள் தலையங்கங்கள் எழுதின. தாக்கியவர்கள் இன்று வழக்குக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இளம் வயதிலேயே பலர் இப்படிப்பட்டச் செயலகளைச் செய்கிறார்கள். மாறுபட்ட கருத்துக்களைச் சொல்வோரை – அவை வன்முறையை மக்களிடம் தூண்டாவரையில் – எவரும் வன்முறையாக எதிர்க்காமல், அக்கருத்துக்களுக்கு எதிர்கருத்துக்கள்தான் வைக்கவேண்டும். The Hindu yesterday called it Culture of Intolerance. Lakshmanan s spreading that culture in Thinnai.

      தமிழ் மக்கள் உணர்ச்சிகளைத் தறிகெட்டுவிடும் மக்கள். இன்றைய கல்வியும் கூட பழைய சிந்தனையை மாற்றமறுக்கிறது என்றால் என்ன சொல்ல?

      லட்சுமணன் மிரட்டல் விடுகிறார் அவரது கதாநாயகனின் கவிதையும் ஆளுமையும் கேள்விகள் பல எழுப்புகின்றன. அக்கேள்விகளில் சில நம்மை நோகடிக்கின்றன எப்படி சிவாஜி ஆற்றிய உரை தமிழ் இசுலாமியர்களின் மனங்களை நோகடித்ததோ அப்படி என்று சொன்னால் மிரட்டலா ?

      இதோ பாரதியைச் சீண்டுகிறேன்: சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியார் அந்த பாப்பாவுக்கு (சகுந்தலா பாரதிக்கு) ஏன் ஆச்சாரமானப் பார்ப்பனக்குடும்பத்தில் மாப்பிள்ளைத் (சங்கரன்) தேடி கட்டி வைத்துப்போனார் லட்சுமணன்?

      ஆங்கிலக்கல்வியினால் எப்பயனுமில என்று சொல்லிக்கொண்டவர் ஏன் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரை வைத்துக்கொண்டு ஷெல்லியின் கவிதைத் தொகுப்பை தன் கோர்ட்டுப்பாக்கெட்டில் வைத்துக்கொண்டலந்தார் லட்சுமணன்?

      ஆங்கிலக்கல்வியும் புலமையையும் இருந்தபடியாலேதானே ஆங்கில அறிஞரகளின் கருத்துக்களை நாள் தோறும் மொழிபெயர்த்து சுதேசமித்திரனின் வெளியிட்டார்.

      திமுகவினரும் பாமாகவினரும் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் குழந்தைகளை ஆங்கில வகுப்பிலன்றோ சேர்த்துவிடுகிறார்கள். பாரதியும் அப்படித்தானே ஆங்கில மோகம் கொண்டார். மேனாட்டுக்கலைகள் வளர்கிறதங்கே எட்டெத்திக்கும் சென்றிடுவீர் க்லைச்செல்வங்கள் கொண்டுவாரீர் என்றெல்லாம் சொன்னவர்தானே?

      அப்படியிருக்க எப்படி ஆங்கிலக் கல்வியால் யாதொரு பயனுமில்லை என்று எழுதுகிறார் லட்சுமணன்?

      குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாப்பாவுக்குச் சொன்னவர், ‘ஈனப்பறையர்கள்’ என ஒரு குறிப்பட்ட மக்களை அவமதித்தது ஏன்?

      சாதிகள் இல்லையடி பாப்பா என்று குழந்தையிடம் சொன்னவர்: ‘இங்கு பறையருக்கும் புலையருக்கும் விடுதலை’ என்று சாதிவாரியாகத்தானே சொல்கிறாரே ஏன்?

      ஏன் மக்கள் தங்கள் குலத்தொழிலைச் செய்யின் எல்லாம் நன்றாக இருக்கும் என்று வைதீக மதத்தின் வருணக்கொள்கையைப் பறை சாற்ற வெள்ளைனிறத்தொரு பூனை பாட்டை எழுதினார்.

      சாதிகள் இல்லையென்று சொல்லி விட்டு குலக்கல்வியே சரியென்றத் ஏன் ? இரட்டை வேடமல்லவா லட்சுமணன்?

      Now u can defend your hero.

  11. Avatar
    லெட்சுமணன் says:

    சரீங்க. உங்கள் பாணியிலேயே எதிர்க்கிறேன். வன்முறை எல்லாம் வேண்டாம்.

    1. **// சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியார் அந்த பாப்பாவுக்கு (சகுந்தலா பாரதிக்கு) ஏன் ஆச்சாரமானப் பார்ப்பனக்குடும்பத்தில் மாப்பிள்ளைத் (சங்கரன்) தேடி கட்டி வைத்துப்போனார் லட்சுமணன்?//**

    பாரதிக்கு தன் குடும்பத்தின் மீது எவ்வளவு அக்கறை இருந்தது என்பதை தாங்களே சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். ஒருவேளை பாரதியின் குடும்பத்தார் மாப்பிள்ளை பார்த்திருக்கலாம். பாரதி விரும்பி அந்த திருமணம் நடந்ததா என்பது எனக்கு தெரியவில்லை.

    2. ஆங்கிலம் படிப்பது என்பது வேறு, ஆங்கிலத்தையே பயன்படுத்துவது என்பது வேறு? நீங்கள் கூட பெரும்பாலும் உங்கள் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் தான் இடுகிறீர்கள். நீங்கள் ஆங்கில மோகம் பிடித்தவர் என்று கொள்ளலாமா? உங்களை எல்லாம் யோசித்து தான் அந்த தீர்க்கதரிசி “மெல்ல தமிழ் இனி சாகும்” என்று சொன்னானோ?
    (இதில் தமிழண்ணல் அய்யாவை பற்றி வேறு குறிப்பிடுகிறீர்கள்) பாரதியின் கவிதைகளை வேறு தப்பு தப்பாக எழுதி இருக்கிறீர்கள். (அதைக்கூட நான் பாரதியின் கருத்தை தான் சொன்னேனே தவிர கவிதையை அப்படியே எழுதவில்லை என்று சொல்லிவிடுவீர்கள்.) திமுக, பாமக -வை எல்லாம் பாரதியுடன் ஒப்பிடுபவர்களுடன் ”கை சண்டை” இல்லை “கருத்து சண்டை” போடுவதில் கூட அர்த்தம் இல்லை.

    *//3. சாதிகள் இல்லையடி பாப்பா.//*

    ஒரு கவிதையில் உதாரணம் காட்டி பாடும்போது சில சாதிகளை குறிப்பிட்டு பாடினால், பாரு பாரதி வருணாசிரமத்தை கடை பிடித்திருக்கிறான் என்கிறீர்கள். உங்களைப் பற்றி பாடினால் உங்கள் பெயரை சொல்லாமல் “சிம்பல்ஸ்” ஆக தான் பாட வேண்டும் போல இருக்கு.

    *****************************
    பாரதிக் கல்வி – வி மோகனரங்கன்
    *****************************

    கண் என்பது கண் திறக்கும் அறிவேயாகும். பாரதி ஒரு கல்வி பாரதியைப் புரிந்து கொண்டால் பல விஷயங்களை நாம் புரிந்து கொண்டால் தான் பாரதியைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. பாடலாசிரியன்,கவிஞன்,கட்டுரையாளன் பத்திரிக்கையாளன் கதை சொல்லி என்பதையெல்லாம் மீறி அவனுடைய உள்ளியல்பில் சிந்தனையாளன் என்ற பரிமாணத்தை உன்னிப்பான அவதாகத்திற்கு இந்நூல் கொணர்கிறது. உணர்ச்சி மயமாக கனவுகளில் திரிதருவோன் என்ற வழக்கமான பிடித்து வைத்த எண்ணத்திலிருந்து நாம் மாற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்நூல். யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, கடந்த காலத்தின் நன்மைகளில் எதுவும் சேதாரம் ஆகாமல், நாட்டின் நலந்திகழ் எதிர்காலம் நனவாக வேண்டும் என்று கனவு கண்டவன் பாரதி என்று நிறுவுவது இந்நூலின் பயன்.

    பி.கு: தாங்கள் குறிப்பிட்ட இராஜ் திலக்கின் ”கரைகிறேன்” கவிதையையும், பின்னூட்டதையும் படித்தேன். “யாரோ” தான் விமர்சித்திருக்கிறார்கள். தாங்களின் விமர்சனம் எதையும் காணோம்.

  12. Avatar
    காவ்யா says:

    2. ஆங்கிலம் படிப்பது என்பது வேறு, ஆங்கிலத்தையே பயன்படுத்துவது என்பது வேறு? நீங்கள் கூட பெரும்பாலும் உங்கள் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் தான் இடுகிறீர்கள். நீங்கள் ஆங்கில மோகம் பிடித்தவர் என்று கொள்ளலாமா? உங்களை எல்லாம் யோசித்து தான் அந்த தீர்க்கதரிசி “மெல்ல தமிழ் இனி சாகும்” என்று சொன்னானோ?//

    லட்சுமணன்

    மெல்லத் தமிழ் இனி சாகும் என்று ஒரு பேதை சொன்னான் என்னிடம் என்றுதான் பாரதியார் எழுதுகிறார். பாரதியைப்பற்றி விவாதததில் இப்படி பிழை போட்டு பாரதியாருக்குத் தமிழ் விரோதி என்ற பட்டத்தைத் தருவது சரிதானா ?

    எனக்கு ஆங்கில மோகம் அதிகம். True.

  13. Avatar
    காவ்யா says:

    ஒரு கவிதையில் உதாரணம் காட்டி பாடும்போது சில சாதிகளை குறிப்பிட்டு பாடினால், பாரு பாரதி வருணாசிரமத்தை கடை பிடித்திருக்கிறான் என்கிறீர்கள். உங்களைப் பற்றி பாடினால் உங்கள் பெயரை சொல்லாமல் “சிம்பல்ஸ்” ஆக தான் பாட வேண்டும் போல இருக்கு//

    லட்சுமணன்

    உங்களுக்குப் பாரதியாரைப்பற்றித் தெரியவில்லை. கவிதைகளில் காணும் பாரதியும் கட்டுரைகளில் காணும் பாரதியும் ஒரு மனிதனின் இரு முகங்களைக்காட்டுகின்றன. கவிதைகளில் ஒரு சிலவற்றைத்தவிர மற்றவைகளை எல்லாரும் படிக்கலாம். அந்த ஒரு சில தவிர்க்கப்படவேண்டும். அதிலொன்றுதான் வெள்ளை நிறத்தொரு பூனை.

    போகட்டும். பாரதியாரின் கட்டுரைகள் இந்துத்வத்தையே பறை சாற்றுகின்றன. அவரின் மதம் வைதீக இந்து மதம். அதன் அடிப்படைக்கொள்கைகளை ஏற்றுப் போற்றுகிறார். வருணாஷ்ராதர்மம் அவர் போற்றுகிறார். அதை விளக்கவே அப்பூனைப்பாட்டு.

    ஒன்று நினைவில் கொள்ளுங்கள். சனாதன வாதிகள் வருணாசிரத்தைச்சரியென்கிறார்கள். அது நல்லது சமூகத்துக்கு. அதனால் நன்மையே விளைந்தது. இந்து மதத்துவேசிகள் வேண்டுமென்றே அதற்கெதிரான பிரச்சாரம் பண்ணிணார்கள். மிசுனோரிகளும் செய்து மதமாற்ற்த்துக்கு முயன்றார்கள். என்பதுதான் வைதீக இந்துமத வாதிகள், மற்றும் இந்துத்வாவினரின் பேச்சாகும். பாரதியார் கட்டுரைகள் இதை வழிமொழிகின்றன.

    அதே இந்துத்வாவினர், வருணம் வேறு, சாதிகள் வேறு என்று விளக்குகின்றார்கள். சாதிகள் வைதீக இந்துமதத்தில் இல்லயென்றும், வருணங்களே உண்டென்றனவும், சாதிகள் பிற்காலத்திலேயே பிறரால் உருவாக்கப்பட்டவையென்றும் சொல்கிறார்கள்.

    பாரதியார் வைதீக மதத்தினரின் பல குணங்களைச் சாடினாலும் குறிப்பாக அவர்களின் ஆச்சாரங்களை, அவர்களின் மதத்தைச்சுரண்டி தம்மை வாழ வைத்துக்கொள்ளலை, மதத்தில் சொன்னவண்ணம் வாழாமை இன்னபிற‌. ஆனால் எப்போதும் அவர் வருணக்கொள்கையை அவர் சாடவில்லை. அவர் சாடுவது சாதிகளை மட்டும்தான். அவர் இந்துத்வாவினர் சொல்லும் அதே கொள்கைப்பிடிப்பை – அதாவது சாதிகள் வேறு. வருணங்கள் வேறு என்பதை இவரும் ஓங்கி உரைக்கிறார்.

    பிராமணர்களை அவர் சாடும் காரணம் பிராமணர்கள் பிராமணீயத்தை விட்டுவிட்டதனாலே நிலைகுலைந்தார்கள் என்று அவர் கருதுவதால். அக்கால பிராமணர்களைப் போல இக்காலப்பிராமணர்களும் ஆக வேண்டும் என்று அவர் நினைத்த்படியாலே,

    “முன்னாளில் பார்ப்ப்னரெல்லாம் வேதமோதுவார்.
    மும்மாறி பொழியுமாடா வானம்.
    இன்ன்நாளில் ஏதும் செய்வார்/ காசபெறப்பார்ப்பார் ” என்று பெருத்த மனவேதனையுடன் அரற்றுகிறார்.

    இந்தப்பேச்சு, இந்துதுவாதிகளுக்கும், சனாதனவ்வாதிகளுக்கும் இனிக்கும் சிந்தனை. ஆனால மற்றவருக்கு இஃதொரு பழையகாலத்துச் சிந்தனை. மூட நம்பிக்கையென்றும் சொல்வர். பார்ப்ப்னர் வேதமோதி விட்டால் இந்தியாவில் எல்லாருக்கும் எல்லாம் கிடைத்துவிடாது. ஏழை ஏழைதான். பணக்காரன் பணக்காரன். மேற்சாதி மேற்சாதிதான். கீழ்ச்சாதி கீழ்ச்சாதிதான். இதையறிய விழையவில்லை பாரதியார். ஏன் ? அதற்கு ஆராயும் மனப்பாங்கு இருக்க்வேண்டும். பாரதியைச் சினிமா நாயகனாகப்பார்த்து கட அவுட் பாலாபிசேகம் செய்யும் மனமிருப்போர் வெறும் ஹீரோ வர்சிப்புதான் பண்ணுவார்.

    ஒரு சில விடயங்களில் பாரதியார் முற்போக்குச் சிந்தனையுடைவராகக் காணப்பட்டாலும் பல விடயங்களில் அவர் ஒரு பழைமை வாதியே. ஆனால், வளர, வளர பழைய சிந்தனைகளிலும் மாற்றம் வர ஆரம்பித்தது; ஆனால் அதற்குள் ‘காலா இங்கே வாடா. உன்னைக்காலால் உதைக்கிறேன்’ என்றவரை காலன் அள்ளிக்கொண்டுபோய்விட்டான்.

    இப்படி ஏராளம் சொல்லலாம. பல கட்டுரைகள் வேண்டும்.

  14. Avatar
    லெட்சுமணன் says:

    இன்றொரு சொல்லினைக் கேட்டேன்
    ஏது செய்வேன் எனதருமை மக்காள்
    கொன்றிடல் போலொரு வார்த்தை
    இன்று கூறத்தகாதவன் கூறினான் கண்டீர்

    புத்தம் புதிய கலைகள் பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
    மெத்த வளருது மேற்கே அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

    சொல்லவும் கூடுவ தில்லை அவை
    சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை
    மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை ஒங்கும்

    என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ
    இந்த வசைமொழி எனக் கெய்திடலாமோ
    சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

    என்று அந்த பேதை உரைத்தான் என்றால், அது பாரதியின் கருத்து இல்லையா???????

  15. Avatar
    லெட்சுமணன் says:

    ”ஈனப்பறையர்கள்” என்று பாரதி குறிப்பிட்டு இருக்கிறானே என்றால், மற்றவர்கள் கூறுவதை பாரதி பிரதிபலிக்கிறான் என்றுதான் அர்த்தமே தவிர, பாரதி ஒரு குலத்தை இழிவு படுத்திவிட்டான் என்று எப்படி பொருள் கொள்ள முடியும்?

    ”இங்கு தீய புலையருக்கும்” என்பதில் ”இங்கு” என்பதன் அர்த்தம் நான் சொல்லி உங்களுக்கு விளங்க வேண்டியதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *