கவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்

This entry is part 19 of 35 in the series 11 மார்ச் 2012

கருப்பையன்
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்)
தமிழாய்வுத் துறை,
மா. மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை

திராவிட இயக்கம் தன்னோடு கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்துவந்தது. குறிக்கத்தக்கவகையில் எழுச்சி மிக்கக் கவிஞர்கள் மிகப் பலர் தோன்றி இயக்கத்தையும், தமிழையும், தமிழ் உணர்வையும் வளர்த்துவந்தனர். பாவேந்தர் பாரதிதாசன் முதலாகப் பல கவிஞர்கள் இவ்வியக்கத்தின் வழியாக வெளிவந்தார்கள். அவர்களில் குறிக்கத்தக்க கவிஞர் முடியரசனார் ஆவார். இவரின் கவிதை ஆற்றல் தமிழுக்கு, தமிழ உணர்விற்கு உயிரும் ஊட்டமும் அளித்தது. அவர் பற்றி அறிமுகத்தை இக்கட்டுரை அளிக்கின்றது.

கவிஞர் முடியரசனின் இயற்பெயர் துரைராசு என்பதாகும். இவர் ஆயரத்துத் தொள்ளாயிரத்து இருபதாம் ஆண்டு, அக்டோபர் மாதம், ஏழாம்தேதி பிறந்தார். இவரின் பெற்றோர் சுப்பராயலு, சீதாலட்சமி ஆகியோர் ஆவர். இவரின் பிறந்தஊர் மதுரை மாவட்டம் பெரியகுளம் ஆகும். இவர் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் தன்னுடைய தமிழ் இலக்கிய இலக்கணக் கல்வியைக் கற்று வித்துவான் பட்டம் பெற்றார். இதன்தொடர்வாக இவர் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இவர் தன் முதல் படைப்பினை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டு படைத்தார். இவரின் கவிதைகள் முன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவைதவிர
காவியப்பாவவை (1955) ,
கவியரங்கில் முடியரசன் (1960) ,
பாடுங்குயில் (1983),
நெஞ்சு பொறுக்கவில்லையே (1985) ,
மனிதனைத் தடுகிறேன் (1986) ,
தமிழ்வழிபாடு (1997) ,
தமிழ்முழக்கம் (1999),
ஞாயிறும் திங்களும்(1999),
நெஞ்சிற் பூத்தவை(1999) ,
தாய்மொழி காப்போம்,
புதியதோர் விதி செய்வோம்,
வள்ளுவர் கோட்டம்,
மனிதரைக் கண்டுகொண்டேன்

ஆகியன இவரின் கவிதைப்படைப்புகள் ஆகும். இவரின் காவியப் படைப்புகள் பின்வருமாறு.
காவியம்
பூங்கொடி(1964) ,
வீரகாவியம் (1970) ,
ஊன்றுகோல் (1983)

மற்ற பிற படைப்புகள்
கடித இலக்கியம்:
அன்புள்ள பாண்டியனுக்கு ,
இளவரசனுக்கு
கட்டுரைத் தொகுதி
எப்படி வளரும் தமிழ்?
சிறுகதைத்தொகுதி
எக்கோவின் காதல்
வாழ்க்கை வரலாறு
சீர்த்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்
தன்வரலாறு
பாட்டுப்பறவையின் வாழ்க்கைப் பயணம்

இவர் பெற்ற பெருமைகள் பின்வருமாறு
இவர் `திராவிட நாட்டின் வானம் பாடி’ (1957) என்று அறிஞர் அண்ணாவால் பட்டம் சூட்டப்பட்டவர்.

மேலும் இவர் கவியரசு(1966), கவிப்பெருங்கோ(1980), தமிழ்ச்சான்றோர் விருது (1983), கலைஞர் விருது (1988), பாவேந்தர் விருது(1987), பொற்கிழி (1993), இந்திராணி இலக்கியப்பரிசு (1993), இராணா இலக்கிய விருது(1994), கலைமாமணி விருது (1998), போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் இரண்டிற்குத் தமிழக அரசு பொற்கிழி வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தன்மான இயக்கத்தில் தம்மை 1940 ஆம் ஆண்டு முதலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவ்வாண்டு முதல் தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு கொண்டவர். கலப்புத் திருமணம் செய்து கொண்டு தன் துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். பாவேந்தர், வாணிதாசன், மயிலை சிவமுத்து, திரு.வி.க. குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழ்ச்சான்றோர்களது அன்புக்குப் பாத்திரமானவர். இடர்ப்பாடுகளும் இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் வாழ்ந்தவர்.

Series Navigationமெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை“அவர் அப்படித்தான்…”
author

கருப்பையன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *